ரேஷன் கடையில் வழங்குவதால் செங்கரும்புக்கு கிராக்கி; திடீர் விலை உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடையில் வழங்குவதால் செங்கரும்புக்கு கிராக்கி; திடீர் விலை உயர்வு

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் விலையில்லா கரும்பு வழங்கப்படுவதால், செங்கரும்பு விலை திடீரென உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், பொங்கல் பண்டிகையை யொட்டி, இரண்டு அடி நீளம் கரும்பு வழங்க வேண்டும் என, முதல்வர் பழனி சாமி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, கூட்டுறவு துறை மூலம், விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனால், செங்கரும்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, செங்கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்படுவதில்லை. ஈரோடு மாவட்டம் சிவகிரி, கொடுமுடி, ஊஞ்சலூர், தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, மதுரை மாவட்டம், மேலூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் ஆகிய பகுதிகளிலிருந்து, கரூர் மாவட்டத்துக்கு, செங்கரும்பு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு, 10 கரும்பு கொண்ட ஒரு கட்டு, 400 முதல், 500 ரூபாய் வரை விற்றது. ஆனால், நடப்பாண்டு ஒரு கட்டு, 600 முதல், 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கரும்பு, 60 ரூபாய் வரை விற்பனையாகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை