அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : ஜன 14, 2018
Advertisement

தள்ளுவண்டிகளால் சாலையில் நெரிசல்: கரூர் பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள், பின்புற வழியாக வெளியே செல்கின்றன. ஆனால், அந்த சாலையில் ஏராளமான தள்ளுவண்டிகள் நிறுத்தப்பட்டு, வியாபாரம் செய்கின்றனர். இதனால், பஸ்களை இயக்க முடியாமல், ஓட்டுனர்கள் தட்டுத் தடுமாறி செல்லும் நிலை உள்ளது. அடிக்கடி போக்கு வரத்து நெரிசல், விபத்து ஏற்படுகிறது. பஸ் செல்லும் பாதையில் உள்ள தள்ளுவண்டி கடைகளை போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் ஒழுங்குபடுத்த வேண்டும்.

சாலையோரம் குப்பை அகற்ற வேண்டும்: கரூர் அருகே, புலியூர் பிரதான சாலையில், கடந்த சில நாட்களாக அதிகளவில் குப்பை தேங்கியுள்ளது. இதை அகற்றாததால், அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. சிலர் குப்பையில் தீ வைப்பதால், அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால், சாலை வழியாக செல்ல முடியாமல் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். குப்பையை நாள்தோறும் முறையாக அகற்ற வேண்டும்.

அதிகபாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள்: கரூர் அருகே, தான்தோன்றிமலை பகுதிகளில், சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச் செல்வது அதிகரித்துள்ளது. இதனால், வாகனங்கள் விபத்தில் சிக்கி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக, மணல் லாரிகள் அதிகம் செல்லும், திருச்சி மற்றும் கோவை, ஈரோடு சாலைகளில், வாகனங்களில் சரக்குகளை மட்டு மல்ல, ஆட்களையும் ஏற்றிச் செல்கின்றனர். இதையும் போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வதில்லை. அதிகபாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

நோ பார்க்கிங்கில் நிறுத்துவதால் அவதி: கரூர் மனோகரா கார்னரில், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, நோ-பார்க்கிங் பகுதிகளை போக்குவரத்து போலீசார் அறிவித்து அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளனர். ஆனால், அந்த பகுதியில் தொடர்ந்து வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், மனோகரா கார்னர் மற்றும் ஜவஹர் பஜார் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவியர் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

காட்சிப் பொருளான குடிநீர் தொட்டி: கரூர் அடுத்த, புலியூர் அரசுப் பள்ளி அருகே, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக போர்வெல் அமைக்கப் பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில், அப்பகுதி மக்கள் தண்ணீர் பிடித்து வருகின்றனர். இந்நிலையில், சின்டெக்ஸ் தொட்டி தற்போது சேதமடைந்துள்ளது. இதனால், மக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது மேலும், ஆழ்துளை குழாயில் தண்ணீர் வர நீண்ட நேரமாகிறது. குழாயை சீரமைத்து, சின்டெக்ஸ் தொட்டியை மாற்றணும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை