பொங்கல் பண்டிகை சிறப்பு கோலப்போட்டி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை சிறப்பு கோலப்போட்டி

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து அலுவலகம் முன், பொது மக்களுக்கு புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோலப் போட்டி நடந்தது. போட்டிகளை, கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் சேகர் துவக்கி வைத்தார். புகையில்லா பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் குறித்து, மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், இக் கோலப் போட்டி நடந்தது. இதில், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, பல வகையான வண்ணக் கோலங்கள் போட்டனர். சிறந்த கோலம் போட்ட பெண்களுக்கு, டவுன் பஞ்சாயத்து சார்பில், பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், புகையில்லாத வகையில் பொங்கல் பண்டிகை கொண்டாட, மக்களிடம் வலியுறுத்தப்பட்டது. கோலப்போட்டியை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை