சந்திரகிரகணம் முன்னிட்டு தைப்பூச தேரோட்ட நேரம் மாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சந்திரகிரகணம் முன்னிட்டு தைப்பூச தேரோட்ட நேரம் மாற்றம்

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: பாலமலை பாலசுப்பிரமணி கோவிலில், தைப் பூச தேரோட்ட நேரம், சந்திர கிரகணம் காரணமாக மாற்றப்பட்டுள்ளது. க.பரமத்தி ஒன்றியம், பவித்திரம் அருகே உள்ள பாலமலையில், பாலசுப்பிரமணி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடக்கும். அன்றைய தினம் இரவு, 10:00 மணிக்கு தேரோட்டம் தொடங்கி, இரவு, 12:00 மணியளவில் நிலைக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டு வரும், 31ல் வரும் தைப்பூசத்தன்று, சந்திரகிரகணம் ஏற்படுகிறது. இதனால், தேரோட்ட நேரம் மாற்றப்பட்டுள்ளது. அன்று காலை, கோவிலில் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு, பகல், 1:30 மணிக்கு தேரோட்டம் தொடங்கும், மாலை, 4:00 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். இரவு, 10:00 மணிக்கு பிறகு, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இத்தகவலை கோவில் விழாக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை