வேட்டையாடினால் 7 ஆண்டு சிறை: மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேட்டையாடினால் 7 ஆண்டு சிறை: மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: வன உயிரினங்களை வேட்டையாடினால், ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என, கரூர் மாவட்ட வன அலுவலர் அன்பு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் பொங்கலை முன்னிட்டு, பாரி வேட்டை என்ற பெயரில், வன உயிரினங்களான முயல், கீரிப்பிள்ளை, குள்ளநரி, அணில், உடும்பு மற்றும் பிற உயிரினங்களை, சிலர் வேட்டையாடுகின்றனர் எனத் தெரியவந்துள்ளது. அவ்வாறு வேட்டையாடுவது இந்திய வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்படி குற்றமாகும். இந்த குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை உண்டு. மேலும், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். இது போன்ற வேட்டையில் யாரேனும் ஈடுபடுவதாக தெரிந்தால், 9443496218, 9842126651 என்ற மொபைல் எண்ணகளில் உடனே தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை