வரும் 20ல் ரேஷன் குறைதீர் முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வரும் 20ல் ரேஷன் குறைதீர் முகாம்

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: மாவட்டத்தில் நடக்க இருந்த ரேஷன் கார்டு குறைதீர் முகாம் வரும், 20ல் நடக்கும் என, கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்தார். இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடை சம்பந்தமான குறைகள், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய கார்டு கோருதல் மற்றும் உணவுப் பொருள் வழங்குதல் தொடர்பான பொதுமக்கள் குறைகளை தீர்க்கும் முகாம், வரும், 20ல் நடக்கிறது. கரூர் மாவட்டத்தில், ஆறு வட்டங்களிலும், காலை, 10:00 மணிக்கு, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் இம்முகாம் நடக்கிறது. இதில், கரூர் வட்டம் புத்தாம்பூர் வி.ஏ.ஓ., அலுவலகம், அரவக் குறிச்சி வட்டத்தில், ஆலமரத்துப்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகம், குளித்தலை வட்டத்தில், குமாரமங்கலம் வி.ஏ.ஓ., அலுவலகம், கிருஷ்ண ராயபுரம் வட்டத்தில், சிவாயம் வடக்கு வி.ஏ.ஓ., அலுவலகம், கடவூர் வட்டத்தில், மத்தகிரி வி.ஏ.ஓ., அலுவலகம், மண்மங்கலம் வட்டத்தில், அப்பிபாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்திலும் இம் முகாம் நடக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை