ஜல்லிக்கட்டில் துள்ளிக்குதித்த காளைகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டில் துள்ளிக்குதித்த காளைகள்

Updated : ஜன 14, 2018 | Added : ஜன 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று (ஜன.,14) ஜல்லிக்கட்டு சிறப்பாக நடந்தது. ஜல்லிக்கட்டில் 400 காளைகளும், 479 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இதில்70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
போட்டியை மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் முன்னிலையில் நடக்கும் இப்போட்டியை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., போஸ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். முன்னதாக கலெக்டர் வீரராகவ ராவ் ஜல்லிக்கட்டு உறுதிமொழி வாசிக்க, வீரர்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டை முன்னிட்டு பார்வையாளர்களுக்காக இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. காளைகளுக்கும் வீரர்களுக்கும் அடிபடாமல் இருப்பதற்காக தேங்காய் நார்கள் போடப்பட்டது. 10 மருத்துவ குழுவினர் மாடுபிடி வீரர்களை பரிசோதித்துள்ளனர். 10 ஆம்புலன்ஸ்களும், மொபைல் ஆம்புலன்ஸ்கள் மற்றும் கால்நடை ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையர் நேரடி கண்காணிப்பில் 650க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியி்ல ஈடுபடுத்தப்பட்டனர்.



அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvaraj Kalasubramanian - Muscat,ஓமன்
14-ஜன-201811:18:41 IST Report Abuse
Selvaraj Kalasubramanian இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
14-ஜன-201810:46:18 IST Report Abuse
Syed Syed நல் வாழ்த்துக்கள். பொங்கல் வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
raja - Kanchipuram,இந்தியா
14-ஜன-201809:41:12 IST Report Abuse
raja மதுரை மாவட்ட கலெக்டருக்கு நல்ல வேலை தான்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X