விவேகானந்தர் ஜெயந்தி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவேகானந்தர் ஜெயந்தி

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலை ஞான பீடத்தில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. வழக்கமான தியான - தவ நிகழ்வுகளுக்குப் பின் விழா தொடங்கியது. பொதுச் செயலாளர் கே.எஸ். சுந்தர ராமன் ஜெயந்தியின் நோக்கம் பற்றியும், சுவாமி விவேகானந்தர் வரலாற்று நிகழ்ச்சி பற்றியும் விளக்கினார். பின்னர் தென்கயிலைத் தமிழ்ச் சங்க உலக ஒருங்கிணைப்பாளர் வெ.புருஷோத்தமன், சுவாமி விவேகானந்தரையும் மகரிஷியையும் ஒப்பிட்டு, உலகளாவிய நிலையில் வாழும் விவேகானந்தராக விளங்கி , வையகம் சாந்தியும் சமாதானமும் நிறை சத்திய யுகம் படைக்க ஜெகத்மகா குரு ஞான வள்ளல்வழி இயங்குவதைச் சுட்டிக்காட்டி உரையாற்றினார்.

நிறைவாக ஆசியுரை வழங்கி மகரிஷி பரஞ்சோதியார் உரையாற்றுகையில், ஜெகத் மகா குரு ஞானவள்ளல் பரஞ்சோதி மகான் அருளிய " எந்நூலுக்கும் இந்நூலே மூலம் - நான் " என்ற நூலை விளக்கினார் . விழாவில் மலேசியா, சிங்கப்பூர் , ஜெர்மனி , கனடா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த அவர்தம் சீடர்கள் கலந்து கொண்டனர் . தொடர்ந்து , ஸ்ரீ பரஞ்சோதி யோகா கல்லூரி பேராசிரியர் ராம ஜெகதீசன் , பிரபஞ்ச சக்தியால் பிணிகளைக் குணமாக்கும் முறைகள் பற்றிய பயிற்சி வகுப்பினை நடத்தினார் .

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை