இந்தியா மீது அணுஆயுத தாக்குதல் : பாக்., பகிரங்க மிரட்டல்| Dinamalar

இந்தியா மீது அணுஆயுத தாக்குதல் : பாக்., பகிரங்க மிரட்டல்

Added : ஜன 14, 2018 | கருத்துகள் (33)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இந்தியா, பாகிஸ்தான், அணுஆயுத தாக்குதல்

இஸ்லாமாபாத் : பாக்.,ன் எந்த ஒரு தாக்குதலையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளதாக இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறி இருந்தார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது ராணுவ தளபதி கூறிய இந்த கருத்திற்கு தற்போது பாக்., பதிலளித்திருப்பதுடன், இந்தியாவிற்கு பகிரங்க மிரட்டலையும் விடுத்துள்ளது.

பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா முகம்மது ஆசிப் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திய ராணுவ தளபதியின் பேச்சு மிகவும் பொறுப்பற்றது. இது அவரது பதவிக்கு ஏற்றதல்ல. இதன் மூலம் அவர் அணுஆயுத சண்டைக்கு அழைப்பு விடுகிறார். ஒருவேளை அது தான் இந்தியாவின் ஆசை என்றால், அவர்கள் வந்து எங்களின் பலத்தை சோதித்து பார்க்கட்டும். யார் பலம் வாய்ந்தவர்கள் என்பது விரைவில் காட்டப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இவரைத் தொடர்ந்து பாக்., வெளியுறவு விவகாரத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் முகம்மது பாசில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய ராணுவ தளபதியின் பொறுப்பற்ற, மிரட்டல் தோணியிலான பேச்சு இந்தியாவின் கெட்ட எண்ணத்தை எடுத்துக் காட்டுகிறது. பாக்.,ம் தனது தாக்குதல், தடுப்பு திறனை காட்டும். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. எந்த வகையில் அவர்கள் எங்களை தவறாக எடைபோட வேண்டாம். பாக்., தன்னை காத்துக் கொள்ள முழு திறனுடன் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
14-ஜன-201821:31:59 IST Report Abuse
Sukumar Talpady இப்படித்தான் 1970-71 ல் பாகிஸ்தானின் உப படை தலைவர் Lt.Gen .Amir Abdulla Khan Niazi என்பவர் சவடால் vittaar. பங்களா தேஷ் போரில் பாக்கிஸ்தான் இந்தியாவை தோற்கடித்து தங்கள் மூதாதையரின் பெருமையை காப்பாற்றுவோம் என்றார் . அவரின் மூதாதையர் யாரென்று அவருக்கே தெரியாது . விட்டார் சவடால் . நடந்தது என்ன ? பாகிஸ்தான் துண்டாடப் பட்டது . இதை இந்த பாக்கிஸ்தான் வெளி உறவு அமைச்சருக்கு நினைவூட்ட வேண்டும் . இந்திய தளபதி ஒன்றும் மிரட்டல் விடும் முறையில் பேச வில்லை . அரண்டவனுக்கு மிரண்டதெல்லாம் பேய் என்று தோன்றுமாம் .அதுதான் நடந்துள்ளது .
Rate this:
Share this comment
Cancel
INDIAN - Mamallpuram ,இந்தியா
14-ஜன-201821:09:06 IST Report Abuse
INDIAN நுணலும் தன் வாயால் கெடும்.
Rate this:
Share this comment
Cancel
mossad - madurai  ( Posted via: Dinamalar Windows App )
14-ஜன-201820:23:24 IST Report Abuse
mossad k bhai mathi ipa edum paniradinga...unga nanban israel pma alika vandinganu ninachu gunda kinda potruvanga israel kita adi vangitu ungala vaala mudiyathu pathu
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X