கர்நாடகா சரக்கு கடத்திய 3 பேர் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கர்நாடகா சரக்கு கடத்திய 3 பேர் கைது

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓசூர்: தர்மபுரி மாவட்டத்திற்கு கடத்திச் சென்ற, 672 கர்நாடகா மாநில குவாட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன், மூன்று வாலிபர்களை கைது செய்தனர்.

ஓசூர் கலால் பிரிவு இன்ஸ்பெக்டர் பிரகாஷ், எஸ்.ஐ., குமார் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் டி.வி.எஸ்., சோதனைச்சாவடி அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த, இரு மாருதி கார்களை நிறுத்தி சோதனை செய்த போது, அதில், 672 கர்நாடகா மாநில குவாட்டர் பாட்டில்கள் இருந்தன. இதை போலீசார் பறிமுதல் செய்த போது, காரில் இருந்து, இருவர் தப்பியோடி விட்டனர். பிடிபட்ட, மூன்று பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கும்மனூர் அருகே உள்ள சூடனூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ், 30, கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் அடுத்த பித்தூர் குப்பம் பகுதியை சேர்ந்த தப்ரேஷ்கான், 35, அதே பகுதியை சேர்ந்த அப்ரித்கான், 20, என்பதும், தர்மபுரி மாவட்டத்திற்கு மதுபானங்களை கடத்தி செல்வதும் தெரிந்தது. இதையடுத்து, 672 மதுபானங்கள், இரு மாருதி காரை பறிமுதல் செய்த போலீசார், மூன்று பேரை கைது செய்தனர். தப்பியோடிய, பெங்களூருவை சேர்ந்த குமார் என்ற சிவக்குமார், அல்தாப் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை