முறையாக ஊதியம் வழங்காததை கண்டித்து அதிகாரி வீடு முன் பிச்சை எடுத்து தொழிலாளர்கள் போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முறையாக ஊதியம் வழங்காததை கண்டித்து அதிகாரி வீடு முன் பிச்சை எடுத்து தொழிலாளர்கள் போராட்டம்

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் அருகே, ஊதியம் சரிவர வழங்கவில்லை என, ஏ.பி.டி.ஓ., வீடு முன், பிச்சை எடுக்கும் போராட்டத்தில், தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம், கோயம்பள்ளி பஞ்சாயத்தில், டேங்க் ஆப்பரேட்டராக வெள்ளையப்பன், செல்லம்மாள், லோகம்மாள், துப்புரவு தொழிலாளிகளாக செல்லம்மாள், சுப்பிரமணி, அருக்காணி ஆகியோர் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவரும், தங்களுக்கு முறையாக ஊதியம் வழங்கவில்லை என, புலியூரில் உள்ள ஏ.பி.டி.ஓ., கணேசன், 52, வீடு முன் அமர்ந்து, பிச்சை எடுக்கும் போராட்டத்தில், நேற்று காலை ஈடுபட்டனர். இது குறித்து, வெள்ளையப்பன் கூறுகையில், ''சில மாதங்களில், 15 நாட்களுக்குப் பிறகு தான் சம்பளம் வழங்குகின்றனர். கூடுதல் ஊதியமும் தருவதில்லை. இதனால், குடும்பம் நடத்த பெரும் சிரமாக உள்ளது,'' என்றார். பசுபதிபாளையம் போலீசார் சமாதானம் செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின், தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து, ஏ.பி.டி.ஓ., கணேஷ் கூறுகையில், ''பஞ்சாயத்து கிளார்க்காக உள்ள சுரேஷ் என்பவர் பணியை சரிவர கவனிப்பதில்லை. அவரால்தான் தொழிலாளர்கள் என் வீட்டுக்கு முன் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர் மீது, துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பி.டி.ஓ., விடம் பேசி, காலம் தாழ்த்தாமல் ஊதியம் வழங்க ஏற்பாடு செய்யப்படும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை