இயற்கை எழில் கொஞ்சும் அரசு பள்ளி: அரிய வகை மரங்கள் 1,000க்கு மேல் பராமரித்து அசத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை எழில் கொஞ்சும் அரசு பள்ளி: அரிய வகை மரங்கள் 1,000க்கு மேல் பராமரித்து அசத்தல்

Added : ஜன 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement

கரூர்: அரசு பள்ளியில், 1,000க்கும் மேற்பட்ட நாட்டு மரங்களை நட்டு பராமரித்து, இயற்கை எழில் கொஞ்சும் சோலையாக, பள்ளியை மாணவர்கள், ஆசிரியர்கள் மாற்றியுள்ளனர்.

அரசு பள்ளி என்றாலே, சிதிலமடைந்த கட்டடங்கள், அடிப்படை வசதியில்லாமல், போதிய மரங்கள் இன்றி வெயிலின் தாக்கத்தால், மாணவர்கள் அவதியடைவது போன்ற எண்ணங்கள் தான் மக்கள் மனதில் தோன்றும். ஆனால், இயற்கை எழில் மிக்க சோலை வனத்திற்குள் நுழைவது போல், பள்ளி வளாகத்தைச் சுற்றி ஏராளமான மரங்கள் உள்ள, கரூர் மாவட்டம் புலியூர் அருகே, கவுண்டபாளையம் ராஜா முத்தையா அரசு உயர்நிலைப் பள்ளியில் நுழைந்தால், மக்களை மனநிலை மாறும்.

இது குறித்து, பள்ளி தலைமையாசியர் கோபு கூறியதாவது: பத்து ஏக்கர் பரபரப்பு கொண்ட எங்கள் பள்ளியில், 450 மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். பள்ளி கட்டப்பட்ட மற்றும் தரம் உயர்த்தப்பட்ட காலகட்டத்தில் பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை மரம் வளர்க்க ஊக்கப்படுத்தினர். கடந்த, 2016ல் தலைமையாசியராக நான் வந்த பின், பல்வேறு நாட்டு மரங்களை வளர்க்கத் திட்டமிட்டேன். இதன்படி, வனத்துறை மற்றும் எனது சொந்த முயற்சியில் பள்ளி விளையாட்டு மைதானம் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் நாட்டு மரங்கள் நட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. பாசன வசதியில்லாமல் மழையினை நம்பி இப்பகுதியில் மானாவாரி விவசாயம் நடந்து வரும் நிலையில், ஆரம்பத்தில் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவது இயலாததாக இருந்தது. ஆனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு மரங்கள் அவசியம் என்பதை உணர்ந்து, தண்ணீரைச் தேடி கொண்டு வந்து ஊற்றி, மரங்களைக் காப்பற்றினோம். இங்கு, புங்கன், ஆலம், அரசு, அத்தி, சரக்கொன்றை, மகிழம், மந்தாரை, இழுப்பை, குமிழ் போன்ற அரிய வகை மரங்களை வளர்க்கிறோம். மேலும், ஆன்மீகம் சம்பந்தமான வன்னி, வில்வம், நாகவள்ளி போன்ற மரங்களும் உள்ளன. 500 மரங்கள் இருந்து இடத்தில், தற்போது, 1,000 மரங்களுக்கு மேல் பராமரிக்கப்படுகிறது. இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் கல்வி கற்பதால் மாணவ, மாணவியர் மனதில் நல்ல எண்ணங்கள் உருவாகின்றன. அதுமட்டுமல்லாது, இயற்கையை ஆதரிக்கவும், விவசாயத்தை காக்கவும் அவர்கள் மனதில் விதை ஊன்றப்படுகிறது. இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள், தற்போது பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர். ஆனாலும், அவ்வப்போது பள்ளிக்கு வந்து, தாங்கள் நட்ட மரங்களை ஆசையுடன் பார்த்துச் செல்கின்றனர். காலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள், மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகின்றனர். இதனால், அவர்கள் மனதில் ஆனந்தம் ஏற்படுவதாக சொல்கின்றனர். அதைப் பார்க்கும் போது எங்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
senthil raja a - Varanasi,இந்தியா
15-ஜன-201810:00:18 IST Report Abuse
senthil raja a An example to be followed by 1000s of schools to build a new India
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை