ஓசூரில் ரவுடி கடத்தல்: ரத்தக்கறையுடன் கார் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓசூரில் ரவுடி கடத்தல்: ரத்தக்கறையுடன் கார் பறிமுதல்

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஓசூர்: ஓசூர் அருகே, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கடத்தப்பட்டார். அவர் தங்கியிருந்த வீடு மற்றும் காரில் ரத்த கறை உள்ளதால், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சமத்துவபுரம் பகுதியில் வசித்து வந்தவர் சேட்டு என்ற பிரேம் நவாஸ், 36, ராம்நகரில், தாஜ் என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வந்தார்; ஓசூரில் கடந்த, 2014 பிப்ரவரி மாதம் நடந்த இரும்பு வியாபாரி முஸ்தாக் கொலையிலும், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை முன், கடந்த, 2008 ல் நடந்த ரியல் எஸ்டேட் அதிபர் வசந்தன் கொலையிலும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த இவர் மீது, பல்வேறு வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்தில் கூட கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று காலை, 7:00 மணிக்கு, வீட்டில் இருந்த அவர், மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். இவருடன் தங்கியிருந்த யசோதா என்ற பெண் வெளியில் சென்ற நேரத்தில், இன்னோவா மற்றும் சென் காரில் வந்த மர்ம நபர்கள், சேட்டை அடித்து உதைத்து கடத்தி சென்றுள்ளனர். வீட்டில், சேட்டு படுத்திருந்த இடத்தில் ரத்த கரை உள்ளது. இன்னோவா கார் பழுதானதால், அதை அப்படியே சேட்டு வீட்டின் முன் நிறுத்தி விட்டு, சென் காரில், மர்ம நபர்கள் அவரை கடத்தி சென்றுள்ளனர். நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, கிருஷ்ணகிரி டோல்கேட்டை இன்னோவா கார் கடந்து ஓசூர் வந்துள்ளது. இன்னோவா காரின் முன்சீட்டில் ரத்தக்கரை உள்ளது. கடைசியாக சேட்டுடன் இருந்த யசோதா என்ற பெண்ணிடம், டி.எஸ்.பி., சங்கர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேட்டுவிற்கும், பிரபல ரவுடி ஒருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால் அவரை கொலை செய்யும் நோக்கில், மர்ம நபர்கள் கடத்தி சென்றிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் வீடு மற்றும் காரில் ரத்தக்கரை படிந்துள்ளதால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை