ஆடு, கோழி, மீன் விலை உயர்வு எதிரொலி: இன்று முதல் அசைவ ஓட்டல்களில் விலை உயர்வு அமல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆடு, கோழி, மீன் விலை உயர்வு எதிரொலி: இன்று முதல் அசைவ ஓட்டல்களில் விலை உயர்வு அமல்

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சேலம்: ''தமிழகத்தில் ஆடு, கோழி, மீன் விலை உயர்வால், அசைவ ஓட்டல்களில், நாளை (இன்று) முதல் உணவு பண்டங்களின் விலை உயர்கிறது,'' என, சேலம் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில், ஆடு, கோழிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக, அவற்றின் விலை அதிகரித்து, ஆட்டுக்கறி விலை, கடந்த ஒரு மாதத்தில், 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கிராங்களில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழி விலை, கிலோவுக்கு, 75 ரூபாய் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஓகி புயலின் தாக்குதலுக்கு பின், மீன் வரத்தில் ஏற்பட்ட சரிவால், மீன் விலை, 50 ரூபாய் முதல், 150 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அது மட்டுமின்றி, தேங்காயின் விலை, இரண்டு மடங்காக அதிகரித்துள்ள நிலையில், மளிகை பொருட்கள், மசலா பொருட்களின் விலை, 20 சதவீதம் அதிகரித்துள்ளதால், உணவுப்பொருட்களின் விலையை, 15 சதவீதம் உயர்த்தினால் மட்டுமே, தொழிலை தொடர முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால், நாளை (இன்று) முதல் அசைவ ஓட்டல்களில், அனைத்து உணவு வகைகளும் விலைம் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சேலத்தில் உள்ள நடுத்தர ஓட்டல் ஒன்றில் நேற்றைய விலை நிலவரம்: மட்டன் பிரியாணி, 210 ரூபாய், சிக்கன் பிரியாணி, 180 ரூபாய், குஸ்கா, 100 ரூபாய், மட்டன் சுக்கா, 170 ரூபாய், தலைக்கறி, 150 ரூபாய், போட்டி (குடல்), 140 ரூபாய், நாட்டுக்கோழி சுக்கா, 210 ரூபாய், பிராய்லர் கோழி சுக்கா, 140 ரூபாய், வஞ்சீரம் மீன் வறுவல், 220 ரூபாய், கட்லா, ரோகு, கெழுத்தி, தலா, 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையில், இருந்து, 10 ரூபாய் முதல், அதிகபட்சமாக, 30 ரூபாய் வரை, விலை உயர்த்த வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X