சேலத்தில் 'பஸ்போர்ட்' அமையும்: முதல்வர் பழனிசாமி உறுதி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேலத்தில் 'பஸ்போர்ட்' அமையும்: முதல்வர் பழனிசாமி உறுதி

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சேலம்: ''சேலத்தில், பஸ்போர்ட் அமைவதற்கான இடம் விரைவில் தேர்வு செய் யப்படும்,'' என, முதல்வர் பழனிசாமி கூறினார்.

சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த, இரும்பாலை சாலை சந்திப்பில், 21.97 கோடி ரூபாய் மதிப்பில், மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா, நேற்று, நடந்தது. கலெக்டர் ரோகிணி தலைமை வகித்தார். முதல்வர் பழனிசாமி, புதிய மேம்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினார். அப்போது, அவர் பேசியதாவது:வளர்ந்து வரும், சேலம் மாநகரில், அடுத்த ஆறேழு ஆண்டுகளில், ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு, ஈரடுக்கு உயர்மட்ட மேம்பாலம், குரங்குசாவடி, செவ்வாய்பேட்டை, திருவாகவுண்டனூர், மணல்மேடு, முள்ளுவாடி கேட் பகுதிகளில், மேம்பாலம் கட்ட, ஜெயலலிதா, முதல்வராக இருந்தபோது, அனுமதி கொடுத்தார். வேறு எந்த ஆட்சியிலும், சேலம் மாவட்டத்தில், இந்த அளவுக்கு மேம்பாலங்கள் கட்டப்படவில்லை. சேலம், புறநகர் பகுதியில், போக்குவரத்து பிரச்னையை தீர்க்க, மல்லூரில் இருந்து, அரபிக் கல்லூரி வரை, 21 கி.மீ.,தூரத்துக்கு புறவழிசாலை அமைக்கவும், சேலம், கோவை, மதுரையில், விமான நிலையங்களுக்கு இணையான வசதிகள் கொண்ட, 'பஸ்போர்ட்' என்ற நவீன பஸ் ஸ்டாண்ட் அமைக்கவும், மத்தியமைச்சர் நிதின்கட்கரி, பரிசீலனையின்றி, அனுமதி வழங்கியதற்கு, நன்றி தெரிவித்து கொள்கிறேன். சேலத்தில், அதிநவீன பஸ்நிலையம் அமையும் இடம் குறித்து, தீவிர ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, நிருபர்களிடம், அவர் கூறியதாவது: சேலத்தில், 'பஸ்போர்ட்' அமைக்க இடம் தேர்வானதும், மத்திய அரசு அதிகாரிகள், நேரில் பார்வையிட்டு, இறுதி செய்த பின், கட்டுமான பணிகள் துவங்கும். மதுரை, கோவையிலும், ஆய்வு நடந்து வருகிறது. நீதிமன்ற நிலுவை காரணமாக, குட்கா பற்றி பேசுவது, வழக்கில், குந்தகத்தை ஏற்படுத்தும் என்பதால், அதுபற்றி கருத்துகூற விரும்பவில்லை. வரும் நிதிநிலை அறிக்கையில், விவசாயிகளுக்கு புதிய அறிவிப்பு காத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை