நிதி நிறுவன அதிபர் கொலை: 2 பேர் கோர்ட்டில் சரண்: 5 பேர் கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிதி நிறுவன அதிபர் கொலை: 2 பேர் கோர்ட்டில் சரண்: 5 பேர் கைது

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: காட்பாடி நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில், இரண்டு பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.

வேலூர் அடுத்த காட்பாடியைச் சேர்ந்தவர் ராஜா, 55; முன்னாள், அ.தி.மு.க., கவுன்சிலர். இவரது அண்ணன் ஸ்டாலின், 60, இவர், நிதி நிறுவன அதிபராக இருந்தார். கடந்த, 10 இரவு, 9:00 மணிக்கு, தாராபடவேடு மெயின் ரோட்டில், நண்பர்களுடன் ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள், அரிவாளால் அவரை வெட்டி கொலை செய்தனர். காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக, தாராபடவேட்டை சேர்ந்த முருகன், 24, தேவராஜ், 21, ஆகியோர், நேற்று முன் தினம் இரவு, வேலூர், மூன்றாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி வெற்றிமணி உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய, தாராபடவேட்டை சேர்ந்த குருவி, 21, பாலா, 22, முரளி, 23, ரகின், 21, ராம்கி, 23, ஆகிய, ஐந்து பேரை, காட்பாடி போலீசார், நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X