ஆம்பூர் அருகே மர்மந பர்கள் நடமாட்டம்: நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆம்பூர் அருகே மர்மந பர்கள் நடமாட்டம்: நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

வேலூர்: வனப்பகுதியில், மர்ம நபர்கள் நடமாடுவதாக வந்த தகவலால், ஆம்பூர் அருகே, நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் நக்சலைட்டுக்கள், தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளது. இதனால், போலீசார் அடிக்கடி மாவட்டத்தில் சந்தேக்கத்திற்கிடமான பகுதிகளில், ரோந்து செல்வர். இந்நிலையில், ஆம்பூர் அடுத்த மிட்டாளம் அருகே, துருகம் காப்புக்காடு, ஊட்டல் காப்புக்காடு மற்றும் இதன் அருகில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள வீட்டு கொல்லை, பரமேஸ்வரி கொல்லை, சேவன்கிணறு, சாணிகணவாய், பாண்டவர் குடில்கள் ஆகிய பகுதிகளில், கடந்த சில நாட்களாக, மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, வேலூர் மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் இளவரசன் தலைமையில், 30 க்கும் மேற்பட்ட போலீசார், நேற்று துருகம், ஊட்டல் காப்புக்காடுகாடுகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். இவர்களுடன், ஆம்பூர் வனக்காப்பாளர்கள் செல்வராஜ், காந்தராஜ் ஆகியோர் சென்றுள்ளனர்.

இதுகுறித்து, நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது: ஆம்பூர் அருகே, துருகம், ஊட்டல் காப்புக்காடுகளுக்கு அருகில், ஆந்திரா மாநிலம், கவுண்டன்யா வன விலங்குகள் சரணாலயம் உள்ளது. இங்குள்ள சிறுத்தை, மான், கரடி, காட்டு எருமைகளை வேட்டையாட, சமூக விரோதிகள் இங்கு நடமாடுகின்றனர். மேலும், பாண்டவர் குடில்களில் புதையல் இருப்பதாக மந்திரவாதிகள் சிலர் கூறியதால், பொது மக்கள் அங்கு சென்று பெளிய பள்ளங்களை தோண்டி வருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, சமூக விரோதிகள், தேடப்படும் குற்றவாளிகள் இந்த பகுதியில் நடமாடுகின்றனர். இதனால் இப்பகுதியில் ரோந்து செல்கிறோம். இப்பகுதியில் சந்தேகப்படும் ஆட்களைப் பார்த்தால், அவர்கள் நடமாட்டம் இருந்தால், அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன், வனத்துறை அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கும்படி, தண்டோரா போட்டு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை