பொங்கல் போனஸ் கேட்டு 1 லட்சம் தோல் தொழிலாளர்கள் போராட்டம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் போனஸ் கேட்டு 1 லட்சம் தோல் தொழிலாளர்கள் போராட்டம்

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

வேலூர்: பொங்கல் போனஸ் கேட்டு, ஒரு லட்சம் தோல் தொழிலாளர்கள், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில், ஆம்பூர், வாணியம்பாடி, பேர்ணாம்பட்டு, ராணிப்பேட்டை, சிப்காட், ராணிப்பேட்டை, மேல்விஷாரம், வாலாஜாபேட்டை ஆகிய பகுதிகளில், 1,200 க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இதில், 1.50 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, வழக்கமாக ஜன., மாதம் முதல் வாரத்தில், பொங்கல் போனஸ் வழங்கப்படும். ஆனால், இதுவரை வழங்கவில்லை. இதுகுறித்து தோல் தொழிற்சாலை தொழிலாளர் சங்கத்தினர் கேட்டதற்கு, தொழிற்சாலைகள் நஷ்டத்தில் இயங்குவதால், இந்தாண்டு பொங்கல் போனஸ் வழங்க முடியாத நிலை உள்ளது என, தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவித்து விட்டனர். இதை கண்டித்து, ஆம்பூர் பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், நேற்று காலை, 8:00 மணிக்கு உள்ளிருப்பு போராட்டத்தை துவங்கினர்.

இதுகுறித்து, வேலூர் மாவட்ட தோல் தொழிற்சாலை தொழிலாளர்கள் நல சங்க தலைவர் வாசுதேவன் கூறியதாவது: தோல் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, மாதம், 5,000 முதல், 12 ஆயிரம் ரூபாய் வரை, தகுதி அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுகின்றன. தினமும், 12 மணி நேரம் முதல், 14 மணி நேரம் வரை, வேலை செய்ய வேண்டும். ஆண்டுக்கு, ஒரு முறை, ஜனவரியில் போனஸ் மற்றும் சம்பள உயர்வு வழங்க வேண்டும். நஷ்டத்தை காரணம் காட்டி இந்தாண்டு போனஸ், சம்பள உயர்வு வழங்க, தொழிற்சாலை நிர்வாகத்தினர் மறுக்கின்றனர். இதனால் மாவட்டம் முழுவதும், தோல் தொழிற்சாலைகளில் பணியாற்றி வரும், ஒரு லட்சம் தொழிலாளர்கள், தொழிற்சாலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளன. ஒரு நாள் உற்பத்தி நிறுத்தப்பட்டால், 10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இதனால் தொழிற்சாலை நிர்வாகத்தினர், பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். போனஸ், சம்பள உயர்வு வழங்கும் வரை, உள்ளிருப்பு போராட்டம் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை