காட்டுப்பன்றி வேட்டையாடியவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காட்டுப்பன்றி வேட்டையாடியவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிப்பு

Added : ஜன 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: சாத்தனூர் அருகே, வனப்பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடியவருக்கு, 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் பஞ்.,க்கு உட்பட்ட மல்லிகாபுரம் பள்ள ஓடை பகுதியில், கடந்த, இரண்டு நாட்களுக்கு முன், சாத்தனூர் வனவர் வசந்த்பாஸ்கர் மற்றும் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது, காட்டு பகுதியில், துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதையடுத்து, அப்பகுதிக்கு வனத்துறையினர் சென்று பார்த்தபோது, அங்கு மல்லிகாபுரம் கிராமத்தை சேர்ந்த பெருமாள், 63, உட்பட சிலர், காட்டுப்பன்றியை நாட்டு துப்பாக்கியால் வேட்டையாடியது தெரியவந்தது. வனத்துறையினரை கண்டதும், அந்த கும்பல் தப்பி ஓடியது. இதில் பெருமாளை மட்டும் மடக்கி பிடித்து, கைது செய்தனர். அவருக்கு, 15 ஆயிரம் ரூபாயை அபராதம் விதிக்கப்பட்டது. தப்பி ஓடிய மற்றவர்களை, வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை