குடியரசு தினத்தில் டில்லியில் தாக்குதல் நடத்த சதி: உளவுத்துறை எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

குடியரசு தினத்தில் டில்லியில் தாக்குதல் நடத்த சதி: உளவுத்துறை எச்சரிக்கை

Added : ஜன 14, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
டில்லி, Delhi,குடியரசு தினம்,Republic Day, பயங்கரவாதிகள்,Terrorists,  உளவுத்துறை,Intelligence, ஜனவரி26,January 26, பாகிஸ்தான்,Pakistan,  போலீஸ் பாதுகாப்பு , Police Security,

புதுடில்லி: குடியரசு தினத்தில் டில்லியில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவின் குடியரசு தினம் ஜனவரி 26ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினர்களாக 10 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதனையடுத்து டில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் குடியரசு தினத்தில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தாக்குதல் நடத்த திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை

பாக்.,கில் பயிற்சி

இது குறித்து கூறப்படுவதாவது: குடியரசு தினத்தில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் 3 பேர் பழைய டில்லியில் பதுங்கியுள்ளனர். ஆப்கனை சேர்ந்த அவர்கள், தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள். அவர்களுக்கு காஷ்மீரில் இருந்து உத்தரவுக்காக காத்திருக்கின்றனர் என உளவுத்துறை அதிகாரிகள் டில்லி போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தேவி தாசன் - chennai,இந்தியா
14-ஜன-201822:19:00 IST Report Abuse
தேவி தாசன் வருஷம் வருஷம் இப்படி கிளப்பிகிட்டே இருக்கணும்
Rate this:
Share this comment
Cancel
14-ஜன-201815:23:13 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் சொதந்திர தெனம், குடியரசு தெனம், புது வருஷம் வருதோ இல்லியோ அந்த டேட்டுக்கு முன்னால இந்த சேத்தி வந்திரும் நைனா..பக்கி பாக்கிகளால நாடே இப்டி நல்லநாளு அத்துமா பயந்தே சாவனும்....
Rate this:
Share this comment
Cancel
rama - johor,மலேஷியா
14-ஜன-201813:20:20 IST Report Abuse
rama இந்த வகை மிரட்டலை முற்றிலும் கலைய முன்னுரிமை கொடுக்காமல் தமிழ்நாட்டை பின் வழியில் ஆடசி செயயவே துடிக்கிறனர் மோடியின் பாஜகவினர்
Rate this:
Share this comment
Cancel
14-ஜன-201813:19:38 IST Report Abuse
சிவம் ஒன்று மட்டும் புரியவில்லை. குடியரசு தின விழாவில், ஒவ்வொரு துறை மற்றும் மாநிலம் சார்ந்த அலங்கார ஊர்திகள் அணி வகுத்து செல்வது, அதை பற்றி விளக்கங்கள் தருவது சரி. எதற்காக நமது ராணுவ தளவாடங்கள் பற்றி தெரிவிக்க வேண்டும். இது நம் நாட்டு பாதுகாப்புக்கு நல்லதில்லயே. நம் பலத்தை அண்டை நாட்டு நாய்களுக்கு எதற்காக தெரிவிக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
14-ஜன-201812:37:11 IST Report Abuse
Apposthalan samlin உளவுத்துறை என்பது நடக்கிறதுக்கு முன்னர் சும்மா குத்து மதிப்பா வருடம் தோறும் சுதந்தரம் தினம் குடியரசு தினம் போன்ற நேரத்தில் எச்சரிக்கை கொடுக்கும் நிறுவனம் ஆகும்.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-ஜன-201812:23:55 IST Report Abuse
Kasimani Baskaran கூக்குரலிட்டு நீதித்துறை பேட்டி கொடுத்தாகி விட்டது...
Rate this:
Share this comment
14-ஜன-201815:24:27 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன்அவனுக பேட்டி கொடுக்கட்டும்..வா நைனா நாம போட்டி கொழம்பு சோறு சாப்புடுவோம்...
Rate this:
Share this comment
Cancel
mscdocument - chennai ,இந்தியா
14-ஜன-201812:12:49 IST Report Abuse
mscdocument இந்தியாவிலிருந்து பிரிந்த பாகிஸ்தானை தொடர்ந்து மத விரோதத்துடன் புறக்கணிப்பதால் அவன் சீனாவின் உதவியை நாடுகிறான் அண்டை நாடுகளுடன் நட்புறவுடன் செயல்படுவதே ராஜ தந்திரமாகும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை