காவிரி வழக்கில் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு: முதல்வர் நம்பிக்கை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

காவிரி வழக்கில் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு: முதல்வர் நம்பிக்கை

Added : ஜன 14, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
காவிரி, முதல்வர் பழனிசாமி, கர்நாடகா, தண்ணீர், அதிமுக, டெல்டா பாசனம்,  தினகரன்,

சேலம்: சேலம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி வழக்கில் 4 வாரத்தில் தீர்ப்பு வர உள்ளது. இது விவசாயிகளுக்கு சாதகமான தீர்ப்பாக இருக்கும். தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை தான் கேட்கிறோம்.
டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் தரப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தண்ணீரை கர்நாடகாவிடம் கேட்கிறோம். அதிமுக அரசு மதசார்பற்ற அரசு. உயிரோட்டமுள்ள இயக்கம். முத்தலாக் தடை சட்டத்தில் 3 ஆண்டு சிறை தண்டனை சரத்து நீக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.
சட்டசபையில் கண்ணியமான முறையில் மரபை கடைபிடித்து ஜனநாயக கடமை ஆற்றுகிறோம். தினகரன் எப்படி வெற்றி பெற்றார் என்பது தெரியும். தினகரன் அதிமுக உறுப்பினரே இல்லை. ஜெயலலிதா இருந்த போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர். தினகரனை மீடியாக்கள் தான் பெரிதுபடுத்தி காட்டுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
15-ஜன-201806:52:31 IST Report Abuse
Makkal Enn pakam தமிழர்களையும் உங்களைப்போல் கூன்பாண்டிகளாக மாற்றிவிடாதீர்கள், நல்ல திட்டங்களை கொண்டுவந்து மழை நீரை முதலில் சேமியுங்கள், கொள்ளை அடிக்காமல் ஒழுங்காக தூர்வாருங்கள், மணல் கொள்ளையை தடுங்கள். உங்களுக்கு எங்க இதெற்கெல்லாம் நேரம் இருக்கும், உங்கள் மொத்த நேரமும் உங்கள் அன்பு அண்ணன் மோடிஜியை குஷிப்படுத்துவதில் போய்விடும், பாவம் நீங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
15-ஜன-201805:57:48 IST Report Abuse
Makkal Enn pakam மங்குணிகள் கையில் இந்த பாழாப்போன தமிழ்நாடு சிக்கி சீரழிகிறது.....
Rate this:
Share this comment
Cancel
Muthu - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜன-201820:44:50 IST Report Abuse
Muthu அதே தினகரன், சசிகலா கால்ல விழுந்துதானே நீங்கள் இந்த பதவியை வாங்குனீர்கள்..அதெல்லாம் மறந்து போச்சோ ..ஆனா மக்கள் யாரும் மறக்கல..உங்க எல்லோருக்கும் தேர்தல் வரும் போது தெரியும் ..
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
14-ஜன-201819:40:12 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam தினகரனைத் துணைப் பொதுச் செயலாளர் என்றும் சிறையில் இருக்கும் சசிகலாவைப் பொதுச் செயலாளர் என்றும் கூறி, நகைச்சுவை நாடகம் அரங்கேற்றிக் கொண்டிருப்பது கேவலமாக இருக்கின்றது.
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
14-ஜன-201818:57:47 IST Report Abuse
rajan முதலில் தமிழ்நாட்டிலே பெய்யுற மழை நீரை கடலில் கொண்டு சேர்க்கும் வித்தைக்கு முடிவு கட்டுங்க. தடுப்பணை கட்டுவது, நீராதாரங்களை இணைப்பது, நதி நீர் இணைப்பு என எத்தனையோ வழி முறைகள் உள்ளன அதை பற்றி சிந்தியுங்க சாமியோவ். சும்மா அந்த அம்மா வழி ஆத்தா வழி என வெட்டியா பேசியே காலத்தை ஓட்டாதீங்க சாமியோவ். உருப்படியா சிந்தியுங்க.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-ஜன-201802:09:01 IST Report Abuse
தமிழ்வேல் அடுத்தவன் கிட்டே நாம கையேந்தரத்துக்கு முன்னால நமக்கு இந்த புத்தி இருக்கனும் ?...
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-ஜன-201817:42:44 IST Report Abuse
தமிழ்வேல் கர்நாடகாவிலேதானே முதல்ல தேர்தல் வருது... ரிசல்ட் அதை பொறுத்துதானே இருக்கனும்..
Rate this:
Share this comment
Cancel
14-ஜன-201814:46:08 IST Report Abuse
Bharathi,Bangalore Respected CM, This year we had good rain. In Tamilnadu we have to improve our water resource stroage. For example what happened in Krishnagiri Dam, we let down huge water because of shutter damage in the Dam. please check in Karnataka..they effectively storing... Request your government let do effective operations in their respective department.
Rate this:
Share this comment
Cancel
14-ஜன-201814:46:08 IST Report Abuse
Bharathi,Bangalore Respected CM, This year we had good rain. In Tamilnadu we have to improve our water resource stroage. For example what happened in Krishnagiri Dam, we let down huge water because of shutter damage in the Dam. please check in Karnataka..they effectively storing... Request your government let do effective operations in their respective department.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை