Google honours Mahasweta Devi on 92nd birth anniversary | வங்க மொழி எழுத்தாளருக்கு கூகுள் கவுரவம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வங்க மொழி எழுத்தாளருக்கு கூகுள் கவுரவம்

Added : ஜன 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மேற்கு வங்கம், எழுத்தாளர், மஹாஸ்வேதா தேவி, கூகுள், டூடுல்

புதுடில்லி: மேற்கு வங்கத்தை சேர்ந்த எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான மஹாஸ்வேதா தேவியின் 92வது பிறந்த நாளை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு கவுரவபடுத்தியுள்ளது. பத்ம விருது பெற்றுள்ள அவர், 100க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட சிறிய கதைகளையும் எழுதியுள்ளார். அவர் சாமான்ய மக்கள் மற்றும் சமூக பிரச்னைகளுக்காகவும் போராடினார். மேற்கு வங்க, பீஹார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநில பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடியுள்ளார்.
1926ல் டாக்காவில் பிறந்த மஹாஸ்வேதா தேவி, ஆங்கிலத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். 1979ல் சாகித்ய அகாடமி விருது, 1996 ல் ஞான பீட விருது, 1997 ல் ராமன் மகாசசே விருது விருது பெற்றுள்ளார். 2009 ல் ராமன் புக்கர் சர்வதேச விருதுக்கும் அவரது பெயர் பரிசீலனை செய்யப்பட்டது.அவரின் சமூக சேவைக்காக 1986 ல் பத்ம ஸ்ரீ விருதும், 2006 ல் பத்ம விபூஷன் விருதும், 2011ல் பங்கா பூஷன் விருதும் பெற்றுள்ளார்.கடந்த 2016 ஜூலையில் மாரடைப்பு காரணமாக அவர் காலமானார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
14-ஜன-201822:29:19 IST Report Abuse
K.Sugavanam மஹா ஸ்வேதா தேவி பற்றிய தகவல்கள் நன்று..ஆனால் அவரை வாங்க மொழி எழுத்தாளர் என்பது அந்நியத்தனமாக ஒலிக்கிறது..அவர் தலை சிறந்த இந்திய எழுத்தாளர். ..அவரை ஒரு மொழிக்குள் அடக்கிவிடாதீர்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை