துபாயில் நடந்த பொங்கல் விழா| Dinamalar

துபாயில் நடந்த பொங்கல் விழா

Added : ஜன 14, 2018 | கருத்துகள் (14)
Advertisement

துபாய் : துபாய் முஸ்ரிப் பூங்காவில் கலாட்டா குடும்பத்தின் சார்பில் பொங்கல் விழா வெகு சிறப்புடன் நடைபெற்றது.
இந்த பொங்கல் விழாவை முன்னிட்டு புதுப்பானையில் பொங்கலிட்டு பொங்கல் விழாவை தமிழக பாரம்பர்யத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த விழாவினையொட்டி பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியே நடத்தப்பட்டது.
குறிப்பாக உரியடி, கயிறு இழுத்தல், அம்பெறிதல், பலம் பார்த்தல், கல் எடுத்தல், பச்சைக் குதிரை, சில்லுக்கோடு, பல்லாங்குழி, உப்புத் தூக்கல், கிட்டிப்புள், குத்துப் பம்பரம், கோணிப்பை போட்டி, குச்சி விளையாட்டு உள்ளிட்ட விளையாட்டுக்கள் நடைபெற்றது. இதில் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ரவி, கோமதி ரவி குடும்பத்தினர் சிறப்புடன் செய்திருந்தனர். காலை வெண் பொங்கல், வடை, சாம்பார் மதியம் சோறு, வத்தல் குழம்பு, ரசம், அப்பளம் என அனைத்தையும் தமிழக பாரம்பர்யத்துடன் அஜ்மானில் செயல்பட்டு வரும் தஞ்சாவூர் தமிழ் உணவகத்தார் தயாரித்து வழங்கினர். இந்த உணவு ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டிருந்ததாக கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். - நமது செய்தியாளர் காஹிலா

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Meganathan -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜன-201803:50:10 IST Report Abuse
Meganathan Happy Pongal to all from Dubai
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
15-ஜன-201801:04:09 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் முஸ்ரிப் பூங்கா.. மணல் பூங்காவா இருக்கே. பன்னீர் செல்வத்தை கூப்பிட்டிருந்தார் பாறை இருக்கும் இடம் வரை நோண்டி வித்திருப்பார்..
Rate this:
Share this comment
Cancel
Agrigators - Chennai,இந்தியா
14-ஜன-201819:34:44 IST Report Abuse
Agrigators எந்த நாட்டில் இருந்தாலும் தமிழர் தமிழர்களே இனிய தை திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள் என் ரத்த சொந்தங்களே Agrigators India
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
14-ஜன-201817:54:11 IST Report Abuse
P. SIV GOWRI வெரி குட்.பொங்கல் தின நல் வாழ்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-ஜன-201817:50:07 IST Report Abuse
Kasimani Baskaran துபாய் தமிழர்களுக்கு உளங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்...
Rate this:
Share this comment
Cancel
pshivgowri -  ( Posted via: Dinamalar Android App )
14-ஜன-201817:42:52 IST Report Abuse
pshivgowri வெரி குட்.பொங்கல் வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-ஜன-201816:45:46 IST Report Abuse
தமிழ்வேல் பிரமாதம், வாழை இலை, இஞ்சி மஞ்சள் கரும்பு என வெளுத்து விட்டார்கள். நல்வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஜன-201816:41:16 IST Report Abuse
முக்கண் மைந்தன் Dubaaaaai டா.....
Rate this:
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
14-ஜன-201817:27:23 IST Report Abuse
Kasimani Baskaranஓ... நீதானா அது... அங்க ஒழுங்கா இரு... வெட்டிருவாங்க......
Rate this:
Share this comment
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
14-ஜன-201817:39:14 IST Report Abuse
Narayanதுபாய்ல இருந்தாலும் இந்து பண்டிகைன்றதுனால நீ எப்படியும் அங்க போயிருக்க மாட்ட...
Rate this:
Share this comment
Sathish - Coimbatore ,இந்தியா
14-ஜன-201818:50:38 IST Report Abuse
Sathish @காசிமணி சார் அருமை....
Rate this:
Share this comment
Cancel
chails ahamad - doha,கத்தார்
14-ஜன-201816:38:36 IST Report Abuse
chails ahamad தமிழர் திருநாளம் பொங்கலை துபாய் மற்றும் உலகின் இதர பகுதிகளில் கொண்டாடிய நம்மவர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் உரித்தாக்குவோம் . தமிழர் என்று சொல்லிடுவோம் தலை நிமிர்ந்து நடந்திடுவோம் . ஒரு தறுதலை கூட்டம் நம்மை பிரித்தாள முயற்சிப்பதை நாம் அனைவரும் உணர்ந்தே உள்ளோம் , அவர்கள் வெற்றியடைய போவதில்லை என்பதை உலக அறிய கூறிடுவோம் . வாழ்க தமிழர் கலாச்சாரம் , வளர்க தமிழர்களின் ஒற்றுமையுணர்வுகள் . தினமலர் குழுமத்தார்களுக்கும் , வாசக நண்பர்கள் , சகோதரர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் உரித்தாக்குகின்றேன் .
Rate this:
Share this comment
Cancel
Naga - Muscat,ஓமன்
14-ஜன-201816:30:05 IST Report Abuse
Naga வெரி குட்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை