சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சபரிமலையில் மகரஜோதி; பக்தர்கள் பரவசம்

Updated : ஜன 14, 2018 | Added : ஜன 14, 2018 | கருத்துகள் (22)
Advertisement

சபரிமலை : சபரிமலையில் மகரஜோதி மற்றும் மகர நட்சத்திரத்தை கண்டு பக்தர்கள் பரசவத்துடன் சாமி கும்பிட்டு மலை இறங்கினர்.
கடந்த டிச.,30-ம் தேதி தொடங்கிய மகரவிளக்கு கால பூஜையின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மகரவிளக்கு பெருவிழா நடைபெற்றது. நேற்று காலை 3.15 மணிக்கு தொடங்கிய நெய்யபிஷேகம் பகல் 12.00 மணி வரை நடைபெற்றது. பின்னர் கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செசய்யப்பட்டு உச்சபூஜை நடைபெற்றது. தொடர்ந்து மகரசங்கரம பூஜைக்கான ஆயத்த ஏற்பாடுகள் நடைபெற்றது.1.47-க்கு திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்பட்ட நெய்தேங்காய்களை உடைத்து ஐயப்பனுக்கு அபிஷேகம் செசய்த தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு மகரசங்கரம பூஜையை நடத்தினார். பகல் 2.00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
பின்னர் மாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் திருவாபரணத்தை வரவேற்க செசல்லும் தேவசம்போர்டு அதிகாரிகள் ஸ்ரீகோயில் முன்புறம் வந்தனர். அவர்களுக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு மாலை அணிவித்து வழி அனுப்பி வைத்தார். பந்தளத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி புறப்பட்ட திருவாபரணபவனி மாலை 5.40 மணி வாக்கில் சரங்குத்தி வந்தடைந்தது. தேவசம்போர்டு அதிகாரிகள் செசன்று முறைப்படியாக வரவேற்பு கொடுத்த பின்னர் அங்கிருந்து புறப்பட்ட பவனி 6.25 மணி வாக்கில் சன்னிதானம் வந்தது. பக்தர்கள் சரணகோஷம் முழங்க 18-ம் படி வழியாக ஒரு திருவாபரண பெட்டி வந்தது. இரண்டு பெட்டகங்கள் மாளிகைப்புறம் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

மகரஜோதி தரிசனம்


ஒளிவிட்டு பிரகாசிக்க


ஸ்ரீகோயில் முன்பு திருவாபரணபெட்டியை தந்திரியும், மேல்சாந்தியும் பெற்று நடை அடைத்தனர். தொடர்ந்து திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு நடை திறந்து 6. -35-க்கு தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சன்னிதானத்தில் குழுமியிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் கண்கள் பொன்னம்பலமேட்டை நோக்கியிருந்தது. தீபாராதனை முடிந்த சில நிமிடங்களில் மகர நட்சத்திரம் ஒளிவிட்டு பிரகாசிக்க தொடங்கியது. இதை கண்ட பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்று கோஷமிட்டனர். பின்னர் மூன்று முறை மகரஜோதி காட்சி தந்தது. ஜோதியும், நட்சத்திரமும் கண்டு தரிசித்த ஆனந்தத்தில் பக்தர்கள் மலைஇறங்கினர்.
புல்மேடு சம்பவத்துக்கு பின்னர் இநத ஆண்டு சபரிமலையில் மகரவிளக்குக்கு கட்டுக்கடங்கா பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது. ஹெலிகாப்டர் மற்றும் ஆளில்லா சிறு விமானங்கள் மூலம் கண்காணிப்பு நடைபெற்றது. விபத்துக்கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு டாக்டர்கள் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். கேரள அரசு போக்குவரத்துக்கழகம் 1200 பஸ்களை தயார் நிலையில் நிறுத்தியிருந்தது.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dharma - nagpur,இந்தியா
15-ஜன-201806:39:31 IST Report Abuse
dharma காந்தமலை வாசனே சரணம் ஐயப்பா
Rate this:
Share this comment
Cancel
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜன-201804:15:55 IST Report Abuse
ManiS Thamizhanai Vida madayanai indha ulagaththil paarka mudiyaadhu
Rate this:
Share this comment
Cancel
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜன-201804:14:21 IST Report Abuse
ManiS They too agreed that it was show by them. Then why this much of crowd? Fools.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X