பா.ஜ., நாட்டை காப்பாற்றியுள்ளது: அருண் ஜெட்லி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., நாட்டை காப்பாற்றியுள்ளது: அருண் ஜெட்லி

Updated : ஜன 14, 2018 | Added : ஜன 14, 2018 | கருத்துகள் (44)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பா.ஜ.,நாட்டை காப்பாற்றியுள்ளது,Arun Jaitley,B.J.P,BJP,Bharatiya Janata Party,அருண் ஜெட்லி,பா.ஜ

சென்னை: ரூபாய் நோட்டு வாபஸ், கறுப்பு பண ஒழிப்பு மூலம் பா.ஜ., அரசு நாட்டை காப்பாற்றியுள்ளது என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

துக்ளக் பத்திரிக்கையின் 48வது ஆண்டு விழா சென்னை மியூசிக் அகடமியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, புத்தகங்களை வெளியிட்டார்.

விழாவில் அவர் பேசியதாவது: மோடி ஆட்சிக்கு முன்பிருந்த அரசு எதற்கும் உதவாத அரசாகவே இருந்தது. ஒரு குடும்பமே நாட்டை கைபற்றி ஆட்சி செய்து வந்தது. நாட்டில் எதிர்புணர்வை தூண்டுவது சில சூழ்ச்சி சக்திகள் தான். நாட்டை பிளவுபடுத்த வேண்டும் என குரல் கொடுப்பவர்களுக்கு காங்., கட்சி ஆதரவளிக்கிறது.


கடினமான மனநிலையில்..

ரூபாய் நோட்டு வாபஸ் ஊழலை ஒழிக்க எடுக்கப்பட்ட மிக முக்கிய நடவடிக்கை. கடினமான மனநிலையில்தான் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. பிரதமரின் நடவடிக்கையால் நாட்டின் வரி வருவாய் அதிகரித்துள்ளது. ஆனைத்து மாநிலங்களிலும் பார்லி., தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலை சேர்த்து நடத்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - Chennai,இந்தியா
02-பிப்-201820:28:09 IST Report Abuse
Tamilan ஆர்வ கோளாறு காரணமாக 50 ஆண்டுகால தவறுகளை 5 வருடங்களில் சரி செய்து விட முயற்சி செய்து மக்களிடம் வெறுப்பை சம்பாதித்து 5 வருடங்களில் ஆட்சியை இழப்பதை விட நிதானமாகவும் கண்ணியமாகவும் மக்களுக்கு ஓரளவுக்கு ஜனரஞ்சகமான திட்டங்களை அறிவித்து இன்னும் 10 பதினைந்து ஆண்டுகள் ஆட்சியை இழக்காமல் இருந்திருந்தால் சாதித்திருக்கலாம். இந்தியா இந்துஸ்த்தான் ஆகியிருக்கும். மாபெரும் சக்தியாகி இருக்கும். உலகமே போற்றும் பாரதம் ஆகி இருக்கும். பிரதமருக்கு அதிகாரிகள் துணையாக இல்லை மக்கள் விரோதி போன்று உரு எடுத்து மோடியை வீழ்த்தும் முயற்சியில் இறங்கி விட்டது போல் ஆகி விட்டது. ராஜஸ்தான் அதற்கான அபாய மணி இப்போதாவது மக்களுக்கான ஆட்சியாக வெறுப்பை சம்பாதிக்காத ஆட்சியாக மாறினால் மோடியை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது. அதற்க்கு முக்கியமாக கிரிமினல் மூளை படைத்த ADVOCATE அருண் ஜெட்லீ நிதி துறையில் இருந்து வேறு வெளியுறவு அல்லது பாதுகாப்பு துறைக்கு மாற்ற வேண்டும். மக்கள் மீது அன்புள்ளம் கொண்ட வாஜ்பாய் போன்ற ஒருவர் நிதி துறைக்கு தேவை.
Rate this:
Share this comment
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
02-பிப்-201819:45:23 IST Report Abuse
Rameeparithi நடுத்தர வர்க்கத்தை நசுக்கிவிட்டு நாட்டை காப்பாற்ற முயற்சியா ...
Rate this:
Share this comment
Cancel
srihari - vadodara,இந்தியா
01-பிப்-201811:59:42 IST Report Abuse
srihari எந்த நாட்டை?......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X