அ.தி.மு.க.,வை உடைக்க சிண்டு முடியும் தி.மு.க., அமைச்சர் ஜெயகுமார் குற்றச்சாட்டு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வை உடைக்க சிண்டு முடியும் தி.மு.க., அமைச்சர் ஜெயகுமார் குற்றச்சாட்டு

Added : ஜன 15, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அ.தி.மு.க,AIADMK,  தி.மு.க., DMK, அமைச்சர் ஜெயகுமார், Minister Jayakumar,  ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், RK Nagar by-election,மதுசூதனன்,Madhusudhanan, தினகரன்,Dinakaran,  முன்னாள் அமைச்சர் வளர்மதி, former Minister of valarmathi,

சென்னை:''அ.தி.மு.க.,வை பிளவுபடுத்த, தி.மு.க., சிண்டு முடியும் வேலை பார்க்கிறது,'' என, அமைச்சர் ஜெயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், ஆளும், அ.தி.மு.க., மோசமான தோல்வியை சந்தித்தது.அ.தி.மு.க.,வின் கோட்டையாக கருதப்படும், ஆர்.கே.நகரில், உள் கட்கட்சி பூசலால், மதுசூதனன் தோற்றதாக, கட்சியின் ஒரு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.அந்த தொகுதியை சேர்ந்த, அமைச்சர் ஜெயகுமார் மீது குற்றஞ்சாட்டி, வேட்பாளர் மதுசூதனன், கட்சியின் தலைமைக்கு கடிதம் எழுதினார்; கட்சி வட்டாரத்தில் பூசல் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, அமைச்சர் ஜெயகுமார் நேற்று அளித்த பேட்டி:
கட்சி தலைமைக்கு மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளார். அவர் என்ன எழுதியுள்ளார் என்பது எனக்கு தெரியவில்லை. அதை பற்றி தெரியாமல், நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது.மதுசூதனனுக்கும், எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. இருவரும் சுமூகமாக பேசி கொள்கிறோம். கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திலும் பேசிக்கொண்டோம்.அ.தி.மு.க.,வில் பிரச்னை என, தி.மு.க.,வினரும், தினகரனும் தான் சிண்டு முடியும் வேலையை செய்கின்றனர்.
அ.தி.மு.க.,வை பிளவுபடுத்துவதற்காக, தி.மு.க., மேற்கொள்ளும் எந்த திட்டமும், எங்களிடம் நடக்காது. இனியாவது சிண்டு முடிவதை நிறுத்தி கொள்ள வேண்டும்.பெரியார் விருதை, முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு வழங்கியது குறித்து, சமூக வலைதளங்களில் நாகரிகமற்ற தகவல்களை பதிவிடுகின்றனர்.இதுபோன்ற அநாகரிகமான பதிவுகளை, சிலர் அரசியல்ரீதியாக மேற்கொள்கின்றனர்.
எங்களின் அரசியல், நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை, தி.மு.க.,வின், ஐ.டி.,பிரிவினர், 'மீம்ஸ்' வழியே, சமூக வலைதளங்களில் கிண்டல் செய்கின்றனர்.நாகரிகமான மீம்ஸ் என்றால், என்னை பற்றி வந்தாலும், நானே ரசித்து என் குடும்பத்தினரிடம் காட்டுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvam Pillai - Dammam,சவுதி அரேபியா
15-ஜன-201814:51:31 IST Report Abuse
Selvam Pillai மது சூதனன் கூறியது போல் இந்த ஆளை முதலில் கட்சியை விட்டு தூக்கவேண்டும். இது கட்சி தலைமைக்கு கண்டிப்பாக தெரியும். ஆனாலும் ஓ பி எஸ்ஸால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஆகையால் தற்போது முன்பு இருந்த மக்கள் செல்வாக்கு இல்லை. இனி அவ்வளவுதான்.
Rate this:
Share this comment
Cancel
Sahayam - cHENNAI,இந்தியா
15-ஜன-201808:33:40 IST Report Abuse
Sahayam அதிமுகவை பிளக்க நீங்களே போதுமடா , மோடி இல்லையெனில் எப்போவோ உங்களை திமுக விரலை விட்டு ஆட்டி காலி செய்து இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
15-ஜன-201806:48:18 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இப்படி "பொட்டல் காட்டை" வச்சிக்கிட்டு "சிண்டு" பற்றி இவர் பேசுறது தான் கொஞ்சம் "சிக்கலா" இருக்கு.
Rate this:
Share this comment
Cancel
TamilReader - Dindigul,இந்தியா
15-ஜன-201806:13:09 IST Report Abuse
TamilReader அ.தி.மு.க.,வை பிளவுபடுத்த, நீ ஒரு ஆள் மட்டும் போதும்.... வேறு யாருமே தேவையில்லை தேவை இல்லாமல் DMK TTV மேல் பழி போட தேவை இல்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை