Air India To Be Split Into Four Separate Companies For Sale, Says Minister Jayant Sinha | ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு

Added : ஜன 16, 2018 | கருத்துகள் (49)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஏர் இந்தியா, Air India, விமானங்கள்,Flights,  விமான போக்குவரத்து துறை, Air Transport Department, அமைச்சர் ஜெய்ந்த் சின்கா,  Minister Jayant Sinha,விமான சேவை,Air Service,  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், Air India Express,

புதுடில்லி: கடன் சுமையில் சிக்கி தவிக்கும் 'ஏர் இந்தியா'வின் பங்குகளை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார்.

'ஏர் இந்தியா' நிறுவனத்துக்கு 140 விமானங்கள் உள்ளன. 41 சர்வதேச நகரங்களையும், உள்நாட்டில் 72 நகரங்களையும் இணைக்கிறது. மொத்த உள்நாட்டு சந்தையில் 14 சதவீத சந்தையை ஏர் இந்தியா நிறுவனம் வைத்திருக்கிறது. எனினும் ரூ.52,000 கோடிக்கும் அதிமான அளவுக்கு கடன் சுமை உள்ளதால், அந்த நிறுவனத்தில் அரசுக்கு உள்ள பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒப்புதல் வழங்கியது.

இது குறித்து விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெய்ந்த் சின்கா கூறியது, பெரும் கடன் சுமையில் திணறும் ஏர் இ்ந்தியாவின் பங்குகள் நான்கு நிறுவனங்களாக பிரித்து விற்பனை செய்யப்படும் அதற்கான பணிகள் இந்தாண்டு இறுதிக்குள் நிறைவு பெறும்..மேலும்
தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை ஒரே நிறுவனமாக விற்கப்படும் என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
17-ஜன-201800:31:08 IST Report Abuse
Murugan Arasiyal vaathikalin osi payaname intha kadan sumaiku kaaranam .
Rate this:
Share this comment
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
16-ஜன-201820:11:06 IST Report Abuse
GB.ரிஸ்வான் ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை....இதற்க்கு வெள்ளோட்டம் தான் ஹஜ் மானியம் ரத்து என நாடகம்
Rate this:
Share this comment
Cancel
16-ஜன-201816:24:24 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இவ்வளவு கடன் , இதற்கு முன்னரே பலமுறை அரசாங்கம் நிதி வழங்கி உள்ளது. அதையும் கணக்கிட்டால் எங்கேயோ போய்விடும். சீக்கிரம் விற்றுவிடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
16-ஜன-201816:07:24 IST Report Abuse
Kuppuswamykesavan ///என்னது நான்காக பிரித்து விற்பனையா ? சீனாவுக்கா அமெரிக்காவுக்கா ?/// - அட ஏங்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க்கனும்?. தமிழகத்திலேயே, சில புதிய பணக்காரர்கள் இருக்கிறார்கள்தானே?.
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
16-ஜன-201812:46:35 IST Report Abuse
Syed Syed இதே போல் இந்தியாவையும் வித்துட்டு போகதான் பிளான் பண்ணிட்டு இருக்காங்க
Rate this:
Share this comment
Cancel
syedabthayar - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஜன-201811:31:59 IST Report Abuse
syedabthayar ஏர் இந்தியாவை விக்கிறது சரி
Rate this:
Share this comment
Cancel
praj - Melbourn,ஆஸ்திரேலியா
16-ஜன-201811:29:36 IST Report Abuse
praj ஆக.. குஜராத்திலிருந்து நான்கு திருடர்கள் அந்த பங்குகளை வாங்குவார்கள்...
Rate this:
Share this comment
MALIK - FREMONT,யூ.எஸ்.ஏ
16-ஜன-201813:43:04 IST Report Abuse
MALIKஆஸ்திரேலியா போனா கூடா நீ நீயே தான் தெரியரே. திருடர்கள் வாங்கி அரசின் இழப்பை சரி செய்தால் தவறு இல்லையே.குஜராத் ஆட்கள் ஆனாலும், டெண்டர் முறையில் அதிகம் கொடுத்து தான் வாங்குவார்கள். இத்தாலிக்காரர்களின் சொந்தங்கள் வாங்க வேண்டும் என்றாலும் டெண்டர் மூலம் தான்.அப்படியே தூக்கி கொடுக்க அங்கே அந்த மண்ணு மௌன சாமி இல்லையே....
Rate this:
Share this comment
Cancel
mscdocument - chennai ,இந்தியா
16-ஜன-201811:24:55 IST Report Abuse
mscdocument நிறுவனங்கள் கூறி வரும் நஷ்டம் என்பது முதலீடு இழப்பு அல்ல. லாபத்தில் ஏற்படும் குறைவை இவர்கள் நஷ்டம் என்று கூறி வருகின்றனர். உதாரணமாக ஆண்டிற்கு 20 ஆயிரம் கோடி லாபம் வர வேண்டும் என நிறுவனம் ஒன்று நிர்ணயித்து இருந்தால் 10 ஆயிரம் கோடி மட்டுமே லாபம் கிடைத்திருப்பின், 10 ஆயிரம் கோடி நஷ்டம் என குறிப்பிடுவார்கள். இப்படி எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்காததை நஷ்டம் என குறிப்பிடுவர். எல்லாமே தனியார் மயமாகி விட்டால், அரசியல்வாதிகள் எதற்கு? அக்ரிமென்டில் கையெழுத்து போட்டு கொள்ளை அடிக்க மட்டுமா ?
Rate this:
Share this comment
16-ஜன-201816:19:18 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்ரொம்ப அறிவாளி சொல்லிட்டார். அடுத்து ஐநாவில் இருந்து கூப்பிடுகிறார்கள். அங்கும் போய் உங்கள் அறிவை காட்டலாம்....
Rate this:
Share this comment
Cancel
praj - Melbourn,ஆஸ்திரேலியா
16-ஜன-201811:24:11 IST Report Abuse
praj இதற்கென்றே ஒரு இலாகா அதெற்கென்று ஒரு அமைச்சர் ...?
Rate this:
Share this comment
Cancel
Veeran - Kanyakumari,இந்தியா
16-ஜன-201810:29:07 IST Report Abuse
Veeran இனி பெரிய ஒரு முதலாளி வருவான் பங்குகளை வாங்குவார் கொஞ்சம் மாதத்தில் லாபம் வரும் இதில் பாதி விமானங்கள் கூட இல்லாத பல ஏர்லைன்ஸ் லாபத்தில் தான் இயங்குகின்றன அரசுக்கு மட்டும் நஷ்டம்
Rate this:
Share this comment
Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா
16-ஜன-201811:14:24 IST Report Abuse
Kasiniventhan Muthuramalingamவேறு எந்த நாடும் அதன் தேசிய விமான நிறுவனத்தை தனியாருக்கு விற்காது .... ஐரோப்பாவில் பனியும், கடும் குளிருமென்றால் அரேபியா தீபகற்பத்தில் மழையின்மை , கடும் வெயில் நிலவும் .. ஆனால் இந்தியாவிலோ காஷ்மீரில் பணியென்றால் ,தமிழ்நாட்டில் வெயில் அடிக்கும். இத்தகைய மாறுபட்ட தட்பவெட்பத்திற்கு பழகியவர்கள் ... இந்திய விமானிகளே ...உலகின் சிறந்த விமானிகளுமாவார். ஏர் இந்தியா நிறுவனம் தானாக படிப்படியாக வளர்ந்து சிறந்த விமானிகளை, பொறியாளர்களையும் உருவாகியிருக்கிறது. தொடர்ந்து தனியார்களை ஊக்குவித்து அரசு நடவடிக்கைகளால் இந்த தேக்க நிலை எனலாம். ஏர் இந்தியா ராணுவத்தினருக்கு, முதியவர்களுக்கு,மாற்று திறனாளிகளுக்கு என்று பல சலுகை திட்டங்கள் கொண்டுள்ளது அவை அனைத்தும் இனி காற்றில் அறுந்து போன காத்தாடிகளாய் மறைந்து போகலாம்.நாட்டின் பல்வேறு தரப்பினருக்கும் பிரதிநித்துவம் கொடுத்து வேலை வாய்ப்புக்களை தந்து வந்தது எல்லா பொதுத்துறை நிறுவனங்களுக்கும் ஒரு சமூக பொறுப்புணர்வு உண்டு . உதாரணமாக ஒரிஸ்ஸாவில் கடும் பஞ்சம் என்றால் தானியங்களை பொதுத்துறை ரயில்கள் மூலம் அனுப்ப முடியும் ஏர் இந்தியாவினால் அது போன்ற தேசிய உதவிகள் கிடைத்து வந்தன.. இனி எத்துறைகள் தனியார்மயமாக்கப்படுமோ தெரியவில்லை. ................... ................ ராணுவம்,நீதித்துறை?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை