கலப்பு திருமணம் செய்யும் பிள்ளைகளிடம் பெற்றோர் 'மூச்!' Dinamalar
பதிவு செய்த நாள் :
கலப்பு திருமணம், சட்ட விரோதம், திருமணம், Marriage, உச்ச நீதிமன்றம் ,Supreme Court, கட்டப் பஞ்சாயத்து , சக்தி வாஹினி, அமிகஸ் கியூரி, நீதிபதி தீபக் மிஸ்ரா, Justice Deepak Mishra,

புதுடில்லி: 'கலப்பு திருமணம் செய்து கொள்பவர்கள் மீது, தாக்குதல் நடத்துவது சட்ட விரோதம். அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றமே நடவடிக்கை எடுக்க நேரிடும். வயதுக்கு வந்த ஆணுக்கும், பெண்ணுக்கும், தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப திருமணம் செய்யும் உரிமை உள்ளது' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால், கலப்பு திருமணம் செய்யும், 'மேஜரான' பிள்ளைகளிடம், பெற்றோர் அமைதி காக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

ஆராய்ந்து அறிக்கைகலப்பு திருமணம் செய்வோருக்கு எதிராக, கட்டப் பஞ்சாயத்து நடத்தி, கவுரவக் கொலைகள் நடப்பதை தடுக்கக் கோரி, 2010ல், 'சக்தி வாஹினி' என்ற அரசு சாரா அமைப்பு, பொதுநல மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ, 'அமிகஸ் கியூரி'யாக, மூத்த வழக்கறிஞர், ராஜு

ராமச்சந்திரனை நியமித்தது.கலப்பு மணம் புரியும் இளம் தம்பதியை, குடும்ப கவுரவத்துக்காக படுகொலை செய்வதையும், அவர்களை துன்புறுத்துவதையும் தடுக்க, வழிமுறைகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்கும்படி, அமிகஸ் கியூரியை, நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. மேலும், வழக்கு தொடுத்த, அரசு சாரா அமைப்பிடமும், கட்டப் பஞ்சாயத்து குழுக்களிடமும், நீதிமன்றம் கருத்துகளை கேட்டிருந்தது.இந்நிலையில், கலப்பு திருமணம் தொடர்பாக, அமிகஸ் கியூரி, உச்ச நீதிமன்றத்தில், நேற்று அறிக்கை சமர்ப்பித்தார். அப்போது, ஹரியானாவின், ரோதக், ஜிண்ட் மாவட்டங்களின் போலீஸ் கண்காணிப்பாளர்களும், உ.பி.,யின், பாக்பாட் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரும், நீதிமன்றத்தில்ஆஜராகினர்.

நீதிமன்றமே நடவடிக்கை


அமிகஸ் கியூரியின் அறிக்கையை பெற்ற

Advertisement

, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வு, நேற்று கூறியதாவது:

திருமண வயது அடைந்த ஒரு பெண்ணும், இளைஞனும், கலப்பு திருமணம் செய்து கொள்வதை, யாரும் கேள்வி கேட்க முடியாது. இந்த விஷயத்தில், கட்டப் பஞ்சாயத்து நடத்தி, அவர்களுக்கு தண்டனை அளிப்பது, அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, சட்டப்படி குற்றம்.
கலப்பு திருமணம்

செய்தவர்களை பாதுகாக்க, அரசு சட்டமியற்ற வேண்டும். கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவோரை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றமே அதற்கான நடவடிக்கையை எடுக்கும்.

இது போன்ற பஞ்சாயத்துகள் அதிகம் நடக்கும் மாநிலங்களான, ஹரியானா, உ.பி., ஆகியவற்றில் காணப்படும் உண்மை நிலவரத்தை, முதலில் ஆராய உள்ளோம்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil - Madurai,இந்தியா
18-ஜன-201802:16:01 IST Report Abuse

Tamilஹாதியா திருமணத்தை மட்டும் ஏன் பிரிச்சு வச்சீங்க , நாலு நீதிபதிகல் சொன்னதிலே எந்த தப்புமில்ல

Rate this:
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜன-201814:58:29 IST Report Abuse

Tamilanஎங்கோ ஒரு மூலையில் உள்ள யாரோ ஒரு சிலரின் அல்ப பிரச்சினைகள் ஏன், தங்களை சுற்றியுள்ள மக்கள் மற்றும் நூற்றுக்கணக்கான கோர்ட்டுகளை தாண்டி, உச்ச நீதிமன்றம் செல்லவேண்டும்?. அதை ஏன் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்?. அதைவைத்து நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் அனைவரையும் கட்டுக்குள் கொண்டுவரவேண்டும்? கட்டாயப்படுத்த வேண்டும்? இது ஜனநாயக நாடா அல்லது சர்வாதிகார நாடா?. இதெல்லாம் இந்திய அரசியல் சட்டத்தின் காமடிகளா, காட்டுமிராண்டித்தனங்களா?, முட்டாள்தனங்களா?, மூர்கத்தனங்களா? என்பது ஆள்பவர்களுக்கும் ஆண்டவனுக்கும் தான் வெளிச்சம்.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஜன-201814:50:49 IST Report Abuse

Endrum Indianவிரைவில் எதிர்பாருங்கள் இந்த மாதிரி நீதிபதியிடமிருந்து/ நீதிமன்றத்திடமிருந்து" ஆய் போயிட்டு வந்து ஏன் கை கழுவவில்லை என்று கேட்கக்கூடாது"

Rate this:
Baskar - Chennai,இந்தியா
17-ஜன-201814:39:07 IST Report Abuse

BaskarWill the court abolish Reservation Quota as it e based? Thanks

Rate this:
Ravichandran - dar salam ,தான்சானியா
17-ஜன-201814:32:46 IST Report Abuse

Ravichandranகலப்பு திருமண விவகாரம் இருக்கட்டும். குற்ற வழக்குகளை விரைவா விசாரித்து தீர்ப்பு சொல்ற வழிய பாருங்க. நாங்க பெத்த புள்ளைங்கள கரை சேர்க்க எங்களுக்கு தெரியும். கலப்பு திருமணங்கற பேருல நடக்குற திட்டமிட்ட ஆள் பிடி வேலையினு திரிஞ்ச அப்புறம் எங்க புத்தி சொல்ற படிதான் செய்வோம். இயற்கையான காதல் ஓகே தான் ஆனால் திட்டம் போட்டு செஞ்ச. அப்புறம் அதான்.

Rate this:
Ravichandran - dar salam ,தான்சானியா
17-ஜன-201814:27:32 IST Report Abuse

Ravichandranபாலகிருஷ்ணா காலேயே நாலுமணிக்கு கருத்து எழுத ஆரம்பிக்கிறீங்க ஆனா ஒன்னும் உருப்படியா இல்ல. சரித்திரமும் தெரியல ஒரு மண்ணும் புரியல. எதோ படிச்சி தொலையிறோம்

Rate this:
christ - chennai,இந்தியா
17-ஜன-201814:23:57 IST Report Abuse

christஇன்று காமத்துக்கும் ,காதலுக்கும் வித்யாசம் தெரியாமலே பல காதல் விளையட்டுகள் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. இனி பெண்ணை பெற்றவர்களின் கதி. வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு இருப்பது போல இருக்கும். பிள்ளைகள் தனக்கு பிடித்தவர்களுடன் சென்று திருமணம் செய்தால் அதுக்கு பெற்றோர்கள் எதற்கு ? சினிமாக்களும் காதலை நியாமாகவும் அது தவறு இல்லை என்பதை போலவும் காண்பிக்கின்றன. இனி தனி மனித ஒழுங்கீனம் என்பது கேள்வி குறியே ?

Rate this:
ரத்தினம் - Muscat,ஓமன்
17-ஜன-201814:15:25 IST Report Abuse

ரத்தினம்ஏதோ இந்துக்களில் மட்டும் தான் ஜாதி இருக்கு, அப்படின்னு வரிஞ்சு கட்டிக்கிட்டு வர்றவங்களே, கிறிஸ்டியன் மதத்திலே ரோமன் கத்தோலிக், பிராட்டஸ்டன்ட் , பெந்தகோஸ்ட், ஆர்தோடக்ஸ், எல்லாம் உண்டு. இஸ்லாத்தில் சன்னி, ஜியா பிரிவுகளுக்குள் ஆகாது. இருவரும் ஒருவரை ஒருவர் குண்டு வைத்து கொன்று கொண்டு இருக்கிறார்கள். வெள்ளை அரபிகள் கறுப்பி அரபியர்கள் வீட்டில் பெண் எடுப்பதில்லை. நமது நாட்டில் திருமணங்கள் நிலையாக இருக்கக் கூடியவை, ஆயிரங்காலத்து பயிறு என்பார்கள். கண்டதே கோலம் என்று வாலிப வயதில் தறி கேட்டு போய் எடுக்கும் முடிவுகள் நிறைய தவறாக முடிகின்றன. ஜாதி வெறி கூடாது . ஆனால் பெரியவர்கள் அனுமதியுடன் நடக்கும் திருமணங்கள், ஒரே இனத்தில் நடக்கும் திருமணங்கள் பெரும்பாலும் நிலைத்திருக்கும். வற்புறுத்தல் கூடாது என்பதில் மாற்று கருத்து இல்லை.

Rate this:
ரத்தினம் - Muscat,ஓமன்
17-ஜன-201814:00:50 IST Report Abuse

ரத்தினம்நாளைக்கு சின்ன, பெரிய பிரச்சனைன்னு எது வந்தாலும் கண்ண கசக்கிட்டு பிறந்த வீட்டுக்கு வந்து நிக்காம நேர ஜட்ஜ் அய்யாகிட்ட போகலாம் .

Rate this:
Karuthukirukkan - Chennai,இந்தியா
17-ஜன-201813:03:25 IST Report Abuse

Karuthukirukkanநன்றி நீதிபதிகளே .. காதல் யாரையும் யாரும் பண்ணலாம் .. வாழ்த்துக்கள் .. மண்ணாங்கட்டி மதங்கள் ஜாதி எல்லாம் உருவாவதற்கு முன்னரே மனிதனின் இயல்பான உணர்ச்சி காதல் .. இதற்கெல்லாம் உச்ச நீதிமன்றம் வந்து சொல்லும் அளவிற்கு தான் நம் நாட்டில் மனிதம் வளர்ந்திருக்கு என்று நினைக்கும்பொழுது வெட்க கேடாய் இருக்கிறது ..

Rate this:
மேலும் 59 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement