வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணாவிரதம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அறிவிப்பு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணாவிரதம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அறிவிப்பு

மதுரை ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த வைரமுத்து, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக, மணவாள மாமுனிகள் சன்னதியின் ஜீயர் சடகோப ராமானுஜர் தெரிவித்தார்.

ஆண்டாள்,Andal,  வைரமுத்து, Vairamuthu, ஸ்ரீவில்லிபுத்தூர், Srivilliputhur, உண்ணாவிரதம், இந்து அமைப்புக்கள், போராட்டம் , மணவாள மாமுனிகள் சன்னதி, ஜீயர் சடகோப ராமானுஜர் , விருதுநகர் ,Virudhunagar, ஜீயர்கள், மடாதிபதிகள், சிவாச்சாரியார்கள், வாழ்க இந்து நீதி தர்மம், மெரீனா, பேச்சுவார்த்தை, அறநிலை துறை, Hindu organizations,struggle, நாட்டுப்புற பாடல் ஆராய்ச்சியாளர், விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் , சுபாஷ் சந்திர மாலிக், ஆண்டாள் தேவதாசி,

சமீபத்தில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வைரமுத்துதெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துஉள்ளது. 'அவர் ஸ்ரீவி., ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்கவேண்டும்' என தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.மதுரையில் நேற்று அனைத்து இந்துஅமைப்புக்கள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜீயர் சடகோப ராமானுஜர் பேசியதாவது:
இறைவன், அனைவரையும் ஒன்றாக தான் பார்க்கிறான். நமக்குள் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்று தான் ஜாதி,

மதங்களை நம் முன்னோர்கள் தோற்று வித்தனர்.

உண்ணாவிரதம்ஆண்டாளை இழிவாகபேசிய வைரமுத்து,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும் வரை நான் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். நாளை(இன்று) காலை 9:00 மணி முதல் ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் சன்னதியில் உண்ணாவிரதத்தை துவங்குகிறேன். இனி யாரும் எந்த கடவுளைபற்றியும் அவதுாறாக பேசக்கூடாது, என்றார்.நாட்டுப்புற பாடல் ஆராய்ச்சியாளர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் பேசுகையில், ''ஆண்டாளை தேவதாசி என சுபாஷ் சந்திர மாலிக்என்பவர் கூறியதாக வைரமுத்து கூறினார்.

ஆனால், அவர் அப்படி எந்த ஒரு கருத்தையும் கூறவில்லை என்பதுஇன்று தெளிவாகிவிட்டது. ஆண்டாள் குறித்து தவறாக பேசியவருக்கு இறைவன் பெரிய துன்பத்தை கொடுத்துவிடக்கூடாது. இதுவரை செய்த பாவங்களும், இனி செய்யப் போகும்

Advertisement

பாவங்களும் தீயில் சாம்பலாகி போகட்டும்,'' என்றார்.

பிழைப்பிற்காகமதுரை கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் சொக்கலிங்கம் பேசுகையில், ''தவறாக பேசிய வைரமுத்து மன்னிப்பு கேட்காமல், வருத்தம் தெரிவிக்கிறார். சிலர் தமிழுக்காக உழைக்கிறார்கள் இவர்,பிழைப்பிற்காக தமிழை பையில் வைத்துக்கொண்டு திரிகிறார்,'' என்றார்.பிராமண சங்க மாநில தலைவர் நாராயணன், சின்மயா மிஷன் சிவயேகானந்தா, ஆர்.எஸ்.எஸ். பிரசாரக்குழு தங்கராஜ், பா.ஜ., மகளிரணி தலைவி மகாலட்சுமி, நகர் தலைவர் சசிராமன், மாநில செயற்குழு உறுப்பினர் ரவி பாலா மற்றும் பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (88)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Elango - Coimbatore,இந்தியா
09-பிப்-201811:21:53 IST Report Abuse

R Elangoமன்னிப்பு என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.

Rate this:
Sankar - Madurai ,இந்தியா
20-ஜன-201814:23:00 IST Report Abuse

Sankar இந்துக்கள் என்ன கிள்ளுக்கீரையா?

Rate this:
Sankar - Madurai ,இந்தியா
20-ஜன-201814:21:27 IST Report Abuse

Sankar வைரமுத்துவே மன்னிப்பு கேள் வெல்க மார்கழி புரட்சி

Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
18-ஜன-201803:58:52 IST Report Abuse

meenakshisundaramஅன்றாட அரசியலுக்கும் ஆன்மிகத்துக்கும் வேறுபாடு தெரியாத மக்கள் மாக்களே.இதில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை இகழ்ச்சியாக பேசுவது மிக தவறே.மூன்று வேளை தின்பவனுக்கு ஆன்மிகமோ வழிபாடோ தேவை இல்லை என்று கூற முடியுமா?இதில் ஒக்கி புயல்,அணு சக்தி போராட்டம் ,இதெல்லாம் எங்கே வந்தது.வலி பாடின்றி ஏவுகணை கூட வழி மாறித்தான் செல்லும்.

Rate this:
Tamil - Madurai,இந்தியா
18-ஜன-201802:11:10 IST Report Abuse

Tamilரஜினி கட்சி துவங்குறாருன்னு கவலைப்படாதீங்க

Rate this:
Tamil - Madurai,இந்தியா
18-ஜன-201802:04:46 IST Report Abuse

Tamilபட்டினியாக கிடந்தது தான் மின்சும்

Rate this:
kandhan. - chennai,இந்தியா
17-ஜன-201823:33:37 IST Report Abuse

kandhan.ஜாதி மதங்களை தோற்றுவித்தது யார் என்பதை ஜுயர் தெளிவாக சொல்ல முடியுமா? இதில் மனுதர்மம் மனிதநேயத்தை மீறி பார்ப்பான்களுக்கு ஆதரவாக இருக்கும் பட்சத்தில் பார்பணர் அல்லாத மற்ற ஜாதி மக்கள் ஒன்று சேர்ந்தால் நாடு என்னவாகும என்பதையும் சற்று சிந்திக்க வேண்டும் நாட்டில். விலைவாசி உயர்வு வேலையின்மை சரியான கல்வி இல்லாமல் பாமரமக்கள் தவிக்கிரார்கள் இந்த நிலையில் உங்கள் உணணாவிரதம் தேவையற்றது பேசி தீர்கவேண்டிய விசயம் இது மக்கள் மன்றத்தில் நேரடி விவாதம் நடத்தி தீர்வு காணுங்கள பிரச்சனை தீர்ந்து விடும்

Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
17-ஜன-201818:56:23 IST Report Abuse

g.s,rajanKaruna is now facing various punishments given by the God for his sin, even he cannot swallow and taste the food and many more ,vairamuthu will follow the same like Karuna for insulating the God. g.s.rajan, Chennai.

Rate this:
Venkat Rangai - Chcago,யூ.எஸ்.ஏ
17-ஜன-201818:54:38 IST Report Abuse

Venkat Rangaiவைரமுத்து ஒரு கிருத்துவர் - இயேசுவின் கன்னி பிறப்பை பற்றி பகுத்தறிவு வாதம் பண்ண முடியுமா?

Rate this:
Muralidaran - அ,இந்தியா
17-ஜன-201818:32:45 IST Report Abuse

Muralidaranவெல்க மார்கழி புரட்சி

Rate this:
மேலும் 78 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement