ஆறு மாதத்தில் சட்டசபை தேர்தல் வந்தாலும் 'ரெடி' ! Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ரஜினி,Rajii, தனிக்கட்சி, ஆன்மீக அரசியல் , aanmeega arasiyal ,ரஜினி மன்றம், rajini mandram, நடிகர் கமல்,Actor Kamal,  சட்டசபை தேர்தல், Assembly Election,நடிகர் ரஜினிகாந்த் ,Actor Rajinikanth, ரஜினி மக்கள் மன்றம், rajini makkal mandram, ரஜினி அரசியல் , புதியக்காட்சி ,

சென்னையில், நேற்று நடந்த விழாவில், நடிகர் கமலுடன் பங்கேற்ற நிலையில், ''ஆறு மாதத்தில் சட்டசபை தேர்தல் வந்தாலும், அதை சந்திக்க தயார்,'' என, நடிகர் ரஜினிகாந்த் மனம் திறந்து பேசினார். நேற்றைய விழாவில் கமல் கலந்து கொண்டதால், கமலுடன் இணைந்து செயல்படுவது குறித்த கேள்விக்கு, 'காலம் தான் பதில் சொல்லும்' எனக் கூறி, நழுவினார்.

ரஜினி,Rajii, தனிக்கட்சி, ஆன்மீக அரசியல் , aanmeega arasiyal ,ரஜினி மன்றம், rajini mandram, நடிகர் கமல்,Actor Kamal,  சட்டசபை தேர்தல், Assembly Election,நடிகர் ரஜினிகாந்த் ,Actor Rajinikanth, ரஜினி மக்கள் மன்றம், rajini makkal mandram, ரஜினி அரசியல் , புதியக்காட்சி ,


நடிகர் ரஜினிகாந்த், தனிக்கட்சி துவங்கப் போவதாக, 2017 டிச., 31ல் அறிவித்தார். அதன்பின், ரசிகர்களையும், பொது மக்களையும் இணைப்பதற்கு வசதியாக, 'ரஜினி மக்கள் மன்றம்' என்ற இணையதளத்தையும்,

'மொபைல் ஆப்' வசதியையும் துவக்கினார். அதில், ஏராளமானோர் உறுப்பினராகி வருகின்றனர். அவர்களின் முழு விபரங்களும் சேகரிக்கப் படுகின்றன. பதிவு செய்யப்படாத ரசிகர் மன்றங்களை, பதிவு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.கட்சி பெயர், சின்னம் ஆகியவற்றை உருவாக்கும் பணியும், ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது.


ரஜினி, முழு வீச்சாக அரசியல் கட்சி துவங்க, நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், திரை உலகில் அவருக்கு போட்டியாளரான கமல், அரசியலிலும் போட்டியாளராக கள மிறங்க உள்ளார்.அவர், பிப்., 21ல், புதியகட்சி துவக்கி, தமிழகம் முழுவதும், சுற்றுப்பயணம் செல்ல உள்ளதாக, நேற்று முன்தினம் அறிவித்தார்.


பிரபல நடிகர்கள் இருவரும், அரசியல் கட்சி துவக்கப் போவதாக அறிவித்திருப்பது, அரசியல் வட்டாரத்திலும், திரையுலக வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி, அரசியலுக்கு வரப் போவதாக

Advertisement

அறிவிக்கும் முன், கமல், அரசின் செயல்பாடு களை விமர்சித்து, தான் அரசியலுக்கு வரப் போவதை உணர்த்தினார். அவர், அரசியல் பிரவேசத்தை அறிவிப்பதற்கு முன், ரஜினி அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். அதே வேகத்தில், கமலுக்கு முன், புதிய கட்சியை ரஜினி துவக்குவாரா என்ற எதிர்பார்ப்பு, அவரது ரசிகர்களிடம் ஏற்பட்டு உள்ளது.


இந்த சூழ்நிலையில், நேற்று சென்னையில், 'அனிமேஷன்'தொழில்நுட்பத்தில் உருவாகும், கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு பட துவக்க விழா நடந்தது. இவ்விழாவில், புதிய கட்சி துவங்க உள்ள, நடிகர்கள் ரஜினி, கமல் இருவரும் பங்கேற்றனர்.இவ்விழாவில் பங்கேற்பதற்காக, நடிகர் ரஜினி, தன் வீட்டில் இருந்து புறப்பட்டபோது, நிருபர்களை சந்தித்தார்.


அப்போது, அவர் கூறுகையில், ''எம்.ஜி.ஆரின் கொள்கைகளை, அ.தி.மு.க.,வினர் ஓரளவு பின்பற்றுகின்றனர். அரசியலில், கமலுடன் இணைந்து செயல்படுவது குறித்து, காலம் தான் பதில் சொல்லும். தற்போதைய சூழலில், ஆறு மாதத்தில் தேர்தல் வந்தாலும், சந்திக்க தயாராக உள்ளேன்,'' என்றார்.அவருடைய அறிவிப்பு, நேற்று முதல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும், பலத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


ஆறு மாதத்தில் தேர்தலைச் சந்திக்க வேண்டுமென்றால், கூடிய விரைவிலேயே கட்சியை உருவாக்கி, அறிவிக்க வேண்டும். இதுவரை ஆமை வேகத்தில் செயல்பட்டு வந்த ரஜினி, சுறுசுறுப்பாக கட்சிப் பணிகளை முடுக்கி விடுவார் என, ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (92)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
MS -  ( Posted via: Dinamalar Android App )
18-ஜன-201821:47:19 IST Report Abuse

MSகாத்திருக்கிரோம் தங்கள் கண்ணசைவிற்காக, எம் தலைவா.

Rate this:
18-ஜன-201820:32:15 IST Report Abuse

நாசிர் உசைன் - தமிழன்டா 6 மாசத்துல தேர்தல் அப்போதான் நாங்க நம்புவோம்.

Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
18-ஜன-201818:48:21 IST Report Abuse

Bhaskaranஒரு காலத்தில் போதையில் மதுரை ஏர்போர்ட் கண்ணாடியை உடைத்து ரகளை செய்தவர் திடிரென்று சாமியாராகப் போய்விடுவதாக சொல்லி பரபரப்பு கொடுத்தவர் ராகவேந்திரா கல்யாண மண்டபம் ரசிகர்களுக்கு எழுதிவைத்து விடப்போவதாக அதன் திறப்புவிழாவில் பொய் கூறியவர் இம்மாதிரி மனிதரையம் தமிழகமக்கள் நம்புவது வேதனைதான் ஒருவேளை திருந்தி மக்களுக்கு நன்மை செய்ய நினைத்தால் கல்யாணமண்டபத்தை மக்கள் நன்மைக்கு உதவும் வகையில் டிரஸ்ட் ஆரம்பித்தபின் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்குமே

Rate this:
skv - Bangalore,இந்தியா
18-ஜன-201819:44:03 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>தமிழனுக்கள் எப்போதுமே முக்கால் லூசு முழுபயித்தியம் என்னும் ரகம் சினிமாபயித்திம்பிடிச்ச வெறியணுக்களே அதிகம் முகவின் உபாயம் 2 /3 தமிழனுக்கா டாஸ்மாக்கிலேதான் வாசம என்றநிலை உருப்படியான ஜனத்து க்கு இதெல்லாம் கவலையே இல்லே எவன் ஆண்டாளும் தன நிலை மாறாது என்று திடமான நம்பிக்கை ,மக்களே விழித்துக்கொள்ளனும் திக திமுக அண்ட் அதிமுகவுக்கு கல்தா கொடுக்கவேண்டும் .அதுலேயும் எந்த சினிமா காரனும் ஆள வரவேண்டாம் என்று உறுதி யா இருக்கவேண்டும் மார்க்கெட்போனால் முதல்வனா ஆயிட்டு மக்களை ஏமாற்றானும் பயித்தியங்கள் போல பல தமிழனும் அதுகளுக்கு காவடி துக்க என்னய்யா ஆட்ச்சி இருக்கு நல்லாட்ச்சி காமராசர் ஐயாகூடவே செத்துப்போச்சு...

Rate this:
மேலும் 88 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X