வைரமுத்து சொன்ன பொய்: ஆதாரப்பூர்வமாக அம்பலம்| Dinamalar

வைரமுத்து சொன்ன பொய்: ஆதாரப்பூர்வமாக அம்பலம்

Updated : ஜன 19, 2018 | Added : ஜன 18, 2018 | கருத்துகள் (404)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
ஆண்டாள், ஸ்ரீரங்கம், வைரமுத்து,மாலிக்

சென்னை: ''ஆண்டாள் தேவதாசியாக வாழ்ந்தவர்'' என்று அபாண்டமான ஒரு குற்றச்சாட்டை பொதுமேடையில் வைத்த வைரமுத்துவின் கருத்துக்கு, ஆதாரப்பூர்வமான மறுப்பு கிடைத்துள்ளது. அவர் கூறியது மாபெரும் பொய் என்பதும் அம்பலமாகி உள்ளது.
ஜன.,7ம் தேதி ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், 'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் வைரமுத்து பேசும் போது, அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம், சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராக கொண்டு வெளியிட்ட, indian movement: some aspects of dissent, protest and reform என்ற ஆய்வு நுாலில், ஆண்டாள் பற்றி இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டு இருக்கிறது. Andal was herself a devadasi who lived and died in srirangam temple என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது என்று கூறினார்.


ஆய்வே இல்லை:

ஆனால், அவர் குறிப்பிட்ட எஸ்.சி.மாலிக் புத்தகத்தை தேடும்போது இண்டியானா பல்லைக்கழகம் அப்படி ஒரு ஆய்வை நடத்தவேயில்லை என்பது தெரிய வந்தது. 1975ம் ஆண்டு சிம்லாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ட்ஸ் ஸ்டடீஸ் என்ற அமைப்பு ஒரு கருத்தரங்கை நடத்தியது. அதில், 45 இந்திய வரலாற்று அறிஞர்கள் பங்கேற்று, 26 கட்டுரைகளை வெளியிட்டனர். அந்த கட்டுரைகளின் தொகுப்பு பின்னர் Indian movements: Some Aspects of dissent protest and reform என்ற பெயரில் புத்தகமாக வெளியானது.
அந்த கட்டுரைகளை தொகுத்தவர் தான் எஸ்.சி.மாலிக்; எழுதியவர் அல்ல. அவரோ, இண்டியானா பல்கலையோ ஆண்டாள் பற்றிய ஆய்வை நடத்தவில்லை. அந்த புத்தகத்தில் ஆண்டாள் பற்றி, bhakti movements in south india என்ற கட்டுரையில் தான் ஆண்டாள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை எழுதியவர்கள் இந்தியாவை சேர்ந்த பேராசிரியர்கள் எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவன். அதில் தான், Andal was herself a devadasi who lived and died in the Srirangam temple என்ற வரி இடம் பெற்றுள்ளது. இதற்கு, History of sri vaisnavas என்ற பெயரிலான டி.ஏ. கோபிநாத் ராவ் என்பவரின் புத்தகத்தின் ஐந்தாம் பக்கத்தில் தான் இதற்கான ஆதாரம் இருப்பதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த புத்தகத்தின் ஐந்தாம் பக்கத்தில், ஆண்டாளின் முழு கதையும் இடம் பெற்றுள்ளது. பெரியாழ்வாரின் கனவில் கடவுள் தோன்றி ஆண்டாளை மணக்க சம்மதித்தாகவும், அவரை ஸ்ரீரங்கம் அழைத்து வரும்படி ஆணையிட்டதாகவும் அதில் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி பெரியாழ்வார் ஆண்டாளை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அழைத்து சென்று பின்னர் தனியே ஸ்ரீவில்லிபுத்துார் திரும்பினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பக்கத்தில் தேவதாசி என்ற வார்த்தையே இல்லை. பிறகு எப்படி ஆண்டாளை தேவதாசி என்று நாராயணன் குறிப்பிட்டார் என்று அவரிடம் தந்தி டிவி நிருபர் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் அளித்த பேட்டி:
கே: அந்த கட்டுரையில் ஆண்டாள் ஸ்ரீரங்கம் கோவிலில் வாழ்ந்த ஒரு தேவதாசி என குறிப்பிடப்பட்டுள்ளதே? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது?
நாராயணன்: ஆண்டாள் தேவதாசி என்பதற்கான பிரத்யேக குறிப்புகள் இல்லை.
கே: உங்களுடைய ஆய்வில் ஆண்டாள் தேவதாசி என்பதற்கான ஆவணங்கள் ஏதாவது கிடைத்ததா?
நாராயணன்: இல்லை. அது போன்று குறிப்பிட்ட ஆதாரங்கள் ஏதும் இல்லை.
கே: ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கல்வெட்டுகளிலோ, வேறு ஏதேனும் ஆவணங்களிலோ ஆண்டாள் தேவதாசி என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதா?
நாராயணன்: இல்லை. வாய்மொழியாக சொல்வதை வைத்து தான் பார்க்க வேண்டி உள்ளது. எழுத்துப்பூர்வமாக எதுவும் இல்லை.
கே: நேரடி ஆதாரங்கள் ஏதும் இல்லாத நிலையில், ஒரு புரிதலில் அந்த முடிவுக்கு வந்துள்ளீர்கள் என சொல்லலாமா?
நாராயணன்: இது ஒரு அனுமானம் தான்.
இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.


வைரமுத்துவின் பதில் என்ன:

ஆண்டாள் தேவதாசி என்று சொல்லப்படுவதற்கு நேரடி ஆதாரம் இல்லை. அது அனுமானத்தின் பேரில் தான் என்பது தான் வைரமுத்து குறிப்பிட்ட கட்டுரையின் ஆசிரியர் தரும் விளக்கம்.

இது குறித்து ஒரு வைணவ அறிஞர் கூறும்போது, ‛‛எந்த ஆதாரமும் இல்லாத ஒரு தகவலை, ஆதாரப்பூர்வ தகவலைப் போன்று வைரமுத்து பேசி உள்ளார். அதுவும், நடக்காத ஒரு ஆய்வை, நடத்தாத ஒரு வெளிநாட்டு பல்கலைக்கழகத்தின் பெயருடன் அவர் எவ்வாறு குறிப்பிட்டார்.
அக்கட்டுரையை எழுதிய நாராயணன் என்பவரே, ஆண்டாள் பற்றிய செவி வழி செய்தியை மட்டுமே குறிப்பிட்டதாக கூறியுள்ளார். இப்படிப்பட்ட, ஆதாரமற்ற ஒரு தகவலை வைரமுத்து ஏன் பரப்பினார். இதன் மூலம் வேண்டுமென்றே ஆண்டாளை வைரமுத்து அசிங்கப்படுத்தி உள்ளார் என்பது புலனாகிறது. அவரது உள்நோக்கமும் புரிகிறது. கடவுளாக வணங்கும் ஒருவரைப் பற்றி, மாபெரும் பொய்யை பேசிய வைரமுத்து, இனிமேலாவது பொய் சொன்னேன் என ஒப்புக்கொள்வாரா. பகிரங்க மன்னிப்பு கேட்பாரா'' என்று கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (404)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh Tranz - perambalur,இந்தியா
24-ஜன-201810:16:38 IST Report Abuse
Pugazh Tranz சரியாக தெரியாமல் உளறக்கூடாது
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
23-ஜன-201813:21:58 IST Report Abuse
மலரின் மகள் வைரமுத்து போன்றோர், தேவதாசி முறைகளை சுதந்திர காலத்தில் அறவே ஒழிக்க பாடுபடுத்திய நல்லோர்கள் சான்றோர்கள் பற்றி படித்தாலும் அது அவர்கள் வக்கிர புத்தியில் ஏறாது போலும். புனிதமானவர்களை இன்றைய காலகட்டத்து சொற்றொடர் கொண்டு கேவலமாக சித்தரித்தது, வன்மையாக கண்டிக்க தக்கது. வைரமுத்து அதற்காக மன்னிப்பு கோரி தான் செய்தது மிகவும் தவறுதான், தவறாக புரிந்து கொண்டவன், என்று குற்றத்தை ஒப்பு கொள்ளவேண்டும். அவனுக்கு இன்று யார் வக்காலத்து வாங்குகிறார்கள் என்றால் இந்து மத கடவுள் எதிர்ப்பு கொண்டோர் தான். தமிழகம் சுபிக்ஸம் அடையவேண்டும். மும்மாரி மழை பொழிய வேண்டும். ஆண்டாள் ராமானுஜம் தழைக்க வேண்டும். பொலிக பொலிக தமிழகம் பொலிக. நல்லது நடக்கும்.
Rate this:
Share this comment
Pathu - tirupur,இந்தியா
24-ஜன-201810:28:34 IST Report Abuse
Pathuவைரமுத்து கூறிய அந்த புத்தகத்தில் இல்லை என்றாலும்,மற்றும் ஒரு புத்தகத்தில் உள்ளதை ஒரு தரப்பினர் ஒத்துக்கொள்கிறார்கள் அவ்வாறு இருக்கும்போது ,வைரமுத்து கூறியதை மட்டும் பெரிது படுத்தும் இவர்கள் ஏன் திரு நாராயணன் எழுதியதை கவனத்தில் எடுத்து அவரை கன்னிக்கவில்லை . ....
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
23-ஜன-201813:06:12 IST Report Abuse
மலரின் மகள் வைரமுத்து போன்றோர் போலியானவபர்கள் என்ற வாதம் என்றோ சொல்லப்பட்டது. பின்னாளில் தான் அவர் கண்ணதாசனை படித்து அவர் போன்று எழுதுவதற்காக காப்பி அடித்தவர். அத்தான் எண்ணத்தைத்தான் என்று தான் தான் என்று வரும் பாடலை அவர் விரும்பி அதன் படியே எழுதுவதற்கு காப்பி அடிக்க கற்று கொண்டு வந்தவர். அவர் மனைவி பொன்மணி வைரமுத்து திறமையானவர். அவர் எழுதி தந்த கவிதைகளை தனது பெயரில் பிரசுரித்தவர், குறிப்பாக சினிமா காதல் பாடல்கள். வைரமுத்து ஆணாதிக்கம் கொண்டவர் என்பதால் இவரால் பெண்ணின் மனஓட்டம் காதல் பற்றி எழுதுவதற்கு முடியவே முடியாது. இவர் கவிதையில் பெண்ணின் இயல்புகளை சரியாக எழுத தெரியாதவர். மனைவியால் உயரப்பெற்றவர் என்று சொல்லி கேள்வி பட்டிருக்கிறார்களாம் பலர். பின்னாளில் இவர் நிறைய அரைகுறையான போலியான செய்திகளை உண்மை கருத்து என்று நினைத்து படித்தவர், நிறைய படித்து இவர் வியாபார புத்தகங்களை தனக்குரிய பாணியில் எழுதியவராம். காதல் என்பதை விட காமத்தில் இவருக்கு ஆர்வம் உண்டு என்று இவரின் புத்தகங்களை படித்தவர்கள் உணர்வதாக சொல்கிறார்கள் சிலர். உதாரணமாக காட்டில் சிங்கம் எத்துணை முறை புணரும், என்பதை பற்றி இவர் எழுதி இருக்கிறார். இது எதற்கு இதனால் யாருக்கு என்ன பலன் என்று இவரை அறிய முயன்றவர்கள், இவரின் பாணியிலேயே ஒரு ஆசிரியரின் புத்தகம் அவரின் மனதை வெளிக்காட்டும் என்று இவர் கூறிய மொழியையே காட்டுகிறார்கள். விளக்கம் வேறு தருகிறார் செய்த தவற்றை மறப்பதற்கு. அந்த அறிஞர் கூறினார் இந்த அறிஞர் கூறினார் என்று அடுத்தவர் மீது பழிபோட்டு. ஆண்டாளை இவர் தனது தாய் என்று போற்றுகிறாராரம். தமிழ்பாளை அவரிடம் இருந்து உண்டாராம் என்று கூறிவிட்டு அவரை தவறான முறையில் சித்ததரிக்கிறார். நாய்க்கு புத்தி எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்ளவேணுமா? லூசுக்கள் பணத்திற்காக எப்படியும் பேசுவார்கள் போல.
Rate this:
Share this comment
Kurshiyagandhi - Arimalam,இந்தியா
24-ஜன-201810:23:24 IST Report Abuse
Kurshiyagandhiமிகவும் அருமை...
Rate this:
Share this comment
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
22-ஜன-201818:51:10 IST Report Abuse
Dr.C.S.Rangarajan தமிழை ஆண்டாள் என்ற ஆராய்ச்சி கட்டுரையில் கவிப்பேரரசு ஆராய்ச்சியை முறையாக செய்யாததால் வந்தவினை. எப்பொழுது நம் பக்கம் பலமிழந்து போகிறதோ, அல்லது பலமிழந்து போகக்கூடுமோ என்ற ஐயம் நம்மை அடிமைப்படுத்திவிடுகிறதோ, அப்பொழுது பலவீனத்தை பலப்படுத்துவதாக தப்புக்கணக்குக்கு மேலாக யாரை அல்லது எத்தனை தாக்கினால் நம் இல்லா நிலைமையை இருட்டடிக்க செய்யமுடியும் என நினைக்கத்தோன்றும்.மதுஅருந்தாமலேயே மதுஅருந்தியநிலையில் தன்னையும், தன்னறிவையும் பறிகொடுத்து பலர் பேசியது தமிழினத்திற்கு பெருமை சேர்ப்பதாக தாறுமாறாக பேசியவர்கள் கருதலாம்.தமிழ்நாட்டிற்கு தலைகுனிவில்லை என யாராவது கூறமுடியுமா?
Rate this:
Share this comment
Cancel
Kapali Nagarajan - Chennai,இந்தியா
21-ஜன-201816:01:38 IST Report Abuse
Kapali Nagarajan மகாபாரதத்தில் ஒரு காட்சி. கந்தர்வன் ஒருவன் துரியோதனனை தூக்கிச் சென்றுவிடுவான். தருமர் தன் தம்பிகளை அழைத்து அவனை மீட்டுக்கொண்டு வர பணிப்பார், பீமன் ' அண்ணா உனக்கு என்ன கிறுக்கா? துரியோதனனை ஒருவன் தூக்கினால் நாம் கொண்டாட வேண்டாமா' என்பான்.தருமர் கூறுவார் ' நமக்குள் பிரச்சினை என்றால் நாம் ஐவர். அவர்கள் நூற்றுவர். வெளியிலிருந்து பிரச்சினை என்றால் நாம் நூற்று ஐவர்... நீ போகிறாயா அல்லது நானே போய் அவனை காப்பாற்ற வேண்டுமா. என்று கேட்பார். ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி என்று கேட்பார் பாரதி. இந்து மத சாதிகளுக்கிடையே இன்னமும் பிரச்சனைகள் உள்ளன. ஆனால் ஐம்பது அண்டுகளில் நிலைமை எவ்வளவோ மாறி உள்ளது. காலமும் கல்வியும் உலகே ஒரே கிராமம் என்ற அறிவும் வளர வளர வேறுபாடுகள் நிச்சயம் மறையும். வேறுபாடுகள் மறந்து விட்டால் நம் பிழைப்பு என்னாவது என்ற அச்சத்தினால் ஜாதி மத துவேஷத்தை விசிறி விட்டு அதில் குளிர் காய நினைக்கும் தீய சக்திகள் இரண்டு. அகில இந்திய அளவில் காங்கிரஸ். தமிழக அளவில் கழகங்கள். இந்த சக்திகள் கொள்ளையடித்து சேர்த்துள்ள சொத்து எவ்வளவு என்று நினைத்துப் பாருங்கள். வியாதி இருக்கும் வரைதான் பக்டீரியா உயிர் வாழ முடியும். எனவே வியாதி தீர பக்டீரியா ஒரு நாளும் விரும்பாது. நம்மை பிடித்த பக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிகள் தான் இந்த தீய சக்திகள். இவர்களுக்கு சமூக அக்கறை உண்டு என்று இன்னமுமா நம்புகிறீர்கள். இந்த சக்திகளின் ஆஸ்தான விகடகவிதான் வைரமுத்து போன்றவர்கள். அந்தணர், மறவர், வன்னியர், பட்டியல் இனத்தார், கௌண்டர், பிள்ளை இப்படி நமக்குள் ஆயிரம் சாதி இருந்தாலும் அனைவரும் இந்துக்களே அல்லவா. நம் தெய்வத்தை ஒருவன் கொச்சை படுத்தும் பொது சும்மாயிருக்கலாமா. இதை எதிர்த்து முதல் குரலை ஒருவன் கொடுத்தால் அவனை பார்த்து நீ பார்ப்பனன் உன்னோடு தோள் கொடுக்க முடியாது என்று கூறுவோமானால் அது அறிவார்த்த செயலா. ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். ஆண்டாளை ஏசியவரும் ஒரு வகையில் கூத்தாடி தானே. பெண்களின் காது மூக்கை வர்ணித்து அர்த்தமற்ற பாடல்களை பாடி திருமணமண்டபம் முதல் பல சொத்துக்களை சேர்த்துக் கொண்டது தவிர அவர் செய்த சமூக தொண்டு என்ன. எப்படியோ போய் தொலையட்டும். அவருண்டு அவர் பிழைப்பு உண்டு என்று இருந்தால் அவரை பற்றி நாம் பேச போகிறோமா
Rate this:
Share this comment
Endless - Chennai,இந்தியா
22-ஜன-201817:21:29 IST Report Abuse
Endlessமிக மிக அழகான அருமையான கருத்து... வாழ்த்துக்கள் திரு கபாலி நாகராஜன் அவர்களே......
Rate this:
Share this comment
kandhan. - chennai,இந்தியா
23-ஜன-201809:50:52 IST Report Abuse
kandhan.இன்று தமிழை யாரும் வளர்க்கவேண்டாம் அது தானாகவே வளரும் நம் மக்களுக்கு போதுமான கல்வி அறிவில்லாமல் போனதால்வந்த விளைவு இது...... மக்களே சிந்தியுங்கள் உங்களுக்கு உண்மை புரியும் கந்தன் சென்னை...
Rate this:
Share this comment
Cancel
vaishnavi - nainital,இந்தியா
21-ஜன-201815:49:13 IST Report Abuse
vaishnavi ஒரு ஆத்திகன் இதைப்பற்றி பேசியிருந்தால் தான் நாம் கவலைப்படவேண்டும் . வைரமுத்து ஒரு நாத்திகர் அவருக்கு தெரிந்த லக்ஷணம் இது தான் .இதற்கான பலனை கடவுள் அவருக்கு கொடுப்பார். இந்த சாக்கடையை இனிமேலும் கிளறவேண்டாம் என்பதே என் கருத்து .
Rate this:
Share this comment
Ramesh - Kerala,இந்தியா
22-ஜன-201815:36:22 IST Report Abuse
Rameshஇப்படியே கடவுள் பார்த்து கொள்ளட்டும் கடவுள் பார்த்து கொள்ளட்டும் என்று நாம் அமைதியாக இருப்பதால் தான் இந்த திராவிட ஓநாய்கள் ஊளை விட்டு கொண்டே திரிகின்றன திருப்பி அடித்தல் தான் ஓநாய்களின் அலறல் குறையும்........
Rate this:
Share this comment
Cancel
Kapali Nagarajan - Chennai,இந்தியா
21-ஜன-201815:16:14 IST Report Abuse
Kapali Nagarajan ராஜாவை விமர்சனம் செய்ய ஆரம்பித்த பலர் அவரது ஜாதியை இழுத்து பேச/ஏச ஆரம்பித்தனர். அந்தணர் மேல் உள்ள காழ்புணர்ச்சியை பலரும் கொட்டி தீர்த்தனர். கெட்ட வார்த்தைகளை வீசிய சாக்கடைகளை பற்றி நாம் குறிப்பிடவில்லை. படித்த விவரமுள்ள சிலர் கூட துவேஷ நெருப்பை கொட்டியிருந்தனர். அவர்களுக்கு சில வார்த்தைகள். கவலை வேண்டாம். நீங்கள் கண்ணால் பார்க்கக் கூட விரும்பாத அந்தணர் இன்னும் சில காலம் கழித்து இந்த தமிழ் கூறும் நல்லுலகில் காணப்படவே மாட்டார்கள். ஆக்ராஹாரங்களை இனி அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தான் காணமுடியும் என்ற நிலை தோன்றி விட்டது. ஒரு அந்தணக் குழந்தை பிறந்தவுடன் birth certificate க்கு அடுத்து வாங்கப் படுவது ஆதாரும், passport உம் தான். மாம்பலம் போன்ற அந்தணர் நிறைந்த பகுதிகளில் எங்கெங்கும் கிழங்கள் தான் தட்டு தடுமாறி போய்கொண்டிருக்கின்றன. இதுகளும் ticket வாங்கி கொண்ட பிறகு, the whole குண்டு சட்டி will be available for you. நீங்கள் ஆனந்தமாய் குதிரை ஓட்டலாம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இந்த நிலை தோன்றியது. “உன் பாட்டன் அதை செய்தான். முப்பாட்டன் இதை செய்தான். எனவே உனக்கு இனி வாய்ப்புகள் மறுக்கப்படும்” என்று கூறிய கூட்டத்தின் கையில் ஆட்சி அதிகாரம் கிடைத்தது. பாட்டன் செய்த தவறுக்காக பேரனை தண்டிக்கும் பகுத்தறிவு கலாச்சாரம் தோன்றியது. எழுபது எண்பதுகளில் அந்தணன் பட்ட துன்பம் கொஞ்சம் நஞ்சமில்லை. அந்தணன் திக்கித்து போய் விடவில்லை. அவன் செய்த முதல் காரியம். கோமணத்தை இறுக்கி கட்டிகொண்டான். அதற்கு முன் இருந்த அந்தணன் ஐந்தாறு குட்டிகளாவது போடுவான். இவன் ஒன்றிரண்டோடு நிறுத்தினான். கு.க. பிரசாரம் அந்தணனுக்கு தேவையே இல்லை. சுற்றிலும் நடப்பதை பார்த்து உடனே பாடம் கற்றுக் கொள்வதில் அந்தணனை மிஞ்ச முடியாது. நல்லகாலம் தனியார் கல்வி கூடங்கள் சீரழிந்து விடவில்லை. வயிற்றை கட்டி வாயை கட்டி பிள்ளைகளை படிக்க வைத்தான். கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. கற்றான். இந்த நாட்டை விட்டே வெளியேறத் துவங்கினான். Google CEO சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா. ரூபாய் முன்னூறு கோடிகளுக்கும் மேல். ரசாயனத்தில் நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமனின் பெருமைகளையோ சொல்லி முடியாது. இப்படி எத்தனையோ அந்தணர்கள் இங்கு வாய்ப்புகள் மறுக்கப் பட்டு வெறுத்துப் போய் இந்த நாட்டை விட்டு வெளியேறி வெளி மண்ணில் கொடி நாட்டி வருகின்றனர் மேற்கூறிய இருவரும் அந்தணர்களாக இருக்கக் கூடும் என்ற யூகம் மட்டுமே எனக்கு இருந்தது அதை confirm செய்து கொள்ள வலைதளங்களை தேடு தேடு என்று தேடினேன். தாங்கள் அந்தணர்கள் என்ற குறிப்பை அவர்கள் எங்குமே காண்பிக்கவில்லை. ஜாதி பற்றி பேசுவது அநாகரீகம் என்று அந்தணர் கருதுகின்றனர். அனால் மற்றவரோ சிறிதும் கூச்சமின்றி ஜாதி பற்றி பேசுகின்றனர். இதற்கு காரணம் பொறாமையும், அளவற்ற தாழ்வு மனப்பான்மையுமே. கொஞ்சம் பொறுங்கள் குண்டு சட்டி முழுமையாக ரெடி. குதிரை ஒட்டாலாம். பல்லுபோன பாட்டி போல பழங்கதைகளை பேசி பேசி துவேஷ கனலை விசிறி விசிறி காலத்தை ஓட்டலாம்.
Rate this:
Share this comment
Bala G - brisbane ,ஆஸ்திரேலியா
22-ஜன-201803:30:20 IST Report Abuse
Bala Gதிரு.கபாலி நாகராஜன் அவர்களே, உங்களின் கருத்துக்கள் ஒவ்வொன்றும் மிக அருமை. தற்போதய யதார்த்தத்தை மிக அருமையாக விளக்கி உள்ளீர்கள். நான் பிராமண சமூகத்தை சார்ந்தவன் அல்ல....
Rate this:
Share this comment
Sundaresan Ramanathan - Bangalore,இந்தியா
22-ஜன-201812:51:49 IST Report Abuse
Sundaresan Ramanathanகபாலி நாகராஜன் அவர்களின் கருத்துக்கள் அருமை. தமிழ் எழுத்துக்கள் பிறழாமல் எழுதியது நன்று....
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-ஜன-201813:10:37 IST Report Abuse
D.Ambujavalli வைஷ்ணவர்கள் தம்மை பெயருடன் 'தாசன்' என்று 'அடியேன் ஸ்ரீனிவாச தாசன்' என்பதுபோல் குறிப்பிட்டுக்கொண்டாலும் பெண்டிரை 'நாச்சியார்' என்றே குறிப்பார்களே அன்றி 'தாசி' என்று குறிப்பிடுவது இல்லை. இந்த மாமேதை தெய்வப்பிறவியாக வணங்கப்படும் ஆண்டாளை இந்த இழிசொல்லால் குறிப்பிட்டுவிட்டு இல்லாத ஆதாரத்தை பிதற்றிக்கொண்டிருக்கிறார். மற்ற மதத்தினரைப்பற்றி சொல்லிப்பார்க்கட்டும்....
Rate this:
Share this comment
Cancel
Dr. R. Ravi - Singhboum,இந்தியா
21-ஜன-201812:51:14 IST Report Abuse
Dr. R. Ravi வைரமுத்து ரன்னிங் லக்சுரி லைப் வித் தமிழின் மணி. பிறந்தது ஹிந்து குடும்பத்தில்....
Rate this:
Share this comment
Cancel
krishna - cbe,இந்தியா
21-ஜன-201810:41:29 IST Report Abuse
krishna வைரமுத்துவுக்கு தேவை இல்லாத ஒன்று இது போன்ற கருத்துக்கள். இதுவே வேற்று மதம் சம்பந்தமாக இது போன்ற சர்ச்சையான கருத்துக்களை அவர் கூறி இருந்தால் என்ன நடந்திருக்கும்.
Rate this:
Share this comment
Indhiyan - Chennai,இந்தியா
22-ஜன-201808:52:18 IST Report Abuse
Indhiyanபேசியவரை டின்னு கட்டி இருப்பார்கள். எல்லா அரசியல் கட்சிகளும் சிறுபான்மையினருக்கு எதிராக பேசியதாக பெரிய போராட்டம் வெடித்து இருக்கும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை