வைரமுத்துவுக்கு பிப்., 3 வரை கெடு | வைரமுத்துவுக்கு பிப்., 3 வரை கெடு: உண்ணாவிரதத்தை ஒத்திவைத்த ஜீயர் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வைரமுத்துவுக்கு பிப்., 3 வரை கெடு:
உண்ணாவிரதத்தை ஒத்திவைத்த ஜீயர்

ஸ்ரீவில்லிபுத்துார்'ஆண்டாளை அவதுாறாக பேசிய வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்' என, தொடர் உண்ணாவிரதம் இருந்த ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர், ஹிந்து அமைப்பினர் வேண்டுகோளுக்கிணங்க பிப்., 3 வரை கெடு விதித்து, உண்ணாவிரதத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தார்.

 வைரமுத்துவுக்கு பிப்., 3 வரை கெடு: உண்ணாவிரதத்தை ஒத்திவைத்த ஜீயர்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, ஆண்டாளை அவதுாறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது.

இதை கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆண்டாள் பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 'ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கோர வேண்டும்' என வலியுறுத்தி, ஸ்ரீவில்லிபுத்துார்

மணவாளமாமுனிகள் சன்னிதியின் சடகோபராமானுஜ ஜீயர்நேற்று முன்தினம் உண்ணாவிரதம் துவக்கினார்.

மன்னிப்பு கேட்டால் மட்டுமேஇரண்டாம் நாளான நேற்று காலை, 11:30 மணிக்கு திருக்கோஷ்டியூர் மாதவன், கோவில் தக்கார் ரவிச்சந்திரன் ஆகியோர் பேச்சு நடத்தினர். இதை ஏற்க மறுத்த ஜீயர், 'ஆண்டாள் சன்னதிக்கு வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே கைவிடமுடியும்' என்றார்.
'விரைவில் ஆண்டாள் பக்தர்கள் மனமகிழும் வகையில் நல்ல செய்தி வரும். அதுவரை உண்ணாவிரதத்தை கைவிடவேண்டும்' என, குழுவினர் வலியுறுத்தினர்.

இதையடுத்து, உண்ணாவிரதத்தை தற்காலிகமாகஒத்திவைப்பதாக அறிவித்த ஜீயர், 'பிப்., 3க்குள் வைரமுத்து மன்னிப்பு கோரவேண்டும்.'இல்லையெனில் பிப்., 5 முதல், மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன். அதுவரை

Advertisement

அறநெறி போராட்டங்கள் தொடரும்' என, உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.

துாது அனுப்பினாரா துர்கா?


தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலினின் மனைவி துர்கா, ஆண்டாள் பக்தை. 'ஜீயர் உண்ணாவிரதம் இருப்பது நாட்டிற்கும் நல்லதல்ல; உண்ணாவிரதம் வேண்டாம்' என வைஷ்ணவ பெரியவர்களிடம், துர்கா அறிவுறுத்தியதாகவும், தொடர்ந்து பேச்சு நடத்திய அவர்கள், இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண்பதாக உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்தே, ஜீயரின் உண்ணாவிரதம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Advertisement

வாசகர் கருத்து (155)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankarm Sankar - Chennai,இந்தியா
25-ஜன-201815:18:30 IST Report Abuse

Sankarm Sankarமன்னிப்பு கேட்க முடியாது , நீக்க உண்ணாவிரதம் இந்த நிமிடமே ஆரம்பிக்கலாம்

Rate this:
pius - Nagercoil,இந்தியா
25-ஜன-201811:17:12 IST Report Abuse

piusஎப்பா கடவுளே நீ ஏங்கப்பா இருக்கா, வந்து எதாவது சொல்லுப்பா

Rate this:
Mohan Nadar - Mumbai,இந்தியா
20-ஜன-201800:14:19 IST Report Abuse

Mohan Nadarஆண்டாளின் தமிழில் அர்ச்சனை செய்யாதது ஏன்?

Rate this:
Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா
25-ஜன-201811:28:59 IST Report Abuse

Kasiniventhan Muthuramalingamவிடுங்க சாமி... லோகமெல்லாம் நிறைஞ்சிருக்கிற ஆண்டாள் இதனால் சிறுமை அடைய மாட்டாள் இந்த புண்ய தேசத்திலே சேரிகள் நிறைய இருந்துண்டுருக்கு . பல தரித்திர நாராயணர்கல் உடுக்க துணி இல்லாம.உறங்க இடம் இல்லாம அலைஞ்சுண்டு இருக்கா . அவாளுக்கு ஒரு நேரமாவது ஒரு தட்டு புளியோதரை குடுக்க முடியும்மான்னு பாப்போம். அதுவே பெருமாளுக்கும் ,பிராட்டியாளுக்கும் செய்ற பெரிய சேவையா இருக்கும்...

Rate this:
மேலும் 151 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X