குஜராத் கப்பல் தீ விபத்தில் தூத்துக்குடி அதிகாரி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குஜராத் கப்பல் தீ விபத்தில் தூத்துக்குடி அதிகாரி பலி

Added : ஜன 19, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
குஜராத், கப்பல், தீ, விபத்தில், தூத்துக்குடி, அதிகாரி, பலி

துாத்துக்குடி,:குஜராத்தில் ஆயில் டேங்கர் கப்பல் தீப்பிடித்ததில் துாத்துக்குடி இன்ஜினியர் பலியானார். உடல் நாளை மறுநாள்சொந்த ஊர் கொண்டுவரப்படுகிறது.
துாத்துக்குடி வடக்கு ராஜா தெருவை சேர்ந்தவர் மேன்லின் பெர்னான்டஸ் 36.இவர் மும்பையை சேர்ந்த தனியார் கப்பல் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றிவந்தார்.குஜராத், தீனதயாள் துறைமுகத்திற்கு டீசல் இறக்குமதி செய்ய வந்த எம்.டி.ஜெனிசா என்ற ஆயில் டேங்கர் கப்பலில்,எலக்ட்ரிக்கல் பிரிவு அதிகாரியாக பணியாற்றிவந்தார்.கடந்த 17 ம் தேதி அந்த கப்பல், துறைமுகத்தில் இருந்து 15 நாட்டிகல் மைல் தொலைவில் கடலில் நின்றபோது திடீரென தீப்பிடித்துக்கொண்டது.
இதில் கப்பலில் பணியாற்றிய 23 பேர் மீட்கப்பட்டனர். தீயில் சிக்கிய மேன்லின் பெர்னான்டஸ் பரிதாபமாக இறந்தார்.அவரது உடல் நாளை மறுநாள் 21ம் தேதி துாத்துக்குடிக்கு கொண்டுவரப்படுகிறது. இறந்த மேன்லின்பெர்னான்டஸ்க்கு மனைவி ரம்யா 31, 7 வயதில் ரியான் மற்றும் ஆறு மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
anand - Chennai,இந்தியா
19-ஜன-201822:40:28 IST Report Abuse
anand பாவம்..ஆழ்ந்த அனுதாபங்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை