ஆர்.டி.ஓ. முன்பு தீக்குளிப்பு முயற்சி : திட்டக்குடியில் பரபரப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்.டி.ஓ. முன்பு தீக்குளிப்பு முயற்சி : திட்டக்குடியில் பரபரப்பு

Updated : ஜன 19, 2018 | Added : ஜன 19, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 ஆர்.டி.ஓ., முன்பு, தீக்குளிப்பு, முயற்சி,  திட்டக்குடியில், பரபரப்பு

திட்டக்குடி:கடலுார் மாவட்டம்,திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் இன்று காலியாக உள்ள கிராம உதவியாளர்களுக்கான நேர்முக தேர்வை நடத்த விருத்தாசலம் ஆர்.டி.ஓ. சந்தோஷினிசந்திரா வந்திருந்தார். மாலை 7மணிக்கு தேர்வுப்பணிகள் முடிந்து கிளம்ப தயாரான ஆர்.டி.ஓ.விடம் திட்டக்குடி தாலுகா, முருகன்குடி கிராமத்தைச்சேர்ந்த லோகநாதன் மனைவி சங்கீதா, பட்டாமாற்றம் செய்ய தாசில்தார் தாமதம் செய்வதாக புகார் அளித்தார்.

அருகிலிருந்த தாசில்தார் சிவக்குமார், வாரிசுதாரர்கள் குறித்து குழப்பம் உள்ளதால் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்த பதிலில் திருப்தியடையாத சங்கீதா, மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை கேனை எடுத்து அதிலிருந்த மண்ணெண்ணையை தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தார். அருகிலிருந்த வருவாய்துறை அலுவலர்கள் அப்பெண்ணை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை