ஆறு ஆண்டுகளுக்கு பின் பஸ் கட்டணம் உயர்வு இன்று முதல் அமலாகிறது Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஆறு ஆண்டுகளுக்கு பின் பஸ் கட்டணம்
உயர்வு : இன்று முதல் அமலாகிறது

சென்னை தமிழகத்தில், ஆறு ஆண்டுகளுக்கு பின், பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கட்டண உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருகிறது. 'புதிய கட்டணம், தனியார் பஸ்களுக்கும் பொருந்தும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில், 2011 நவ., 18ல், பஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்பின், கட்டணம் உயர்த்தப்படவில்லை. அண்டை மாநிலங்களோ, பல முறை கட்டணத்தை உயர்த்தின. ஏழு ஆண்டுகளில், அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி நெருக்கடியை சமாளிக்க, தமிழக அரசு, 12 ஆயிரத்து, 59 கோடி ரூபாயை மானியமாக வழங்கி உள்ளது.

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, இதுவரை ஏற்பட்டுள்ள தொடர் நஷ்டம், 20 ஆயிரத்து, 488 கோடி ரூபாய். போக்குவரத்து கழகங்கள் சிறப்பாக இயங்கவும், நிதி நெருக்கடியை சமாளிக்கவும், பொதுமக்களுக்கு சிறந்த போக்குவரத்து சேவையை வழங்கவும், அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி
உள்ளது.அதன்படி, புறநகர் பஸ்களில், குறைந்தபட்ச கட்டணம், ஐந்து ரூபாயிலிருந்து, ஆறு ரூபாய்; நகர் மற்றும் மாநகர பஸ்களில், மூன்று ரூபாயில் இருந்து, ஐந்து ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதிகபட்ச கட்டணம், 12 ரூபாயில் இருந்து, 19 ரூபாயாகவும், சென்னையில், குறைந்த பட்ச கட்டணம், மூன்று ரூபாயில்

இருந்து, ஐந்து ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம், 14 ரூபாயில் இருந்து, 23 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.வால்வோ பஸ்களில், ஒன்று முதல், 38 நிலை வரை, குறைந்தபட்ச கட்டணம், 15 ரூபாயில் இருந்து, 25 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம், 100 ரூபாயில் இருந்து, 150 ரூபாயாகவும்உயர்த்தப்பட்டுள்ளது.
இருப்பினும், 'அண்டை மாநிலங்களை விட, குறைவாகவே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய பஸ் கட்டணம், தனியார் பஸ்களுக்கும் பொருந்தும். இந்த கட்டண உயர்வு, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.எதிர்காலங்களில், எரிபொருள் மற்றும் மசகு எண்ணெய் விலை
ஏற்றங்கள், இயக்கச் செலவுகள், பழுது நீக்கும் செலவுகள் மற்றும் பராமரிப்பு செலவுகளில் ஏற்படும் மாற்றங்கள், பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு போன்றவற்றின் அடிப்படையில், அரசு உயர் அதிகாரிகள் குழு, பஸ் கட்டணத்தை மாற்றி அமைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இழப்பீடுஅரசு பஸ்களால் ஏற்படும் விபத்துகளால் பாதிக்கப்படுவோருக்கு, இழப்பீடு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. உயிரிழப்புக்கு, 15 வயது வரை உள்ளோருக்கு, 2.50 லட்சம் ரூபாய்; 16 - 60 வயது உள்ளோருக்கு, ஐந்து லட்சம் ரூபாய்; 60 வயதிற்கு

Advertisement

மேற்பட்டோருக்கு, 2.50 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
சிறு காயத்திற்கு, 10 ஆயிரம் - 25 ஆயிரம் ரூபாய்; தலை காயம் மற்றும் நிரந்தர உறுப்பு இழப்பிற்கு, ஐந்து லட்சம் ரூபாய்; பெரிய காயம், எலும்பு முறிவுக்கு, இரண்டு லட்சம் ரூபாய்; எலும்பு முறிவுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.


பஸ் கட்டணம் உயர்வு ஏன்?


தமிழகத்தில், எட்டு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தனியார் பஸ் நிறுவனங்கள், பொதுமக்களுக்கு போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகின்றன.
அரசு போக்குவரத்துக் கழகங்கள், 22 ஆயிரத்து, 509 பஸ்கள் மற்றும், 1.40 லட்சம் போக்குவரத்துப் பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன.டீசல் மற்றும் மசகு எண்ணெய் விலை அடிக்கடி உயர்த்தப்படுகிறது. புதிய பஸ்களின் விலை உயர்வு, உதிரி பாகங்களின் விலை உயர்வு, பணியாளர்கள் சம்பள உயர்வு மற்றும் இதர செலவுகள் அதிகரித்துள்ளதால், கூடுதல் செலவு ஏற்படுகிறது.
டீசல் விலை உயர்வுக்காக, அரசு மானியம் வழங்கி வரும் நிலையிலும், தினமும், ஒன்பது கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. தற்போதுள்ள பஸ்களில், 75 சதவீதம், ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்டவை.
அவற்றின் இயக்கத்திறனும் படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே, பஸ் கட்டணங்களை, மாற்றி அமைக்க வேண்டிய சூழலுக்கு, அரசு தள்ளப்பட்டுள்ளது என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா
20-ஜன-201822:51:55 IST Report Abuse

Srikanth Tamizanda..குறைந்த பட்சம் விலை 6₹ (10 km), பெங்களூரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலை இது. வால்வோ விலை 51₹ (30km) இங்கோ 48₹ வெறும் 6km க்கு.. நிதி ஏன் அதளபாதாளத்துக்கு போகாது? தேவை இல்லாத இலவசங்கள் கொடுத்தால் எப்படி சரி செய்வது? லஞ்சம் மற்றும் கமிஷன் வாங்குவதையே குறிக்கோளாக உள்ள அரசு இனியாவது ஒழக்கமாக செயல்படுமா??

Rate this:
appavi - cumbum,இந்தியா
20-ஜன-201820:56:20 IST Report Abuse

appaviமீண்டும் பரங்கி நாய்களிடம் அடிமையாக இருக்க விரும்பும் அடிமைகளே .....அரும்பாடுபட்டு வாங்கிய சுதந்திரத்தை பாதுகாக்க துப்பில்லாமல் இலவசதிற்கு கையேந்தியும் காசுக்கு ஓட்டை விற்கும் ஈன செயலையும் தமிழனுக்கு என்று இருந்த அனைத்து தனித்தன்மையையும் நடிகனிடமும் சினிமா அரசியல் வியாதிகளிடமும் இழந்துவிட்டு ஜாதியையும் மதத்தையும் நம்பி வாழ்க்கையை வீணடிக்கும் பரங்கி அடிமைகளே ..காமராஜருக்கு பின் நம் தமிழ்நாடு ஊழலை தவிர வேறு எதிலும் முன்னேறவில்லை என்பதை தெரிந்தும் அதற்கு காரணமானவர்களிடம் தொடர்ந்து நாட்டை ஒப்படைத்துவிட்டு தற்போது புலம்பி என்ன பயன் ?......இந்த ஆறு வருடங்களில் டீ,காபி ,சினிமா டிக்கெட் ,அசைவ உணவு ,உடை,ஓட்டை விற்கும் பணம் ,இன்னும் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் விலை உயர்ந்த போது பேசாமல் இருந்துவிட்டு தற்போது பறங்கியனுக்கு அடிமையாக இருக்க விரும்பும் கையாலாகாத கூட்டமே .......தவறையும் அதற்கு காரணமானவர்களையும் தண்டிக்காமல் உன்னை ஏன் தண்டித்து கொள்கிறாய் .....தமிழன் என்றாலே வீரமகன் என்று இருந்ததை ஏன் மறந்தாய்?

Rate this:
ram - chennai,இந்தியா
20-ஜன-201817:56:18 IST Report Abuse

ramஆறு ஆண்டுகளுக்கு பின், பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.. பஸ் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கமான ஒன்று தான்

Rate this:
Selvam Palanisamy - Thiruthangal,இந்தியா
20-ஜன-201820:29:38 IST Report Abuse

Selvam Palanisamyஆறு ஆண்டுகளுக்கு பின் பஸ் கட்டணம் உயர்வு என்பது தவறு அறிவிக்கப்படாமலேயே பலமுறை பஸ்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது நண்பரே...

Rate this:
மேலும் 48 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X