chennai music | பாடும் உனை நான் பாடவைப்பேனே | Dinamalar

பாடும் உனை நான் பாடவைப்பேனே

Updated : ஜன 20, 2018 | Added : ஜன 20, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பாடும் உனை நான் பாடவைப்பேனே


160 பாடகர்களை இதுவரை அறிமுகப்படுத்தியுள்ளார்.
நுாற்றுக்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்

இரண்டாயிரத்திற்கும் அதிகமான பக்தி ஆல்பம் தந்துள்ளார்
தமிழ் தவிர மலையாளம்,கன்னடம்,தெலுங்கு,ஒரியா உள்ளீட்ட பல மொழி படங்களுக்கு திரை இசை அமைத்துள்ளார்.

சிறந்த இசை அமைப்பாளர் என்று கேரளா மாநில அரசின் விருதினைப் பெற்றுள்ளார்.
திருவண்ணாமலை கிரிவலம் சுற்றிவரும்போது ஒலிக்கக்கூடிய திருவாசகம் பாடல்கள் இவரது இசையில் பிறந்ததாகும்.

இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரரான இசை அமைப்பாளர் வி.தஷி சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஷோபா கல்யாணமண்டபத்தை ஒட்டியுள்ள ஒரு வீட்டின் மாடியில் என் கடன் இசைத்து மகிழ்வதும் மகிழ்விப்பதுமே என்று எளிமையான தோற்றத்துடன் இசை அமைத்துக் கொண்டிருக்கிறார்.
பாடகி ஜானகியம்மாவை பெரிதும் மதிப்பதால் அவரது படத்தை பெரிதாக மாட்டிவைத்திருக்கிறார்.பார்ப்பதற்கும் பழகுவதற்கும் எளிய மனிதரான இவரிடம் காணப்பட்ட ஒரு அரும்குணம்தான் அவரைப்பற்றி எழுதத்துாண்டியது.

இப்போது நாம் காதில் கேட்டுக்கொண்டிருக்கும் குரல்கள் மட்டுமே இனிய குரல்கள் அல்ல நாம் காதிற்கு வராத பல இனிய குரல்களும் வாய்ப்புக்காக அலை பாய்ந்தபடி எங்கோயோ பாடிக் கொண்டும் தேடிக்கொண்டும்தான் இருக்கிறது.

அந்தக்குரல்கள் கிராமத்தில் இருக்கலாம் மொட்டை மாடிவீடுகளில் உலாவிக்கொண்டு இருக்கலாம், சேரிப்பகுதியில் வசிக்கலாம்,பள்ளி கல்லுாரி வளாகத்திற்குள் மட்டுமே சுற்றி வரலாம்,பூ கட்டி விற்கும் பெண்ணிடமும் இட்லி சுட்டு விற்கும் ஆணிடமும் கூட இருக்கலாம்

இந்தக்குரல்களை எல்லாம் கேட்பவர்கள் நல்லாயிருக்கே என்று அவ்வப்போது பராட்டிவிட்டு போய்விடுவர் அவர்களால் அவ்வளவுதான் முடியும்.ஆனால் இப்படிப்பட்ட இனிமையான குரல் இருப்பவர்கள் அனைவரின் திறமையும் அப்படியே முடங்கிப் போகக்கூடாது, வெளியே கொண்டுவர வேண்டும் என்பதற்காக இவர்களைப் போன்றவர்களை தேடிப்பிடித் பாட்டுப்பாட வாய்ப்பு தந்து கொண்டிருக்கிறார்.

பாடுவதில் ஆர்வமும் தகுதியும் உள்ள ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெறாத ஏழை எளிய இளம் பாடகர்களாக நீங்கள் இருந்தாலோ அல்லது உங்களுக்கு தெரிந்தாலோ இசை அமைப்பாளர் தஷியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.அவரது எண்:9841166740.

எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in



Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
22-ஜன-201812:05:35 IST Report Abuse
SENTHIL NATHAN பாட வாய்ப்பு தேடுபவர்களுக்கு பயனுள்ள தகவல்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X