சாதனையாளர் நிர்மலா| Dinamalar

சாதனையாளர் நிர்மலா

Updated : ஜன 23, 2018 | Added : ஜன 20, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
டில்லி உஷ், delhi ush, நிர்மலா, தமிழக அமைச்சர்கள், பிரதமர்மோடி, கருணாநிதி, திமுக, கருத்து கணிப்பு

ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன், சத்தமில்லாமல் ஒரு சாதனை செய்துள்ளார். விமானப் படையின் போர் விமானத்தின் பெயர், சுகோய். இதில், நிர்மலா பயணம் செய்ய விரும்பினார். இதில், போர் விமானிகள் மட்டுமே பயணிப்பர். இந்த குட்டி விமானம், மணிக்கு, 1,200 கி.மீ., வேகத்தில் பறக்கும். பயணியர் விமானத்தின் வேகம், 700 கி.மீ., மட்டுமே.இந்த விமானத்தில் பறப்பதற்காக, மூன்று நாட்கள் பயிற்சியும், ராணுவ அமைச்சருக்கு கொடுக்கப்பட்டது. 'வெறும், 20 நிமிடங்கள் பறந்தால் போதும்; அதிக நேரம் வேண்டாம்' என, ஆலோசனை கூறப்பட்டது.

ஆனால், அதை மறுத்து விட்டாராம் அமைச்சர்.'நான் விமானத்தில் செல்வதால், விமானப் படை வீரர்களுக்கு ஊக்கம் வரும்' என்றாராம். இதனால், 40 நிமிடங்கள் விமானத்தில் பறந்தாராம், நிர்மலா.விமானம், 45 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து, குட்டிக் கரணம் அடித்த போது, தன் பெற்றோரையும், தனக்கு ராணுவ அமைச்சராக வாய்ப்பளித்த, பிரதமர் மோடியையும் நினைத்துக் கொண்டாராம் நிர்மலா. 'சுகோய்' விமானத்தில் பறந்த, முதல் பெண் அமைச்சர் இவர் தான்.

குடியரசு தினத்தன்று, டில்லி ராஜபாதையில் அணிவகுப்பு நடக்கும். அனைத்து மாநிலங்களும், தங்கள் வளர்ச்சியை அலங்கார ஊர்திகள் மூலம், இந்த அணிவகுப்பில் காட்டுவது வழக்கம். ராணுவ அமைச்சருக்கு தான், இங்கு முதல் மரியாதை. அவர் தான், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிநாட்டு அதிபர்களை வரவேற்பார்.'இந்த சமயத்தில், நீங்கள் சல்வார் அணிவது தான் சரி' என, நிர்மலாவிற்கு சொல்லப்பட்டதாம்; அதை மறுத்து, 'பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன்' என, சொல்லி விட்டாராம், நிர்மலா.


தமிழக அமைச்சர்களிடம் திடீர் மாற்றம்

சில மாதங்களுக்கு முன் வரை, தமிழக முதல்வர், பழனிசாமி டில்லி சென்று, பிரதமர் மோடியை சந்தித்தால், அடுத்த சில நாட்களிலேயே, துணை முதல்வர், பன்னீர்செல்வம், டில்லிக்கு படையெடுப்பார். பிரதமர், மத்திய அமைச்சர்களுடனான சந்திப்பு படலங்கள் அரங்கேறும். தமிழக அமைச்சர்களும், மத்திய அமைச்சர்களை சந்திப்பர்.

இப்படித் தான், டில்லியில் நடந்து கொண்டிருந்தது. டில்லிக்கு படையெடுத்த முதல்வரும், அ.தி.மு.க., கோஷ்டியினரும், இப்படி இடைவிடாமல் தங்களின் ஆதரவை, பிரதமருக்கு தெரிவித்து கொண்டிருந்தனர். மத்திய அமைச்சர் ஒருவர், 'உங்கள் ஊர் அமைச்சர்களுக்கு, வேறு வேலையே இல்லையா?' என, கிண்டலடித்த நிகழ்வும் உண்டு.

ஆனால், இப்போது நிலைமையே மாறி விட்டது. தமிழக அமைச்சர்கள் அடிக்கடி டில்லி வருகின்றனர்; வந்த வேலையை பார்த்து விட்டு, சென்னை திரும்பி விடுகின்றனர். சமீபத்தில், டில்லி வந்த பன்னீர்செல்வம், பிரதமரைச் சந்திக்கவில்லை.சென்னை வந்திருந்த பிரதமர் மோடி, தி.மு.க., தலைவர், கருணாநிதியை சந்தித்த பின் தான், நிலைமை மாறி விட்டது என்கின்றனர். பா.ஜ., மேலிடம், தி.மு.க., பக்கம் சாய்கிறதா என, அ.தி.மு.க., தலைவர்களுக்கு சந்தேகம் வந்து விட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.

பா.ஜ.,வை விமர்சித்தால் தான், தமிழக அரசியலில் ஓட்டுகளை பெறலாம் என்பதால், மோடியை அடிக்கடி சந்திப்பதை, தமிழக அமைச்சர்கள் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.


கருத்து கணிப்பா; கவனிப்பா?

சமீபத்தில், வட மாநில செய்தி, 'சேனல்' ஒன்றில், தமிழக அரசியல் நிலை குறித்து, கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. 'தற்போது சட்டசபை தேர்தல் நடந்தால், அந்த கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்; ஆட்சி அமைக்கும்' என, அதில் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக, மற்றொரு, 'டிவி'யும் கருத்துக் கணிப்பை வெளியிட்டது. அதில், '2019 லோக்சபா தேர்தலில், அந்த கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்காது. ரஜினி கட்சி துவங்கி போட்டியிட்டால், அவருடன் சிலர் கூட்டணி சேர்ந்தால், நல்ல வெற்றியை பெறலாம்' என, தெரிவிக்கப்பட்டது.
இதை பார்த்தவர்கள், மண்டை குழம்பி போயினர்; எதை நம்புவது? இது குறித்து, டில்லி வட்டாரங்களில், படு சுவாரசியமான தகவல் சொல்லப்படுகிறது.

அந்த கட்சியின் குடும்ப நபர் தான், இந்த சாதகமான கருத்துக் கணிப்புக்கு காரணமாம்.கட்சியின் விவகாரங்களில் தலையிட்டு வரும் அந்த குடும்ப நபர், டில்லி விவகாரங்களையும் கவனிக்கிறார். 'அந்த கவனிப்பால் தான், கருத்துக் கணிப்பு இப்படி திரும்பி விட்டது' என்கின்றன, டில்லி வட்டாரங்கள்.'இந்த நபர் தலையீட்டால், கட்சியின் நிலைமை மோசமாகி உள்ளது. திறமையான தலைவர்கள் இருந்தாலும், குடும்ப நபரை, தலைவர் நம்புகிறார்; இது, எங்கு போய் முடியுமோ எனத் தெரியவில்லை' என்கின்றனர், கட்சி நிர்வாகிகள்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
honest student - kabul,ஆப்கானிஸ்தான்
21-ஜன-201808:17:58 IST Report Abuse
honest student ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஏற்கனவே போர் விமானத்தில் பயணம் செய்துவிட்டார் ...
Rate this:
Share this comment
Mahesh Babu - Singapore ,சிங்கப்பூர்
22-ஜன-201818:50:41 IST Report Abuse
Mahesh Babuஆப்கானிஸ்தான் லேயே இருங்க.. அது தான் நாட்டுக்கு நல்லது ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை