தல வரலாறுகளை தேடும் பேராசிரியர்கள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தல வரலாறுகளை தேடும் பேராசிரியர்கள்

Added : ஜன 21, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அருப்புக்கோட்டை :அக்கால மன்னர்கள், அவர்கள் வாழ்ந்த முறைகள், போர், வெற்றி போன்றவைகளை மட்டும் நாம் வரலாறுகளில் படித்துள்ளோம். ஒவ்வொரு சமூகத்திற்கும், ஒவ்வொரு கிராமத்திற்கும், ஒவ்வொரு சமுதாயத்திற்கும் வரலாறு உள்ளது. அதற்கான பதிவுகள் மிக குறைவாகத் தான் வரலாறுகளில் உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலும் நகர்புறங்களில் உள்ள கோயில்கள் மன்னர்களால் கட்டப்பட்ட கோயில்களே ஆகும். இவற்றிற்கான தல வரலாறுகளும் உள்ளது. தல வரலாற்றின் மூலம் கோயில் உருவான விதம், திருப்பணி, அவற்றை செய்த மன்னர்கள் மற்றும் பிற தகவல்களை அறிய முடிகிறது. தமிழ்நாட்டின் உறைவிடமான ஆணி வேராக உள்ள கிராமப் புறங்களில் மக்களால் வழிபடும் தெய்வங்களான முனியாண்டி, கருப்பசாமி, காளியம்மன், மாரியம்மன் கோயில்களுக்கு தல வரலாறுகள் என்பது மிக குறைவே. இத்தகைய பழமை வாய்ந்த கோயில்களை கிராமபுறங்களில் தேடிச் சென்று அவற்றின் வரலாறுகளை கண்டு பிடிக்கும் முயற்சியில், அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லுாரியின் வரலாற்று துறை உதவி பேராசிரியர்கள் செல்லப்பாண்டியன் ,முனீஸ்வரன் ஈடுபட்டுள்ளனர். பல ஊர்களுக்கு சென்று அங்குள்ள கோயில்களை ஆராய்ந்து, மூத்த குடிமகன்களை சந்தித்து கோயில் புராணங்களை பற்றி கேட்டறிந்து தகவல்களை திரட்டி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை