எல்லையில் பதற்றம்: 40 ஆயிரம் பேர் வெளியேற்றம் Dinamalar
பதிவு செய்த நாள் :
எல்லையில் பதற்றம்:
40 ஆயிரம் பேர் வெளியேற்றம்

ஜம்மு:அண்டை நாடான, பாக்., ராணுவம் அத்துமீறி நடத்தும் தாக்குதல்களால், ஜம்மு - காஷ்மீர் எல்லையை ஒட்டிய கிராமங்களைச் சேர்ந்த, 40 ஆயிரம் பேர், தங்கள் வீடுகளை விட்டு, பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து உள்ளனர்.

ராஜ்நாத் சிங் , Rajnath Singh, பாகிஸ்தான் ராணுவம் , Pakistan Army, ஜம்மு - காஷ்மீர் ,Jammu and Kashmir,முதல்வர் மெஹபூபா முப்தி,Chief Minister Mehbooba Mufti,  குமார் ராஜிவ் ரஞ்சன், Kumar Rajiv Ranjan, போலீஸ் , Police, ஜம்மு,Jammu, எல்லை பதற்றம், பாகிஸ்தான், Pakistan, பாக்.,


ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் எல்லை பகுதிகளில், பாக்., ராணுவம், சமீபகாலமாக அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. பாக்.,கில் இருந்து ஊடுருவும் பயங்கரவாதி களும் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால், எல்லையோர கிராமங்களைச் சேர்ந்தோர் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது.

பாக்., தாக்குதலால் அச்சமடைந்துள்ள கிராமவாசிகள், தங்கள் வீடுகளை விட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். ஜம்முவில் உள்ள ஆர்னியா நகரம், பாக்., எல்லையை ஒட்டி உள்ளது.

18 ஆயிரம் பேர் வசித்து வந்த இந்த நகரம், தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.


எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள், போர் நடக்கும் பகுதியில் இருப்பது போன்ற உணர்வு, தங்களுக்கு ஏற்படுவதாக கவலையுடன் தெரிவித்து உள்ளனர். இக்கிராமங்களைச் சேர்ந்த வீடுகள், பலத்த சேதங்களுடன் காணப்படுகின்றன.பல வீடுகளின் சுவர்களில், ரத்தக் கறை காணப்படுகிறது. தங்கள் கிராமங்களை விட்டு, பாதுகாப்பான கிராமங்களுக்கு செல்ல மறுத்து வந்த சிலரும், தற்போது, உயிருக்கு பயந்துவெளியேறி வருகின்றனர்.


இது குறித்து, போலீஸ் துணை கமிஷனர், குமார் ராஜிவ் ரஞ்சன் கூறுகையில், ''ஆர்னியாவை சுற்றியுள்ள, 58 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பாக்., தரப்பு தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ''இதனால், 40 ஆயிரம் பேர், பாதுகாப்பான கிராமங்களுக்கு குடிபுகுந்து உள்ளனர்,'' என்றார். ஆர்னியாவை சுற்றியுள்ள கிராமங்களில், பாக்., தாக்குதலால், 93 பேர் காயமடைந்ததாகவும், 131 கால்நடைகள் கொல்லப்பட்டதாகவும், 74 கட்டடங்கள் சேதம்அடைந்ததாகவும், அவர் தெரிவித்தார்.


இந்திய துாதருக்கு பாக்., 'சம்மன்'இந்திய படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், பாக்., தரப்பில் இருவர் உயிரிழந்த சம்பவம்

Advertisement

தொடர்பாக, பாக்., தலைநகர், இஸ்லாமாபாதில் உள்ள இந்திய துாதர், ஜே.பி.சிங்கிற்கு, அந்நாட்டு அரசு, 'சம்மன்' அனுப்பி உள்ளது.

இதுதொடர்பாக, பாக்., வெளியுறவுத் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'ஜன., 20, 21ல், இந்திய வீரர்கள், அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில், இருவர் உயிரிழந்தனர்; இரு பெண்கள் காயம் அடைந்தனர். மனித கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையில், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில், இந்திய வீரர்கள் நடத்திய தாக்குதல் கண்டிக்கத்தக்கது' என, கூறப்பட்டுள்ளது.


பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுஜம்மு - காஷ்மீரில், ஜம்மு, கதுவா, சம்பா, பூன்ச், ரஜோரி ஆகிய ஐந்து மாவட்டங்களில், எல்லை பகுதிகளில், பாக்., ராணுவம், சமீப நாட்களாக அத்துமீறி நடத்தி வரும் தாக்குத லில், மூன்று வீரர்கள் உட்பட, 10 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டிருந்த, சி.கே.ராய் என்ற வீரர், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை, 11 ஆக உயர்ந்துள்ளது.


நம்முடைய எதிரிகள், நம் நாட்டிலேயே மறைந்திருந்தாலும், அவர்களை கண்டுபிடித்து வேட்டையாடுவோம். தேவைப்பட்டால், வெளி நாடுகளில் உள்ள எதிரிகளையும், அவர்கள் மண்ணிலேயே புகுந்து வேட்டை யாடும் பலம், நம் ராணுவத்துக்கு உள்ளது.

ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர், பா.ஜ.,


Advertisement

வாசகர் கருத்து (10)

 • புதியவை
 • பழையவை
 • அதிகம் விவாதிக்கப்பட்டவை
 • மிக மிக தரமானவை
 • மிக தரமானவை
 • தரமானவை
22-ஜன-201817:58:27 IST Report Abuse

அபுபக்கி நாடு எல்லை முழுக்க 20 அடி ஒசரத்துக்கு சுவர் எழுப்ப வேண்டியது தான்.

Rate this:
Kaliyan Pillai - Chennai,இந்தியா
22-ஜன-201816:48:53 IST Report Abuse

Kaliyan Pillaiவெத்து சவடால் பேச்சு பேசாதீங்கடா. இருபது வருடமாகியும் ஆக்கிரமிப்பு கஸ்மீரை உங்களால் மீட்க துப்பில்லை. இப்போது பாகிஸ்தான் இன்னும் கொஞ்சம் அபகரிக்கப் போறான். என்ன செய்யப்போறீங்க?

Rate this:
Rathinasami Kittapa - San Antonio,யூ.எஸ்.ஏ
22-ஜன-201812:45:46 IST Report Abuse

Rathinasami Kittapa"-ஸ்விட்சரலாந்துக்கு சொகுசுப் பயணம் "- , என்ன ஒரு எகத்தாளம் பிரதமரை இப்டிக் கூறுவதால் பெரிய மேதாவிகள் எனற எண்ணம்? ஒவவொரு வெளிநாட்டுப் பயணமும் பக்கத்து எதிரி நாடுகளைக் கலங்க வைக்கிறது. ஞானிகள் போல பதிவிடாதீரகள்.

Rate this:
Kaliyan Pillai - Chennai,இந்தியா
22-ஜன-201816:52:27 IST Report Abuse

Kaliyan Pillaiஎன்னேத்த அடிவாங்கினாலும் தாங்கக்கூடிய நல்லவங்கதான் நீங்க....

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X