காசநோய் தடுப்பு நடவடிக்கை முதல்வர்களுக்கு பிரதமர் கடிதம்| Dinamalar

காசநோய் தடுப்பு நடவடிக்கை முதல்வர்களுக்கு பிரதமர் கடிதம்

Updated : ஜன 21, 2018 | Added : ஜன 21, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 காசநோய்,தடுப்பு,நடவடிக்கை,முதல்வர்களுக்கு,பிரதமர்,கடிதம்

புதுடில்லி:'காசநோய் தடுப்பு நடவடிக்கைகளை, ஓர் இயக்கமாக செயல்படுத்திட வேண்டும்' என, மாநில முதல்வர்களை, பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.


பொருளாதார இழப்பு



காசநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாநில முதல்வர்களுக்கும், பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதம்:பரவும் நோய்களில், மிகவும் கொடுமையான உயிர் கொல்லி நோயாக, 'டியூபர்குளோசிஸ்' எனப்படும், காசநோய் உள்ளது. இந்த நோயால், நாட்டில், ஆண்டுக்கு, 29 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

ஆண்டுக்கு, 4.20 லட்சம் மக்கள், குறிப்பாக, ஏழைகள் உயிரிழக்கின்றனர். இதனால், நாட்டுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
காசநோயை கட்டுப்படுத்த, சிகிச்சையை கண்காணிக்க, தீவிர நடவடிக்கைகள் தேவை. இதை, ஓர் இயக்கமாக எடுத்துச் செல்ல வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


சிகிச்சை



காசநோயால் பாதிக்கப்பட்டு உள்ளோர் சிகிச்சை பெறும் வகையில், அவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், 500 ரூபாய் உதவித்தொகை வழங்குவது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருவதாக, சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை