காங்கிரசுடன் கூட்டணி இல்லையென மார்க்சிஸ்ட் கைவிரிப்பு! Dinamalar
பதிவு செய்த நாள் :
கைவிரிப்பு!
காங்., கூட்டணி இல்லையென மார்க்சிஸ்ட்...
யெச்சூரியின் முயற்சியை முறியடித்தார் காரத்

கோல்கட்டா:'வரும் லோக்சபா தேர்தலில், காங்கிரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்' என்ற, கட்சியின் பொதுச் செயலர், சீதாராம் யெச்சூரியின் நிலையை முறியடித்து, 'காங்கிரசுடன், எந்த வகையிலும் இணைந்து செயல்படக் கூடாது' என்ற, பிரகாஷ் காரத் தரப்பு வாதத்தை,மார்க்.கம்யூ., மத்திய குழு ஏற்றுக் கொண்டுள்ளது.

காங்கிரஸ், கூட்டணி, மார்க்சிஸ்ட், கைவிரிப்பு, ராகுல்

மார்க்.கம்யூ., மூன்று நாட்கள் மத்திய குழு கூட்டம், மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் நடந்தது. இதில், கட்சியின், 22வது பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய அரசியல் நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது.'வரும், 2019 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்த, கூட்டணி அல்லது முன்னணி ஏதும் அமைக்காமல், காங்கிரசுடன் இணைந்து செயல்படலாம்' என, கட்சியின் பொதுச் செயலர், சீதாராம் யெச்சூரி கருத்து தெரிவித்திருந்தார்.


அதே நேரத்தில், 'காங்கிர சுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த உறவும் இருக்கக் கூடாது' என, முன்னாள் பொதுச் செயலர், பிரகாஷ் காரத் வலியுறுத்தினார்.இவ்வாறு இரு கோஷ்டிகளாக, இரு வேறு கருத்துகளைக் கூறியதால், ஓட்டெடுப்பு நடத்த முடிவு

செய்யப்பட்டது. அதன்படி, 61 உறுப்பினர்கள் அடங்கிய மத்திய குழுவில், பிரகாஷ் காரத்தின் வாதத்துக்கு, 34 பேர் ஆதரவு தெரிவித்தனர்.


காங்கிரசுடன் இணைந்து செயல்படலாம் என்ற யெச்சூரியின் வாதத்துக்கு, 27 பேர் ஆதரவு தெரிவித்தனர். இதன்படி, காங்கிரசுடன் எந்தவகை கூட்டணியும் கிடையாது என்ற முடிவே, கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானமாக கொண்டு வரப்படும்.மேற்கு வங்கம், ஒடிசா, மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், கர்நாடகா, ஜம்மு - காஷ்மீர் மாநிலங்களைச் சேர்ந்த, அனைத்து மத்திய குழு உறுப்பினர்களும், யெச்சூரிக்கு ஆதரவு தெரிவித்தனர்.தமிழகத்தைச் சேர்ந்த, ஐந்து பேரில், மூன்று பேரும், அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.


கோஷ்டி அரசியல்?



கட்டுக்கோப்பான கட்சி என்ற பெயர், மார்க்சிஸ்ட் கட்சிக்கு உண்டு. ஆனாலும், சமீபகாலமாக, அந்த கட்சியிலும் கோஷ்டி பூசல் நிலவுவதாக, தொடர்ந்து செய்திகள் வெளியாகின. பிரகாஷ் காரத், கேரள மாநிலம், பாலக்காட்டை பூர்வீகமாக உடையவர். கட்சியில் உள்ள இவரது ஆதரவாளர்களில் பெரும்பாலானோர்,கேரளாவைச் சேர்ந்தவர்களே.


கேரளாவில்,மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதான எதிரியே, காங்., தான். எனவே, மத்தியில், காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால், கேரளாவில் அரசியல் செய்ய முடியாது என்பது, காரத்தின் வாதம்.மார்க்சிஸ்ட் பொதுச் செயலரான, சீதாராம் யெச்சூரியின் ஆதரவாளர்களில் பெரும்பாலானோர், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். இங்கு, திரிணமுல் காங்கிரசின் அசுர வளர்ச்சியால்,

Advertisement

காங்கிரசுடன் கைகோர்க்க வேண்டிய கட்டாயம், மார்க்சிஸ்ட்டுக்கு உள்ளது.கடந்த, 10 ஆண்டுகளாக, இங்கு தனித்து போட்டியிட்டும் எந்த பயனும் கிடைக்க வில்லை.


இதனால், காங்கிரசுடன், அறிவிக்கப் படாத கூட்டணி அமைக்க வேண்டும் என, யெச்சூரி விரும்புகிறார். இந்த விஷயத்தில், இரு தரப்புக் கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கட்சிக்குள் கோஷ்டி பூசல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ராஜினாமா?



மத்திய குழு கூட்டத்துக்கு பின் நடந்த, பொலிட்பீரோ கூட்டத்தில், தன் நிலைப்பாடு ஏற்கப்படாவிட்டால், பொதுச் செயலர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக, சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார். பொதுச் செயலர்பதவியை, யெச்சூரி எந்த நேரத்திலும் ராஜினாமா செய்யலாம் என்ற பரபரப்பு, மார்க்சிஸ்ட் வட்டாரத்தில் நிலவுகிறது.


Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kundalakesi - VANCOUVER,கனடா
22-ஜன-201818:49:37 IST Report Abuse

kundalakesiஇந்த தர் திர் பங்காள்ஸ் செல்லுமிடமெல்லாம் தரித்திரமே, இவனுகளுக்கு கிடைக்கிறது கிடைச்சுடும்.

Rate this:
sundaram - Kuwait,குவைத்
22-ஜன-201818:41:30 IST Report Abuse

sundaramசென்ற முறை தேர்தலில் கம்யூனிஸ்டுகள் தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரசுடன் கூட்டணி வைத்ததாக ஞாபகம்

Rate this:
sundaram - Kuwait,குவைத்
22-ஜன-201817:36:54 IST Report Abuse

sundaramகாங்கிரசுடன் நேரடி கூட்டணி கிடையாது. ஆனால் திமுகவுடன் கூட்டணி அதன் மூலம் காங்கிரசுடன் கூட்டு பொரியல்

Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X