மக்கள் வழங்கும் சான்றிதழே மகத்தானது: பிரதமர் மோடி மனம் திறந்த பேட்டி Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மக்கள் வழங்கும் சான்றிதழே மகத்தானது!
பிரதமர் மோடி மனம் திறந்த பேட்டி

''நாட்டின் முன்னேற்றத்துக்காக பா.ஜ., அரசால் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி., உள்ளிட்ட அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த ஆட்சி எப்படி நடக்கிறது என்பது குறித்து மக்கள் வழங்கிடும் சான்றிதழ் தான், மகத்தானது,'' என, பிரதமர் நரேந்திர மோடி, தெரிவித்தார்.

பிரதமர் மோடி, Prime Minister Modi, பண மதிப்பிழப்பு, demonetization, ஜி.எஸ்.டி.,GST,உலக வங்கி,World Bank,  அந்நிய நேரடி முதலீடு, Foreign Direct Investment,  காங்கிரஸ் ,Congress,  விவசாயத் துறை, Agriculture, பிரதமர் நரேந்திர மோடி, Prime Minister Narendra Modi, சர்வதேச நிதியம்,


தனியார் 'டிவி'க்கு, நேற்றிரவு பிரதமர் நரேந்திரமோடி அளித்த சிறப்பு பேட்டி:இந்திய அரசு மேற்கொண்டிருக்கும் நிதி சார்ந்த முன்னேற்ற நடவடிக்கைகளை, சர்வதேச நிதியம், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும், வல்லுநர்களும் வரவேற்றுள்ளனர். இன்றைய நிலையில் மத்திய அரசின் நிதிக்கொள்கை சிறப்பானதாக மிளிர்கிறது.


கடந்த மூன்று ஆண்டுகளில், முன்னேப்போதும் இல்லாத வகையில், பல்வேறு விதத்திலும் இந்திய உலக அளவில் புதிய சகாப்தத்தை படைத்து வருகிறது. அந்நிய நேரடி முதலீடானது முன்பு, 30 பில்லியன் டாலராக இருந்தது; தற்போது, இது 60 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. புதிய பொருளாதார கொள்கையின் மீதான நம்பகத்தன்மை அதிகரித்த காரணத்தாலேயே, இது போன்ற வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது.


நாட்டின் முன்னேற்றத்துக்காக பா.ஜ., அரசால் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி., உள்ளிட்ட அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் மக்கள் ஏற்றுக் கொண்டு உள்ளனர். இந்த ஆட்சி எப்படி நடக்கிறது

என்பது குறித்து மக்கள் வழங்கிடும் சான்றிதழ்தான், மகத்தானது.


இந்நாட்டின் வளர்ச்சிக்கு இன்னும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. முதலில் தற்போதுள்ள அரசியல் கலாசாரம் அடியோடு மாற்றப்படவேண்டும். ஏனெனில், இது காங்கிரசால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று. லோக்சபா மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்நடத்தப்படவேண்டும். இதன் மூலமாக, தேவையற்ற வகையில் மக்களின் வரிப்பணம் விரயமாவதைத் தடுக்க முடியும்.


தவிர, தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதும் மிக எளிதாகிவிடும். இது தொடர்பாக, அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர் களுடன் தனித்தனியாக பேசுகையில், 'இந்த யோசனை நல்லது'என்கின்றனர். அதுவே, பொதுவெளியில் பேசும்போது அவர்கள் சார்ந்துள்ள கட்சிகளின் நிலைபாட்டினைத் துாக்கிப் பிடிக்கின்றனர்.


அறிவியல்சார் விவசாயம்விவசாயத் துறையில் இன்னும் நாம் நிறைய மாற்றங்களை, குறிப்பாக அறிவியல் தொழில் நுட்பங்களைப் புகுத்த வேண்டியுள்ளது. விவசாயம் நிலைக்க செழிப்பான நிலம், போதிய தண்ணீர் வசதி அவசியம். வறட்சியின் காரணமாக விவசாயம் பெரிதும் பாதிக்கிறது. இவ்வாறான நேரங்களில் புதிய தொழில்நுட்ப முறைகளை கையாள வேண்டும்.


மூன்று மாடி கட்டடத்தை, படிக்கட்டு இல்லாமல் கட்டுவதால் என்ன பயன் இருக்க முடியும்? தனி நபர் ஒருவர் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் மருத்துவரிடம் செல்கிறார்; அவர் ரத்த பரிசோதனை செய்யுமாறுபரிந்துரைக்கிறார். அது போலத்தான், விவசாயம். சில பிரச்னைகள் எழும்போது தொழில் நுட்பத்தை நாட வேண்டும்.இந்த மண்ணின் விளைச்சல் தன்மை எவ்வாறு இருக்கும் என்பதை அறிய, மண் பரிசோதனை செய்யப்பட வேண்டும். தண்ணீர் சேமிப்புடன், சூரிய மின் சக்தியிலான மோட்டார்களை பயன்படுத்த வேண்டும். இதன்

Advertisement

மூலமாக மின்சாரச் செலவினை, நிதிச் செலவினை கட்டுப்படுத்த முடியும்.இவ்வாறு, மோடி தெரிவித்தார்.


காங்கிரஸ் இல்லா இந்தியா!''நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல, காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும். ஏதோ தேர்தலை மட்டும் கருத்தில் கொண்டு இதை கூறவில்லை. காங்கிரஸ், இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது இளைஞர்கள் மத்தியில் தியாக மனப்பான்மை விதைத்தது; சுதந்திரத்துக்குப்பின் காங்கிரசின் போக்கு மாறிப்போனது. பரம்பரை ஆட்சியில் ஊழலும், சாதியமும், சுரண்டலும் அதிகரித்துவிட்டது. அதனால்தான், காங்கிரஸ் கட்சியின் அரசியல் கலாசாரத்தில் இருந்து விடுபட வேண்டும் என்கிறேன்.


'வாழ்க்கை போராட்டத்துக்கு தீர்வு''' சாதாரண மக்களின் வாழ்க்கை போராட்டத் துக்கு தீர்வு காணப்பட வேண்டும், அதுவே முக்கியம். பொதுமக்களின் தேவைக்கு ஏற்ற வாறு அரசு கட்டமைப்பு இருக்க வேண்டும். வாழ்க்கை முறை எளிதாக அதிக முயற்சிகளை மேற்கொள்வோம். சாதாரண ஏழை தாய்க்கு புகையில் இருந்து விடுதலை கிடைக்க 3.3 கோடி குடும்பங்களுக்கு சமையஸ் காஸ் வழங்கும், 'உஜ்வாலா' திட்டத்தை ஏற்படுத்தினேன். - நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜன-201822:24:02 IST Report Abuse

kulandhaiKannan19 மாநிலங்களில் மக்கள் ஆதரவுடன் ஆட்சி. இதுவே மக்களின் சர்டிபிகேட்

Rate this:
Viswanathan - karaikudi,இந்தியா
22-ஜன-201820:35:41 IST Report Abuse

Viswanathan திருவிளையாடல் நாகேஷ் , சொல்லும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது , பேசும் போது நல்லா பேசு ஆனால் எழுதும் போது கோட்டை விட்டிரு என்பார் . அது போல் தான் இவர் நன்றாக பேசுகிறார் .

Rate this:
ssk - chennai,இந்தியா
22-ஜன-201820:27:24 IST Report Abuse

ssk2029 வரைக்கும் உங்களை அசைக்க முடியாது மோடி அவர்களே , மக்கள் உங்கள் பக்கம் . மாக்கள் எதிர்பக்கம் ...

Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X