வங்கிகளில் ரூ.15 லட்சம் கோடி வாராக்கடன் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வங்கிகளில் ரூ.15 லட்சம் கோடி வாராக்கடன்
வசூலிக்க வழி சொல்கிறது ஊழியர் சம்மேளனம்

ஊட்டி:''வங்கிகளில் நிலுவையில் உள்ள, 15 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடனை வசூலிக்க, சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட சொத்து களை, 'ஜப்தி' செய்யவேண்டும்,''என, தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன பொதுச் செயலர், அருணாசலம் கூறினார்.

 வங்கிகளில்,ரூ.15 லட்சம் கோடி,வாராக்கடன்


ஊட்டியில் நடந்த, நீலகிரி மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் மாநாட்டில் பங்கேற்று, அவர் கூறியதாவது:முந்தைய, காங்., அரசும், இப்போதைய, பா.ஜ., அரசும், பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதில் தான் குறியாக உள்ளன.அதன்படி, சில மாதங்களுக்கு முன், பாரத ஸ்டேட் வங்கியோடு, அதன் கிளை வங்கிகள் இணைக்கப்பட்டன.


அதுவரை சிறப்பாக செயல்பட்ட, பாரத ஸ்டேட்

வங்கி, கிளை வங்கிகள் இணைப்புக்கு பின், பின்னடைவை சந்திக்கிறது. சேமிப்புக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டன.நாட்டில்உள்ள, 19 பொதுத் துறை வங்கிகளை, 5 - 6 வங்கி களாக குறைக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதனால், வங்கித் துறை மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொள்ளும்.நாட்டில் உள்ள வங்கிகளில், பெரு முதலாளிகள், 15 லட்சம் கோடி ரூபாய் வரை வாராக்கடன் வைத்துள்ளனர். இதில், 12 நிறுவனங் களின் வாராக்கடன் மட்டும், இரண்டு லட்சம் கோடி ரூபாய்.


விஜய் மல்லையா உட்பட, வாராக்கடன் வைத்து உள்ளவர்களின், தனிப்பட்ட சொத்துகளை ஜப்தி செய்தால் மட்டுமே, வாராக்கடன் வசூலாகும். வங்கிகளில், நகைக்கடன், கல்விக் கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாதவர்களின் புகைப் படத்தை பிரசுரித்து, அவர்களிடம் இருந்து கடனை வசூலிப்பது போன்று...வாராக்கடன் வைத்துஉள்ள பெரு முதலாளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, லோக்சபா நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது, இதை, மத்திய அரசு ஏற்க வேண்டும்.


அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நியமிக்கப்படும், வங்கிகளின் தலைவர், நிர்வாக இயக்குனர் போன்றோரின் நிர்வாக குளறுபடிகள் தான், இத்தகைய பிரச்னைகளுக்குகாரணம்.

Advertisement

முறைகேடு, ஊழல், வாராக்கடனுக்கு காரண மான, வங்கி உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.திவாலாகும் வங்கிக் கிளைகளை, வாடிக்கையாளர்களின் டிபாசிட் தொகையை வைத்தே புனரமைக்கும், 'நிதி தீர்வு மற்றும் வைப்புத் தொகை காப்பீடு' மசோதா வால், தங்களின் டிபாசிட் தொகைக்கு பாதுகாப்பு இருக்காது என்ற அச்சம், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.


இதனால், வங்கிகளில் உள்ள தங்கள் டிபாசிட் பணத்தை, அவர்கள் திரும்ப பெறுகின்றனர். எனவே, அந்த மசோதாவை, மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அருணாசலம் கூறினார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
23-ஜன-201813:42:35 IST Report Abuse

g.s,rajanசும்மா புருடா விடறானுங்க,300 அல்லது 400 லட்சம் கோடிகள் இருக்கும் என பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன

Rate this:
அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா
23-ஜன-201807:24:36 IST Report Abuse

அம்பி ஐயர்என்னய்யா சொல்றீங்க...... ஒண்ணும் புரியலை.....

Rate this:
Indhiyan - Chennai,இந்தியா
22-ஜன-201822:19:33 IST Report Abuse

Indhiyanரொம்ப சிம்பிளான கேள்வி. 15 லட்சம் கோடிக்கு செக்யூரிட்டி [நிலம்,சொத்து] போன்றவை இருக்குமே. முன்னப்பின்னே ஆனால் கூட 10 லட்சம் கோடிக்காவது இருக்குமே. அதை விற்று சரி கட்டலாமே. [செக்யூரிட்டி வாங்காமல் கடன் தந்திருந்தால் வங்கி மேனேஜரையும், அமைப்பு குறை காரணமாக RBI கவர்னரையும் ஜெயிலில் போடவேண்டும். அவர்கள் சொல்லட்டும், அரசியல் அழுத்தம் காரணமாக தவறாக கொடுக்கப்பட்டது என்று.

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
22-ஜன-201820:21:45 IST Report Abuse

Nallavan Nallavanமக்களுக்கு அவங்க பண்ணுற முதலீடுகளுக்கு வட்டியைக் கொறைச்சு, கடனுக்கு வட்டியைக் கூட்டுங்க ..... அதை வெச்சு பெருமுதலாளிகளைக் கூல் பண்ணிடலாம் ....

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
22-ஜன-201820:11:00 IST Report Abuse

Pugazh Vஅட அட அடா..வாசகர்களில் தான் எத்தனை சிபிஐ அதிகாரிகள், துப்பறிவாளர்கள், நீதிபதிகள் // திருட்டு குடும்பம், கொள்ளையடித்தவர்கள் , ஊழல்வாதிகள் என்று பலரையும் கண்டு பிடித்து தீர்ப்பு எழுதியிருக்கிறார்கள். பேஷ் பேஷ். நாலு வருஷமா அரசு என்ன செய்தது.. கேக்கவே ஆளில்லை.

Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
22-ஜன-201818:51:33 IST Report Abuse

Bhaskaranசிறுவிவசாயிகள் கடன்களைத் தவிர மற்ற அணைத்து கடன்களையும் வசூல் செய்வதில் தீவிரம் காட்டவேண்டும் 90 கலீல் சிட்டிபாங்கில் கடன் வாங்கியவர்கள் வாடுகளுக்கு மிரட்டி கடன் வசூலிப்பார்கள் அதுபோன்ற முறைகளை மென்மையாககையாண்டு அனைத்துக் கடன்களையும் வசூல் செய்வதில் மும்முரம் காட்டவேண்டும் அந்த பணம் எல்லாம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பணம் என்கிற நினைவுத்திருந்தால் வங்கியாளர்கள் இம்மாதிரி கொடுத்தப் பணம் வரவே வராது என்று தெரிந்திருந்தும் கடன்கொடுப்பார்கள்

Rate this:
22-ஜன-201818:08:10 IST Report Abuse

அபுகவலைப் படாதீங்க... 2050க்குள் நமது வங்கிக் கணக்குகளில் ஆளுக்கு 15 லட்சம் போட்டுருவாங்க.... காத்திருப்போம்.

Rate this:
venkat - ,
22-ஜன-201821:48:48 IST Report Abuse

venkatஉழைச்சு,சம்பாதிச்ச"காசே ஒட்டுவதில்லை! இதில் ஓசி காசு கேக்குதோ!?...

Rate this:
Krishnamoorthi A N - Sathyamangalam,இந்தியா
22-ஜன-201816:02:31 IST Report Abuse

Krishnamoorthi A Nசெக்யூரிட்டி இல்லாமல் விஜய மல்லையா போன்ற பெரிய முதலைகளுக்கு வங்கி அதிகாரிகள் அவரவர் இஷ்டம் போல் கையூட்டு பெற்று கொண்டு கடன் வழங்குவார்களாம். கடன் வாங்கியவன் அதனை முழுங்கி ஏப்பம் விட்டுவிட்டால் மத்திய அரசை குறை கூறுவார்களாம். கடன் வழங்க உத்தரவிட்ட அதிகாரியை அதன் வசூல் முழுமைக்கும் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். கடன் திரும்பிச் செலுத்தப் படவில்லையானால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கிரிமினல் நடவடிக்கை தொடர்ந்தால் எந்த வங்கியிலும் வராக்கடன் இருக்காது.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
22-ஜன-201815:41:20 IST Report Abuse

Endrum Indianவங்கிகள் கடன் கொடுக்கும் போது என்ன சும்மாவா கொடுக்கின்றார்கள், வீடு, நிலம், அசையாச்சொத்துக்கள், எப்.டி. என்று அந்த பத்திரங்கள்/சர்டிபிகேட் தங்கள் வங்கிக்கு அனுசரணையாக செய்து கொண்டு தான் கொடுக்கின்றது. பிறகு இந்த கடன்கள் வராத பட்சத்தில் அவர்கள் வீடு, நிலம், அசையாச்சொத்துக்கள், எப்.டி. பணமாக்கவேண்டியது தானே. இல்லை கமிஷன் வாங்கிக்கொண்டு எந்த ஆதாரமும் இல்லாமல் கடனை வாரி வாரி கொடுக்கின்றதா?????அப்போ அது அவர்கள் மேலாளர்கள் செய்யும் தகிடுதத்தம். அப்போ இந்த மேலாளர்களை நன்றாக கவனியுங்கள். எல்லாம் சீராகும்.

Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
22-ஜன-201815:09:53 IST Report Abuse

g.s,rajanNo No ,this is not true ,it may be around 200 to 300 lakh crore ,news paper reports say. . g.s.rajan, Chennai.

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement