அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் - சொல்கிறார் விஜயகாந்த் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் - சொல்கிறார் விஜயகாந்த்

Updated : ஜன 22, 2018 | Added : ஜன 22, 2018 | கருத்துகள் (24)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தேமுதிக,DMDK, விஜயகாந்த்,Vijayakanth, அரசியல், Politics, ரஜினி கமல் , Rajini Kamal , ஆண்டாள் ,Andal,   ஸ்ரீவில்லிபுத்துார் , Srivilliputhur,  பிரேமலதா, Premalatha,சுதீஷ் , Sudheesh, உள்ளாட்சி தேர்தல், கமல் அரசியல் ரஜினி அரசியல், சீனியர் , ஆண்டாள் கோயில்,Andal Temple

ஸ்ரீவில்லிபுத்துார் : ''அரசியலில் நான் சீனியர், ரஜினி, கமல் ஜூனியர். அவர்கள் அரசியலில் இறங்கி பார்க்கட்டும். ஆண்டாள் அருளால் ஆட்சியை பிடிப்பேன்,'' என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார்.

நேற்று மாலை 4:20 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் மற்றும் கட்சியினருடன் வந்த விஜயகாந்த், வருஷாபிேஷக பந்தலில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னார் முன் அர்ச்சனை செய்தனர். கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செய்தபின் பத்திரிக்கையாளர்களிடம் விஜயகாந்த் பேசியதாவது; கடந்த முறை ஆண்டாளை வணங்கியதால், எதிர்கட்சி தலைவர் ஆனேன். என் தாயார் ஆண்டாள். என் தாயார் பெயரும் ஆண்டாள். ஆண்டாளை வணங்கினால் ஆட்சியை பிடிப்பேன்.

வைரமுத்துக்கு எதிரான ஜீயரின் போராட்டத்தை தே.மு.தி.க., ஆதரிக்கும். உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை. தனித்து போட்டியிடுவோம். தெய்வம் என் பக்கம் இருக்கிறது. எம்.எல்.ஏ., சம்பளம் வேண்டாம் என சொல்லும் தினகரன், மிடாஸ் மதுஆலையை மூடுவாரா. மாநில அரசை மத்திய அரசு தான் இயக்குகிறது என்பதே உண்மை. இரு அரசுகளும் வேஸ்ட்.
உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு தகுந்த பாதுகாப்பை அரசு தரவேண்டும். அரசியலில் ரஜினி, கமல் இறங்கட்டும். இறங்கி பார்க்கட்டும். சினிமாவில் அவர்கள் சீனியராக இருந்தாலும், அரசியலில் நான் தான் சீனியர். அவர்கள் ஜூனியர், என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
22-ஜன-201817:02:35 IST Report Abuse
Pasupathi Subbian உண்மை தானே. மற்றவர்கள் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்று யோசிக்கவே ஆரம்பிக்கும் முன் இவர் தமிழக அரசியலில் பல காலம் கண்டுவிட்டார். அவர் குடிகாரன், உளறுவாயன் என்பது மட்டும் தானே அவர் மீதுள்ள குற்றாச்சாட்டு . ஏன் கமல்ஹாசனோ, அல்லது ரஜினி அவர்களோ மது அருந்துவது கிடையாதா? அப்படி என்றால் அவர்கள் நல்லவர்கள் , இவர் கெட்டவரா? அவரது அறிக்கைகளை நன்கு கவனித்தவர்களுக்கு தெரியும் அவரின் நோக்கங்கள் , சும்மா கேலிபேசுவது மட்டுமே குறிக்கோளாக கொண்டவர்கள் இவரை தாக்கி பேசி தங்களின் மன அரிப்பை தீர்த்துக் கொள்கின்றனர் .
Rate this:
Share this comment
Cancel
Manishankar - coimbatore,இந்தியா
22-ஜன-201815:19:45 IST Report Abuse
Manishankar இந்த முறை தவறின் இனி எந்த முறையும் இல்லை உமக்கு. சிந்தித்து செயல் படுவீராக.
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
22-ஜன-201811:56:56 IST Report Abuse
Malick Raja First Mr.Vijayagaanth's mental, medical fitness should restored prior to make comments on others .. He couldn't stand ,walk and speech why he is caring others .. He must get self strength then he can start for others .. His attitudes spoiled his good things all .. now he is help less in politics ..Ejected party
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X