ஐ.நா.வில் ஜாதவ் விவகாரத்தை எழுப்பிய பாக்.,| Dinamalar

ஐ.நா.வில் ஜாதவ் விவகாரத்தை எழுப்பிய பாக்.,

Added : ஜன 22, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பாகிஸ்தான், Pakistan, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், UN Security Council, இந்திய கடற்படை,Indian Navy,  குல்பூஷண் ஜாதவ் ,Kulbhushan Jadhav, ராணுவ நீதிமன்றம், Army Courts, தூக்கு தண்டனை , மலீஹா லோதி, Malia Lodhi, ஆப்கானிஸ்தான்,  Afghanistan,

நியூயார்க் : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியது.

பலுாசிஸ்தான் மாகாணத்தில் சதி வேலையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, குல்பூஷணை பாகிஸ்தான் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், குல்பூஷணுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.இந்நிலையில், ஆப்கான் விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு கூட்டம், நியூயார்கில் நடந்தது.

இதில் ஐ.நா. சபைக்கான பாகிஸ்தான் தூதர் மலீஹா லோதி கலந்து கொண்டு பேசியது: பாகிஸ்தானால் கடந்த ஆண்டு இந்திய உளவாளியான குல்பூஷண் ஜாதவ் கைது செய்யப்பட்டது, அந்நாட்டின் செயலை சந்தேகமின்றி நிரூபிக்கிறது. பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் புகலிடங்களை ஏற்படுத்தி போதைப் பொருள் கடத்தல் மூலம் வருமானம் ஈட்டி வந்தால், அவர்களது செயல்களுக்கு வெளியில் இருந்து ஆதரவோ, நிதியுதவியோ தேவைப்படாது.

ஆதலால், ஆப்கானிஸ்தானும் அமெரிக்காவும், இந்தப் பிரச்னைக்கு ஆப்கானிஸ்தானுக்குள் தீர்வு காண வேண்டும். அந்த சண்டைக்கு முடிவு கட்ட வேண்டிய பொறுப்பை பிற நாடுகளிடம் அளிக்கக் கூடாது. எல்லைக்கு அப்பால் பயங்கரவாத முகாம்கள் இருப்பதாக கற்பனையாக நினைத்துக் கொண்டிருக்கும் நாடுகள், யதார்த்த நிலை குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும் என்றார் லோதி. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கலந்து கொண்ட நாடுகள் மத்தியில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக எந்த நாடும் பேசவில்லை.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. SIV GOWRI - Chennai,இந்தியா
22-ஜன-201809:10:29 IST Report Abuse
P. SIV GOWRI பாக் ஆதரவாக யாருமே பேசவில்லை .எப்படி பேசுவார்கள் ￰எவ்வள்வு நல்லவர்கள் என்பது எல்லோர்க்கும் தெரியம்
Rate this:
Share this comment
Cancel
ramanathan - Ramanathapuram,இந்தியா
22-ஜன-201808:07:51 IST Report Abuse
ramanathan மோடியை போல் துணிச்சல் மிக்க பலமான அரசு இருப்பது அவசியம்
Rate this:
Share this comment
Cancel
22-ஜன-201806:51:52 IST Report Abuse
அப்பு இந்தப் பக்கிகளோடு நமக்கு உறவு தேவை தானா?
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
22-ஜன-201804:10:42 IST Report Abuse
Kasimani Baskaran இவங்களை மொத்தமாக அழிக்கவில்லை என்றால் இந்தியாவுக்கு நிரந்தர பிரச்சினைதான்...
Rate this:
Share this comment
Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா
22-ஜன-201806:15:37 IST Report Abuse
Jey Kay - jeykay@email.comஅவர்களை மொத்தமாக அளிப்பது நடைமுறையில் நடக்காத காரியம். அங்கு படிப்பறிவற்றவர்கள் அதிகம், படித்தவர்களுக்கும் குழந்தை பருவம் முதலே மனதில் இந்தியாவின்மீது வன்மம் போதிக்கப்படுகிறது. விஞ்ஞானத்திற்கு பதில் மத சித்தாந்தம் போதித்து குழந்தைகளின் அறிவு மழுங்கடிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கு இடையில் இருக்கும் தீராத பிரச்சனைகளுக்கு இது ஒரு முக்கிய காரணம். ஆப்கானிஸ்தானில் காலூன்ற நினைத்த சோவிய படைகளை எதிர்கொள்ள பாகிஸ்தானிற்கு ஆயுதம் அளித்து பாகிஸ்தானின் துணையுடன் அமரிக்கா வெற்றிகொண்டது. சோவிய படைகள் பின்வாங்கிய பிறகு, துப்பாக்கி தூக்கிய தீவிரவாதிகளின் கைகள் சும்மா இருக்குமா, அவர்களுக்கு புதிய வேலைகள் வழங்க வேண்டியது பாகிஸ்தானிய ராணுவத்தின் பொறுப்பு, அந்த தருணத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட புதிய வேலை திட்டம் மற்றும் புதிய கலம் தான் இந்திய எல்லையும், இந்திய ராணுவ வீரர்களை தாக்குவதும். இந்தியாவினுல் ஊடுருவுவது முன்பைவிட தற்பொழுது கடினமாக இருப்பதால்தான், குண்டு வாய்த்த கைகள் வளர்த்த நாட்டின் மீதே அவ்வப்பொழுது தனது கைவரிசை காட்டுகிறது. ராணுவ நிதி குறையும் போதோ அல்லது ராணுவத்தின் கை சற்று இறங்கும் போதோ, எல்லையில் கமுக்கமாக ஏதாவது அடாவடித்தனம் புரிந்து, அதனால் இந்தியா திருப்பித்தாக்குவதை பெரிதாக ஊதி இந்தியாவினால் அச்சுறுத்தல் இருப்பதாக இருக்கும் மாயையை தக்கவைத்துக்கொள்கிறது. ஒரு பக்கம் முட்டாள் முல்லாக்கள், மறுபக்கம் தனது பை மட்டும் நிரம்பினால் போதும் என்று என்னும் ராணுவம், இவை இரண்டிற்கு மத்தியில் சிக்கித்தவிக்கும் மக்களின் நிலை பரிதாபம். வெளிநாடுகளுக்கு பயணித்து, பலதரப்பட்ட நாட்டு மக்களுடன் வசிக்கும் தருவாயிலும், மெத்தப்படிக்கும் பொழுதும் பாகிஸ்தானியர்கலின் மாயை கலைகிறது. முல்லாக்கள் மற்றும் ராணுவத்தின் எண்ணங்களை அடையாளம் கண்டு அணைத்து மக்களின் மனநிலை மாறும்போது, இந்தியாவின் மீது உள்ள பார்வை மாறும்பொழுது மட்டும் தான் எல்லையில் அமைதி நிலவும். அந்த மாதிரியான எந்த ஒரு மாறுதலும் குறைந்தது இரண்டு தலைமுறைகளுக்கு நடப்பதாக தெரியவில்லை என்பதே எதார்த்தம்....
Rate this:
Share this comment
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
22-ஜன-201804:02:31 IST Report Abuse
Milirvan THIS VIRAGO MALEEHA LODHI IS AN APT SPECIMEN OF DETES PAKKI'STANIS.. NO WONDER... HER STYLE AND SPEECH PROMPTLY MET WITH THE WORLD'S SCORN..
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-ஜன-201803:41:47 IST Report Abuse
தமிழ்வேல் முழு பூசணியை சோத்தில் மறைச்சு பார்த்திருக்கலாம். இவனுவோ முழு பரங்கியையே மறைக்கிறானுவோ ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை