ஐ.நா.வில் ஜாதவ் விவகாரத்தை எழுப்பிய பாக்.,| Dinamalar

ஐ.நா.வில் ஜாதவ் விவகாரத்தை எழுப்பிய பாக்.,

Added : ஜன 22, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பாகிஸ்தான், Pakistan, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், UN Security Council, இந்திய கடற்படை,Indian Navy,  குல்பூஷண் ஜாதவ் ,Kulbhushan Jadhav, ராணுவ நீதிமன்றம், Army Courts, தூக்கு தண்டனை , மலீஹா லோதி, Malia Lodhi, ஆப்கானிஸ்தான்,  Afghanistan,

நியூயார்க் : ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியது.

பலுாசிஸ்தான் மாகாணத்தில் சதி வேலையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, குல்பூஷணை பாகிஸ்தான் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், குல்பூஷணுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.இந்நிலையில், ஆப்கான் விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு கூட்டம், நியூயார்கில் நடந்தது.

இதில் ஐ.நா. சபைக்கான பாகிஸ்தான் தூதர் மலீஹா லோதி கலந்து கொண்டு பேசியது: பாகிஸ்தானால் கடந்த ஆண்டு இந்திய உளவாளியான குல்பூஷண் ஜாதவ் கைது செய்யப்பட்டது, அந்நாட்டின் செயலை சந்தேகமின்றி நிரூபிக்கிறது. பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் புகலிடங்களை ஏற்படுத்தி போதைப் பொருள் கடத்தல் மூலம் வருமானம் ஈட்டி வந்தால், அவர்களது செயல்களுக்கு வெளியில் இருந்து ஆதரவோ, நிதியுதவியோ தேவைப்படாது.

ஆதலால், ஆப்கானிஸ்தானும் அமெரிக்காவும், இந்தப் பிரச்னைக்கு ஆப்கானிஸ்தானுக்குள் தீர்வு காண வேண்டும். அந்த சண்டைக்கு முடிவு கட்ட வேண்டிய பொறுப்பை பிற நாடுகளிடம் அளிக்கக் கூடாது. எல்லைக்கு அப்பால் பயங்கரவாத முகாம்கள் இருப்பதாக கற்பனையாக நினைத்துக் கொண்டிருக்கும் நாடுகள், யதார்த்த நிலை குறித்து சிந்தித்து பார்க்க வேண்டும் என்றார் லோதி. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கலந்து கொண்ட நாடுகள் மத்தியில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக எந்த நாடும் பேசவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. SIV GOWRI - Chennai,இந்தியா
22-ஜன-201809:10:29 IST Report Abuse
P. SIV GOWRI பாக் ஆதரவாக யாருமே பேசவில்லை .எப்படி பேசுவார்கள் ￰எவ்வள்வு நல்லவர்கள் என்பது எல்லோர்க்கும் தெரியம்
Rate this:
Share this comment
Cancel
ramanathan - Ramanathapuram,இந்தியா
22-ஜன-201808:07:51 IST Report Abuse
ramanathan மோடியை போல் துணிச்சல் மிக்க பலமான அரசு இருப்பது அவசியம்
Rate this:
Share this comment
Cancel
22-ஜன-201806:51:52 IST Report Abuse
அப்பு இந்தப் பக்கிகளோடு நமக்கு உறவு தேவை தானா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X