ஏகாம்பரநாதர் உற்சவர் சிலைகள் தொல்லியல், 'மாஜி' இயக்குனர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏகாம்பரநாதர் உற்சவர் சிலைகள் தொல்லியல், 'மாஜி' இயக்குனர் ஆய்வு

Added : ஜன 22, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

காஞ்சிபுரம் : ஏகாம்பரநாதர் கோவிலில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முன்னிலையில், தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி, உற்சவர் சிலைகளை, நேற்று ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், நாயன்மார்களால் பாடல் பெற்ற தலமாகவும், பஞ்சபூத தலங் களில் முதன்மையானதாவும் விளங்குகிறது.இந்த கோவிலில் உள்ள பழமையான உற்சவர் சிலை சிதிலம் மற்றும் அதை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளதாக கூறி, அறநிலையத் துறை உத்தரவின்படி, புதிய சிலையை செய்தனர்.

அந்த உற்சவர் சிலையில், தங்கம் கலந்திருப்பதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், பழைய மற்றும் புதிய சிலைகளை, நவீன கருவி மூலம் ஆய்வு செய்தனர். இரு சிலைகளிலும் தங்கம் இல்லை என, அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் மற்றும் போலீசார் முன்னிலையில், தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி, கோவிலில் உள்ள பழைய, புதிய உற்சவர் சிலைகளை ஒப்பிட்டு, நேற்று ஆய்வு செய்தார்.

உடன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, டி.எஸ்.பி., சிவசங்கரன், கோவில் செயல் அலுவலர் முருகேசன் ஆகியோர் இருந்தனர்.அதன் பின், பத்திரிகையாளர்களிடம் தொல்லியல் முன்னாள் இயக்குனர் கூறுகையில், ''பழைய சிலையின் பழமையை அறிய, நுண் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பழைய சிலையில் தங்கம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை,'' என்றார்.

கடந்த ஆண்டு, ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சென்ற, தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி, பழைய உற்சவர் சிலை, 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.அந்த சிலை, பல கோடி ரூபாய் மதிப்புள்ளது என, தெரிவித்தார். மேலும், பழைய சிலையை வழிபாட்டுக்கு பயன்படுத்துவது குறித்தும் விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kandhan. - chennai,இந்தியா
22-ஜன-201808:39:00 IST Report Abuse
kandhan. காஞ்சியில் புத்தமும்,ஜைனமும் இருந்த காலத்தில் மக்கள் கடவுளை மனதில் வைத்து பூஜை செய்தனர் அதனால் மக்களின் மனதில் கோபம் ,பொறாமை , ஆசை (மண் ஆசை ,பெண் ஆசை ,பொன் ஆசை )போன்ற தீய குணங்கள் இல்லாமல் இருந்தது பிற்காலத்தில் வந்த மதங்கள்(மதம் பிடித்து அலைகின்றன)மனிதனை செம்மை படுத்தாமல் அனைத்து கெட்ட எண்ணங்களும் வளர உறுதுணையாகஇருந்தது என்பதுதான் உண்மை கோவிலில் இருக்கும் கடவுள் வெளியில் வரமாட்டார் என்ற தைரியத்தில்தான் மக்கள் தவறு செய்கிறார்கள் எனவே மக்கள் பகுத்தறிவோடு சிந்தித்தால் உண்மை விளங்கும் கடவுள் கோவிலில் இல்லை ஒவ்வொருவரின் மனத்திலும் தான் இருக்கிறார் என்ற உண்மை விளங்கும் ஆனால் விட்டில் பூச்சிகளைப்போன்று கடவுள் என்ற மாயையில் விழுந்து மக்கள் மடிவதுதான் நித்தம் நடக்கிறது இதற்க்கு சிலர் துணை நிற்பது வேதனயான விசயம், மக்களே சிந்தியுங்கள் கோவிலில் இருக்கும் சிலைகளை கடவுள் என்றும் அதை திருடர்கள் திருடிவிட்டால் அதை கல் சிலை என்றும் எழுதுவத்தில் இருந்து உங்களுக்கு புரியவில்லையா இது எல்லாம் பணம் திருடும் வழிக்கு உருவாக்கப்பட்ட ஆகமம்தான் என்பது? சிந்தியுங்கள் உங்களுக்கு உண்மை புரியும் இதில் தினமலர் ஒன்றை தெளிவாக சொல்லி இருக்கிறது கடவுள் வெளியில் வந்தால் அதற்க்கு பெயர் சிலை இதற்கும் பாதுகாப்பு கொடுப்பதற்கு தனியாக ஒரு துறையே போலீசில் இயங்குவது புரிகிறதா? அப்படி இருக்கும் பட்சத்தில் மாறவேண்டியது நம் மக்கள்தான் சிந்தியுங்கள்..... உங்கள் கடமைகளை செவ்வனே செய்யுங்கள்...... உண்மையாக இருங்கள், ஏழைகளுக்கு உதவுங்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் ..... வாழ்க வளமுடன் நன்றி கந்தன் சென்னை
Rate this:
Share this comment
Cancel
madhavaraman - KRISHNAGIRI,இந்தியா
22-ஜன-201807:14:35 IST Report Abuse
madhavaraman மனிதன் கடவுளுக்கு கட்டுப்பட்டவன், கடவுளுக்கு கடமைப்பட்டவன்,கடவுளுக்கு பயந்தவன், எல்லோருக்கும் மேல் இறைவன் என்கிற நிலை மாறி இப்போது கடவுளுக்கு சேவை செய்ய வேண்டிய மனிதர்கள்-அதிகாரிகள், அரசியல்வாதிகள் ரூபத்தில் சிலை மோசடியில் ஈடுபட்டிருப்பது வருந்த தக்கது.குற்றவாளிகள் கடுமையாக பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
22-ஜன-201804:21:07 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> இந்த ரெண்டு கழக ஆட்ச்சிலேயும் என்டோன்மென்ட் லெந்து சகலமும் பிராடுகளேதான் நடக்காத அநியாயங்களோ அக்கிரமங்களோ இல்லீங்களே ,என்ன தப்பும் ஒழுங்காகவே செய்யப்பட்டுருக்கலாமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X