ம.பி., முதல்வர் சவுகானை மாற்ற பா.ஜ., திட்டம் | Dinamalar

ம.பி., முதல்வர் சவுகானை மாற்ற பா.ஜ., திட்டம்

Added : ஜன 22, 2018 | கருத்துகள் (23)
Advertisement
பா.ஜ,BJP, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்,Chief Minister Shivraj Singh Chouhan,  உள்ளாட்சி தேர்தல் , அமெரிக்கா,America,ம.பி சட்டசபை தேர்தல், Madhya Pradesh assembly election, ராஜ்யசபா,Rajya Sabha, B.J.P,Bharatiya Janata Party, ம.பி.,மத்தியப் பிரதேசம்,Madhya Pradesh,

போபால் : ம.பி.,யில், ஆளுங்கட்சிக்கு எதிரான அலை, மக்கள் மத்தியில் காணப்படுவதால், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானை மாற்றுவது குறித்து, பா.ஜ., மேலிடம் பரிசீலித்து வருவதாக,தகவல் வெளியாகியுள்ளது.

ம.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார்.இங்கு, 14 ஆண்டுகளாக, பா.ஜ., தொடர்ச்சியாக ஆட்சியில் உள்ளது. இதில், 12 ஆண்டுகளாக, சிவ்ராஜ் சிங் சவுகான், முதல்வராக பதவி வகிக்கிறார்.


தோல்வி


ம.பி.,யில், சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், பா.ஜ.,வுக்கு எதிரான அலை வீசுவதை உணர்த்தி உள்ளன. தார், பட்வானி உள்ளிட்ட ஆறு நகராட்சிகளில், நான்கு இடங்களில், பா.ஜ., தோல்வியை சந்தித்துள்ளது. கிராம பஞ்சாயத்துகளுக்கு நடந்த தேர்தல்களிலும், காங்., கணிசமான வெற்றிகளை பதிவு செய்துஉள்ளது.

மக்கள் மத்தியில் அதிருப்தி அலை வீசிய போதும், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், பொது இடங்களில் அமைதி காக்காமல், அடாவடியாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.சமீபத்தில், சிவ்ராஜ் சிங் சவுகான், தன் பாதுகாவலர் ஒருவரை, மக்கள் முன்னிலையில் கன்னத்தில் அறைந்த சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியது.

முன்னதாக, அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்த சவுகான், அமெரிக்காவில் உள்ளதை விட, ம.பி.,யில், சாலைகள் சிறப்பாக உள்ளதாக பேசியது, பலரையும் முகம் சுளிக்க செய்தது. சமூக வலைதளங்களில், சவுகானை, ஏராளமானோர் கடுமையாக விமர்சித்தனர்.


பரிசீலனை


மக்களிடம், சவுகான் அதிருப்தியை சம்பாதித்துள்ள நிலையில், ம.பி.,யில், இந்தாண்டு இறுதியில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.ராஜ்யசபாவில், பா.ஜ., பலத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில், காய் நகர்த்தி வரும் நிலையில், ம.பி., சட்டசபை தேர்தலில், குறைந்த இடங்கள் கிடைத்தால், இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கும் என, பா.ஜ., மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.

இதனால், முதல்வர் சவுகானுக்கு பதில், வேறு யாரையாவது அப்பதவியில் நியமிப்பது குறித்து, பா.ஜ., மேலிடம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
22-ஜன-201813:20:05 IST Report Abuse
pradeesh parthasarathy இவர் அத்வானியின் ஆதரவாளர் .... சீக்கிரம் இவரை மாற்றுங்கள் ....
Rate this:
Share this comment
Cancel
R dhas - Bangalore,இந்தியா
22-ஜன-201812:38:36 IST Report Abuse
R dhas குறைந்த பட்ச தகுதியோ திறனோ இல்லாத இந்த குறுகிய மனப்பாண்மையுடைய மதவாதிகளை கொண்டு வெறும் பொய்களைச்சொல்லி மதத்தை வைத்து மட்டும் எவ்வளவு நாளைக்கு ஓட்ட முடியும்? 10 வருடம்? அல்லது அதிக பட்சம் 15 வருடம்? அதன் பிறகு அடிப்படை வசதி கூட இல்லாதவர்கள் எண்ணிக்கையில் பெருகும்போது இவர்களுக்கு எதிராகவே திரும்புவார்கள். வட மாநிலங்களில் இனி இதுதான் நடக்கும்....
Rate this:
Share this comment
22-ஜன-201813:20:22 IST Report Abuse
KeshavNaiduapdiye tamilnadu la ellam ambani ya irukanga......
Rate this:
Share this comment
R dhas - Bangalore,இந்தியா
22-ஜன-201816:01:30 IST Report Abuse
R dhasநாட்டின் வளர்ச்சி என்பது எல்லோரும் அம்பானியாக மாற வேண்டும் என்பது அர்த்தம் அல்ல. மத இன கிராம நகர வேறுபடின்றி அனைவருக்கும் கல்வி வேலை வாய்ப்பு மருத்துவ சுகாதார வசதிகளே ஆரோக்கியமான வளர்ச்சி .இது தமிழகம் உட்பட இந்தியாவின் சில மாநிலங்களில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு உள்ளது. பெரும்பாலான வட மாநிலங்களின் நிலமை தமிழகத்துடன் ஒப்பிடும் அளவுக்கு கூட இல்லை........
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
22-ஜன-201811:27:05 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சாகப் போற நேரத்திலே சங்கரா, சங்கரான்னானாம் ..
Rate this:
Share this comment
22-ஜன-201813:20:49 IST Report Abuse
KeshavNaiduunga veetulaya?...
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
22-ஜன-201811:13:14 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அப்புறம் அரசு செலவில் தோட்டம், காய்கறி பண்ணை, மாட்டு பண்ணை, பால், வெண்ணை வியாபாரம் இதெல்லாம் பற்றி ஞாபகப்படுத்துங்களேன்.
Rate this:
Share this comment
Cancel
இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா
22-ஜன-201810:39:45 IST Report Abuse
இடவை கண்ணன் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டிஸ்கர் ..இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக நிலைமை கொஞ்சம் கவலைதான்... குஜராத் போல கடினமான போட்டு இருக்கும்... இந்த நேரத்தில் மத்திய பிரதேச முதல்வரை மாற்றுவது என்பது சரியாக இருக்காது..
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
22-ஜன-201811:08:09 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்நாடு முழுவதும் சங்கு சத்தம் கேட்கிறதே. காதில் விழவில்லையா?...
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
22-ஜன-201810:18:16 IST Report Abuse
balakrishnan மக்களுக்கு 12 வருஷம் கஷ்டம், உங்களுக்கு அடுத்த தேர்தலில் ஜெயிக்கணும்ங்குறது திட்டம், உங்களுடைய ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் அதிகாரம் எல்லாம் 2019 தோடு முடிவுக்கு வரும்,
Rate this:
Share this comment
Cancel
Veeran - Kanyakumari,இந்தியா
22-ஜன-201810:15:43 IST Report Abuse
Veeran கொஞ்சம் பொறுத்து தேர்தலுக்கு முந்தின நாள் மாத்தி இருக்கலாம் பிஜேபி அங்கே ஒன்னும் செய்ய முடியலன்னு கடைசிலே அவங்க வாஜுராயுத கலவரம் வெளிய எடுக்க போறாங்க
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
22-ஜன-201809:46:36 IST Report Abuse
Agni Shiva இது தவறான தகவல். பிரிதிவி சவுகான் எளிமையின் சின்னமாக திகழ்கிறார். சிலவேளை சைக்கிளில் தான் அலுவலகத்திற்க்கே வருகிறார். மூன்று முறை முதலமைச்சராக பதவி வகித்தபோதும் ஒரு ஊழல் குற்றசாட்டு கூட அவர் மீது இதுவரை சுமத்தியது இல்லை. கரையான் புற்றின் காலத்தில் நடந்திருந்த வியாபம் ஊழலில் இவரது பெயரை இழுத்து போட்டு அதன் மூலம் இந்த வழக்கில் இருந்து வெளியே வர பார்த்தார்கள், ஊழல்வாதிகள். நீதிமன்றமே அதை உறுதி செய்து திருடர்களை தண்டித்தது, இவர் பெயரை அந்த ஊழலில் சேர்த்ததற்காக கண்டனமும் செய்தது. இப்படிப்பட்ட ஒரு சிறந்த தலைவரை இழக்க மத்திய பிரதேஷ் ஒருபோதும் தயாராகாது அந்த தவறை பிஜேபி யும் செய்யாது.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
22-ஜன-201811:10:26 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்வியாபம் ஊழலில் இவரது பெயரை இழுத்து போட்டு.. ஆஹா.. வியாபமே இவர் தான். இவர் தான் வியாபம் என்று ம.பியில் ஒவ்வொருத்தனுக்கும் தெரியும்....
Rate this:
Share this comment
Cancel
22-ஜன-201809:36:27 IST Report Abuse
குவாட்டர் கோவிந்தன் எல்லாமே பிசெபி கைவிட்டு போவும்.. நடவடிக்கை சரி இல்லே நைனா.. நானு இந்துதா.. ஆனா இவனுவள போல வெறில இல்லே நைனா. நா படிச்சது அன்பு ஆதரவு ஒத்துமை.. இது இவனுவ கொள்கை கிடையாது... இந்துத்துவா கொண்ட நாடா பிரகடனப்படுத்த ஒழைக்கிறதும், அதுக்காக அடுத்தவனை பழி சொல்றதும் குத்தவாளியாவே பாத்து அவனுவள நோகடிக்கிறதுதா வேல..எனக்கு விருப்ப இல்லே நைனா....
Rate this:
Share this comment
Cancel
hasan - tamilnadu,இந்தியா
22-ஜன-201809:20:19 IST Report Abuse
hasan இவங்க 14 வருடம் இல்லை 140 வருடம் ஆட்சி செய்தாலும் முன்னேற போதில்லை, அது தான் பி ஜே பி யின் லட்சணம். குஜராத் ஏற்கனவே மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன் மும்பை கட்டுப்பாட்டில் இருந்ததால் காங்கிரஸ் காலத்திலேயே தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டுள்ளது தவிர அங்கேயும் கிராமப்புற பகுதிகள் இன்னும் முன்னேறம் இல்லை, அந்த ஒரு மாநில வளர்ச்சி படத்தையே பி ஜே பி இதுவரை ஒட்டி வந்துள்ளார்கள், இப்போது இவர்கள் சாயம் வெளுக்க ஆரம்பித்துள்ளது இன்னும் கூடிய விரைவில் பி ஜே பி என்ற பீடை அணைத்து மாநிலத்தை விட்டும் ஒழியப்போகிறது, மத்திய பிரதேச முதல்வர் மற்றும் பெரும்பாலான அமைச்சர்கள் வியாபம் ஊழலில் சிக்கி உள்ளனர் , இதை காங்கிரஸ் நன்றாக பயன்படுத்தி கொள்ள தவறி விட்டது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை