ஜெயலலிதா மரண தேதி: அமைச்சர் பேச்சால் சர்ச்சை - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., மரண தேதி: அமைச்சர் பேச்சால் சர்ச்சை

Added : ஜன 22, 2018 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
அ.தி.மு.க,A.D.M.K,  ஜெயலலிதா மரணம்,Jayalalithaa death,  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி , Minister Rajendra Balaji,  எம்.ஜி.ஆர்.,MGR,  அப்பல்லோ மருத்துவமனை,Apollo Hospital,  டாக்டர்கள், Doctors, நீதிபதி ஆறுமுகசாமி , Justice Arumugasamy,ஜெயலலிதா, Jayalalithaa,

ஜெயலலிதா மரணம் குறித்து, திவாகரனை தொடர்ந்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதும், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவில், திவாகரன் பேசுகையில், 'டிச., 4ம் தேதியே, ஜெ., இறந்து விட்டார்' என்றார். பின், 'தன் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது' எனக்கூறி, சமாளித்தார். இந்த சர்ச்சை முடிவதற்குள், விருதுநகரில், நேற்று முன்தினம் நடந்த, எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஜெ., மரணம் குறித்து பேசியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பொதுக்கூட்டத்தில், அவர் பேசியதாவது: மருத்துவமனையில், ஜெ., சேர்க்கப்பட்ட பின், அமைச்சர்கள் எல்லாம் மருத்துவமனையை சுற்றிச்சுற்றி வந்தோம். 'முதல்வர் நன்றாக உள்ளார்' என, டாக்டர்கள் கூறினர். ஆனால், கடைசியாக முதல்வரின் இறப்பு செய்தி, டிச., 4 மாலை, 5:20 மணிக்கு, அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து வந்தது.

நான் முதல்வரின் உதவியாளர் பூங்குன்றனை, மொபைல் போனில் அழைத்தேன். அவர் அழுது கொண்டே, முதல்வருக்கு, 'ஹார்ட் அரஸ்ட்' என, கூறினார். என்னிடம், 'எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு வாருங்கள்' எனக்கூறியதும், சந்தேகம் வந்துவிட்டது.முதல்வர் அறிவியல்பூர்வமாக, இறந்து கொண்டிருக்கிறார் என்றும், என்னிடம் கூறினர். நான் பால்வள துறை அமைச்சர் என்பதால், என்னிடம், 20 லிட்டர் பசும்பால் தயார் செய்யும்படி, 11:00 மணிக்கு கூறினர்.

அப்போது வரை, முதல்வர் இறந்தது எனக்கு தெரியாது. 'டீ போட பசும் பால் கேட்கிறீர்களா?' என, கேட்டேன்; இல்லை என்றனர். பின், ஜெ., இறந்த செய்தியை அறிவித்து விட்டனர்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.டிச., 5 மாலை, ஜெ., இறந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் நாளே இறந்துவிட்டதாக, அமைச்சர் பேசியுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


கமிஷன் விசாரிக்குமா? :



ஜெ., மரணம் குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி, ஆறுமுகசாமி தலைமையிலான கமிஷன், விசாரித்து வருகிறது. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில், ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்கள் தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அறிவித்ததற்கு, ஒரு நாள் முன்னரே, ஜெ., இறந்து விட்டதாக, திவாகரன், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எனவே, அவர்களை ஆறுமுகசாமி கமிஷன், விசாரணைக்கு அழைக்க வாய்ப்பு உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
22-ஜன-201817:08:42 IST Report Abuse
Pasupathi Subbian நம்ம ஊர் கோடாங்கி கிட்ட குறி கேட்கவேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
ram - chennai,இந்தியா
22-ஜன-201816:57:53 IST Report Abuse
ram உண்மை ஒருநாள் வெளிவந்தே தீரும்.. சசிகலா குடும்பத்துக்கு ஜெயில் காத்துட்டு இருக்கு
Rate this:
Share this comment
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
22-ஜன-201814:09:53 IST Report Abuse
anbu வர வர இந்தியாவில் பயித்தியக்காரர்கள் பெருகி விட்டார்கள் . உளறுவதும் பிறகு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று புரட்டுவதும் , மன்னிப்பு கோருவதும், தொடர் கதையாகி விட்டது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X