கடலில் தவிப்போரை மீட்கும், 'ட்ரோன்!'| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கடலில் தவிப்போரை மீட்கும், 'ட்ரோன்!'

Added : ஜன 25, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கடலில் தவிப்போரை மீட்கும், 'ட்ரோன்!'

ஆழ்கடலில் சிக்கி, கரைக்கு வர முடியாதவர்களைக் காப்பாற்ற, ஆஸ்திரேலியாவின் கடலோர காவல் அமைப்பினர் வெற்றிகரமாக, 'ட்ரோன்'களை பயன்படுத்தி உள்ளனர்.
அண்மையில், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் நீந்தப் போன இரு இளைஞர்கள், வெகு நேரமாகியும் கரைக்குத் திரும்பவில்லை.
இந்த தகவல் கிடைத்ததும், கடலோர காவல் பணியாளர்கள், புதிதாக வாங்கிய ஆளில்லாமல் பறக்கும் வாகனத்தை அனுப்பி, தேடல் பணியில் ஈடுபட்டனர்.
கரையிலிருந்து முக்கால் கி.மீ., தொலைவில் அந்த இளைஞர்கள் தத்தளிப்பதை, ட்ரோனில் இருந்த கேமரா மூலம் காவல் படையினர் கண்டறிந்தனர். உடனே, ஒரு பொத்தானை அழுத்தியதும், ட்ரோனிலிருந்து மிதவை ஒன்று, கடலில் இருந்த இளைஞர்களை நோக்கி விழுந்தது.
விழும்போதே அந்த மிதவை காற்று நிரம்பி விரிவடைந்து, கடலில் மிதந்தது. அதைப் பிடித்துக்கொண்டு, அந்த இரு இளைஞர்களும் பத்திரமாக கரைக்கு திரும்பினர்.
பேரிடர் காலங்களில், கடலில் சிக்கித் தவிப்பவர்களை மீட்க ட்ரோன்கள் ஒரு வழி என்று, நியூ சவுத்வேல்ஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த மீட்புப் பணிக்கு வெறும், 70 வினாடிகள் தான் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை